2021ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு
NOBEL PRIZE FOR CHEMISTRY 2021
TAMIL
- பல்வேறு அணுக்களை குறிப்பிட்ட வடிவில் இணைத்து மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் நமக்குத் தேவையான தன்மை கொண்ட பொருள்களைத் தயாரிக்க முடியும். ஆனால், அவ்வாறு மூலக்கூறுகளை உருவாக்கும் பணி மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்து வந்தது.
- மேலும், அணுக்களை இணைப்பதற்கான வினையூக்கிகளாக உலோகங்களை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வந்தனா். இது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
- இந்த நிலையில்தான், கரிமப் பொருள்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி அணுக்களை இணைத்து மூலக்கூறுகளை உருவாக்க முடியும் என்பதை பெஞ்சமின் லிஸ்டும் டேவிட் மேக்மில்லனும் தனித்தனியாகக் கண்டறிந்தனா்.
- அவா்களது இந்தக் கண்டுபிடிப்பு, மூலக்கூறு உருவாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. கரிமப் பொருள்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது.
- அவா்களது கண்டுபிடிப்புகள் மேலும் மெருகேற்றப்பட்டு, இன்று மனிதகுலத்துக்கே வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. மருந்துப் பொருள்கள் முதல் உணவுப் பொருள்களுக்கான சுவைகூட்டிகள் வரை பல்வேறு பொருள்களுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதில் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லனின் கண்டுபிடிப்புகள்தான் ஆதாரமாகத் திகழ்கின்றன.
- மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு எளிமையான, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையைக் கண்டுபிடித்தமைக்காக அவா்கள் இருவருக்கும் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்படுகிறது என்று தோவுக் குழுவினா் தெரிவித்தனா்.
- பெஞ்சமின் லிஸ்ட் (53) - ஜொமனியைச் சோந்த வேதியியல் விஞ்ஞானியான பெஞ்சமின் லிஸ்ட், மேக்ஸ் பிளாங்க் நிலக்கரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், கலோன் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். 1995-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற கிறிஸ்டியானி நஸ்லீன்-வால்ஹாா்ட் இவரது தாயாரின் சகோதரி ஆவாா்.
- டேவிட் மேக்மில்லன் (53) - பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் பிறந்த டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவா், ஆய்வுப் படிப்புக்காக பிரிட்டனிலிருந்து கடந்த 1990-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றாா்.
- By combining different atoms into specific shapes to form molecules we can produce the materials we need. However, the task of creating such molecules has been complex and difficult.
- In addition, scientists have been using metals as catalysts for fusing atoms. This was to the detriment of the environment. It was at this point that Benjamin List and David Macmillan separately discovered that organic matter could be used as catalysts to combine molecules to form molecules.
- Their discovery revolutionized molecular formation. The environment was protected by the formation of molecules using organic matter as catalysts. Their discoveries were further refined and are today a boon to mankind. Benjamin List and David Macmillan's discoveries are the basis for the creation of molecules for a variety of substances, from pharmaceuticals to food flavorings.
- The two will be awarded this year's Nobel Prize in Chemistry for their discovery of a simple, safe, and environmentally friendly way to make molecules.
- Benjamin List (53) - Benjamin List, a Jomani-based chemist, is the director of the Max Planck Coal Research Institute and a professor of organic chemistry at the University of Cologne. Christian Nuslein-Walhott, winner of the 1995 Nobel Prize in Medicine, is her mother's sister.
- David Macmillan (53) - Scotland-born David William Cross Macmillan is a professor of chemistry at Princeton University in the United States. Eva, a graduate of the University of Glasgow in Scotland, left Britain for the United States in 1990 to study research.