TAMIL
- உலக அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சிறந்த சூழல் அமைந்துள்ள நகரங்களின் வருடாந்திரப் பட்டியலில் பெங்களூரு 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டைவிட அந்தப் பட்டியலில் பெங்களூரு 3 இடங்கள் முன்னேறியுள்ளது.
- சர்வதேச அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற பல்வேறு சூழல்களின் அடிப்படையில் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ் கோவைச் சேர்ந்த ஸ்டார்ட்டப் ஜினோம்' அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
- இந்த ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் புதுதில்லி 36-ஆவது இடத்தில் உள்ளது. மும்பை நகரம் வளர்ந்து வரும்சூழல் அமைப்புகளைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
- தொழில்முனைவுக்கான சிறந்த சூழலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னேறியிருப்பதற்கு, அந்த நகரில் முதலீடுகளின் வளர்ச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது.
- குறிப்பாக, உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்த நகரில் 130 கோடி டாலர் (சுமார் ரூ.9,594 கோடி) முதலீடு செய்துள்ளது. சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட் பெங்களூருவில் 50.2 கோடி டாலர் (சுமார் ரூ.3,706 கோடி) முதலீடு செய்துள்ளது.சிகல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூ இந்த நகரில் 46 கோடி டாலர் (சுமார்ரூ.3,396 கோடி) முதலீடு செய்துள்ளது.
- இந்தஆண்டின் முதல்பாதியில் இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் 1,210 கோடி டாலரை (சுமார் ரூ.89,275 கோடி) முதலீடாகப் பெற்றுள்ளதாக இந்தப் பட்டியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது.
ENGLISH
- Bangalore is ranked 23rd in the annual list of cities with the best environment for starting a business globally. As a result, Bangalore is 3 places ahead of last year in that list. The San Francisco-based Startup Genome 'organization annually publishes a list of cities based on a variety of contexts suitable for starting a business internationally.
- New Delhi ranks 36th in that list for this year. For the second year in a row, Mumbai has topped the list of cities with emerging ecosystems. Investment growth in Bangalore has played a key role in Bangalore's progress in the list of cities with the best environment for entrepreneurship.
- In particular, food delivery company Swiggy has invested $ 130 crore (approximately Rs 9,594 crore) in the city. Social media company ShareSat has invested $ 50.2 crore (approximately Rs 3,706 crore) in Bangalore.
- In the first half of this year, start-ups in India received investments of $ 1,210 crore (approximately Rs 89,275 crore), according to the list. Silicon Valley in the US state of California tops the list.