Type Here to Get Search Results !

விருதுநகர் கே.எஸ்.முத்துசாமி ஆசாரி / Virudhunagar KS Muthusamy Asari

 

TAMIL

  • கே.எஸ். முத்துசாமி ஆசாரியும் காமராஜரும் விருதுநகர் இரட்டையர்களாக விளங்கினார். ஒரே பள்ளியில் படித்தவர்கள். முத்துசாமியைவிட காமராஜர் இரண்டு வயது மூத்தவர். எனினும், அரசியலில் முன்னோடியாக விளங்கியவர் முத்துசாமி.
  • மதுரையில் 1923-இல் நடைபெற்ற கள்ளுக் கடை மறியலில் இருவரும் பங்கேற்றனர். அக்காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக விருது நகர் விளங்கியது. 
  • காங்கிரஸ் கூட்டங்களை நடக் கவிடாமல் செய்யும் முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டன. கொள்கை பலத்துடன் ஆள்பலமும் இருந்தால்தான் கூட்டமே நடத்த முடியுமென்ற நிலை இருந்தது.
  • இத்தகைய சூழலில் விருதுநகரில் மதுரை கிருஷ்ணசாமி பாவலரை அழைத்து பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அக்கூட்டத்தைச் சீர்குலைக்கச் சிலர் திட்டமிட்டிருந்ததை முத்துசாமி. காமராஜர் உள்ளிட்டோர் தெரிந்து கொண்டனர்.
  • கிருஷ்ணசாமி பாவலரை ஒரு வண்டியில் ஏற்றி இருவரும்இரண்டு பக்கங்களில் அமர்ந்தபடியே ஊர்வலம் அணிவகுத்தது. பாவலர் இருந்த வண்டியின் பின்னால் இன்னொரு வாகனம் பின்தொடர்ந்தது. 
  • அதில் கத்தி, வேல், கம்பு, அரிவாள் என்று ஆயுதங்கள் மட்டுமே ஏற்றப்பட்டிருந்தன. ஊர்வலம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. 
  • பாவலர் பேசுவதற்கு முன்உரையாற்றிய முத்துசாமியின் பேச்சு கலவரம் செய்து கூட்டத்தைக்கலைக்க முற்பட்டவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. 
  • அரசியலில் ஆழமும் தெளிவும் இருந்ததோடு இத்தகைய களச்செயல்பாடுகளிலும் கைதேர்ந்தவர்களாக இருவரும் திகழ்ந்தனர். வன்முறையைத் துளியும் விரும்பாத இவர்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காதவர்களாகவும் உறுதியுடன் செயலாற்றினர்.
  • உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற 1930-இல் முத்துசாமியின் 25-ஆம் வயதில் திருமணம் ஏற்பாடாயிற்று. விடுதலை இயக்கங்களில் முன்பிருந்தது போலவே தொடர்ந்து பணியாற்றத் தடையில்லை என்று பெற்றோரும் பெண் வீட்டாரும் உறுதியளித்த பின்னரே திருமணத்திற்கு ஒப்புதலளித்தார்,
  • திருமணம் 1930 ஜூன் 4-ஆம் தேதி கயத்தாறில் நடைபெற்றது. திருமணம் முடிந்து நான்காவது நாளில் விருதுநகருக்கு புறப்பட்டார். காந்தியடிகள் தண்டியில் ஜூன் 9-இல் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அதே நாளில் விருதுநகரில் அவசரக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து கண்டன உரையாற்றினார். 
  • மணமகனுக்குக் கட்டப்பட்ட கங்கணத்தை ஒரு வாரம் கழற்றக் கூடாதென்பது மரபு. கையில் கட்டியிருந்த கங்கணத்தோடு கைதான முத்துசாமி ஓராண்டு சிறை வைக்கப்பட்டார்.
  • 1932-இல் அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் ஓராண்டு சிறையிலிருந்தார். 1933-இல் 'சென்னை சதி வழக்கு' என்ற பெயரில் முத்துசாமி முதல் எதிரியாகவும் காமராஜர் இரண்டாவது எதிரியாகவும் சேர்க்கப்பட்டனர், பலமுறை சிறை சென்றுள்ளார் முத்துசாமி. 
  • 1937-இல் மாகாண காங்கிரஸ் செயலாளரானார். அடுத்த மாநாட்டில் சத்தியமூர்த்தி மாகாணத் தலைவரானபோது முத்துசாமியும் காமராஜரும் செயலாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ENGLISH
  • K.S. Muthusamy Acharya and Kamaraj were the Virudhunagar twins. Those who attended the same school. Kamaraj is two years older than Muthusamy. However, Muthusamy was a pioneer in politics.
  • Both took part in the 1923 toddy shop picket in Madurai. The award city was the stronghold of the Justice Party at the time.
  • Attempts were made by some to prevent congressional meetings from taking place. The situation was such that the meeting could only be held if there was manpower with policy strength.
  • In such an environment, they invited Krishnasami Pavalar from Madurai to Virudhunagar and organized a public meeting. Muthusamy said some people had planned to disrupt the meeting. Kamaraj et al.
  • Krishnasamy loaded Pavalar into a cart and the two of them sat on either side of the procession. Another vehicle followed behind the vehicle in which Powell was.
  • It was loaded with knives, machetes, rye, and sickles. The procession ended without any incident.
  • Muthusamy's speech, which preceded Powell's speech, caused a stir among those who tried to disrupt the meeting.
  • Both had depth and clarity in politics and were adept at such field operations. They did not want to resort to violence and acted with determination not to allow violence.
  • Muthusamy was married at the age of 25 in 1930 when the Salt Satyagraha took place. He agreed to the marriage only after his parents and housewife assured him that he would not be barred from continuing to work as he had before in the liberation movements.
  • The marriage took place on June 4, 1930 in Kayathar. He left for Virudhunagar on the fourth day after the marriage. On learning of Gandhiji's arrest on June 9 in Dandi, he organized an emergency meeting in Virudhunagar on the same day and addressed the protest.
  • It is customary not to remove the bracelet tied for the groom for a week. Muthusamy, who was arrested with a handcuffed bracelet, was jailed for one year.
  • In 1932 he was imprisoned for one year during the anti-foreign clothing movement. In 1933, under the name 'Chennai Conspiracy Case', Muthusamy was added as the first enemy and Kamaraj as the second enemy. Muthusamy has been imprisoned several times.
  • In 1937 he became secretary of the Provincial Congress. At the next conference, when Sathyamoorthy became the provincial president, Muthusamy and Kamaraj were elected secretaries.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel