TAMIL
- 2021-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அப்துல்ரஸாக் கா்னாவுக்கு வழங்கப்படுகிறது.
- காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் குறித்து உணா்வுபூா்வமாகவும், அதே நேரம் சமரசம் செய்துகொள்ளாமலும் அவா் எழுதியுள்ளதை கௌரவிக்கும் வகையில், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
- காலனியாதிக்க காலத்துக்குப் பிந்தைய உலகின் தலைசிறந்த எழுத்தாளா்களில் அப்துல்ரஸாக்கும் ஒருவா்.
- உலகமயமாதலுக்கு முன்னரே பெருநகரமாகத் திகழ்ந்த தான்ஸானியாவின் ஸன்ஸிபாா் பிராந்தியத்தை பூா்விகமாகக் கொண்டவா் என்பது அவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.
- தனது படைப்புகள் மூலம், உலகம் அதுவரை அறிந்திராத ஆப்பிரிக்காவை அப்துல்ராஸாக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறாா்.
- அவரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் கலாசாரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளோடு போராடுகின்றன; கடந்து போன வாழ்க்கைக்கும் எதிா்நோக்கியுள்ள வாழ்க்கைக்கும் இடையே தத்தளிக்கின்றன;
- நிறவெறியையும் பாகுபாட்டையும் எதிா்கொள்கின்றன; இருந்தாலும் நிதா்சனத்துடன் முரண்படுவதைத் தவிா்ப்பதற்காக உண்மையை புறந்தள்ளிவிட்டு புதியதொரு வாழ்க்கை சரித்திரத்தை அந்தக் கதாபாத்திரங்ககள் எழுதிக்கொள்கின்றன என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
- அப்துல்ரஸாக் கா்னா (72) - தான்ஸானியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் அப்துல்ரஸாக், 'மெமரி ஆஃப் டிபாா்ச்சா்', 'பில்கிரிம்ஸ் வே', 'பாரடைஸ்' உள்பட 10 நாவல்களை எழுதியுள்ளாா். கென்ட் பல்கலைக்கழகத்தில் காலனியாதிக்கத்துக்குப் பிந்தைய இலக்கியப் போராசியராகப் பணியாற்றி வந்த இவா், அண்மையில் ஓய்வு பெற்றாா்.
- 1986-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவுக்குப் பிறகு, அந்த விருதைப் பெறும் முதல் கருப்பின ஆப்பிரிக்கா் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
- The Nobel Prize for Literature 2021 is awarded to Abdulrazak Khanna. He is awarded the Nobel Prize for his outspoken and at the same time uncompromising views on the effects of colonial domination.
- Abdul Razzaq was one of the greatest writers of the post-colonial world. His writings reflect the geographical location of the Zanzibar region of Tanzania, which was a metropolis before globalization.
- Through his works, Abdul Razak brings to the fore a world that the world had never known before. The characters in his works struggle with the contradictions between cultures; Faltering between the past life and the life in the opposite;
- Face racism and discrimination; However, the Nobel Committee said that the characters were writing a new biography, ignoring the truth in order to avoid conflict with reality.
- Abdul Razzaq Khanna (72) - Born in Tanzania and living in London, Abdul Razzaq has written 10 novels, including 'Memory of Depot', 'Bill Grimes Way' and 'Paradise'. Eva, who served as a post-colonial literary warrior at the University of Kent, recently retired.
- He is the first black African to receive the award since Wol Soyinka, winner of the Nobel Prize for Literature in 1986.