Type Here to Get Search Results !

TNPSC 25th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கோவளம் கடற்கரைக்கு 'நீலக்கொடி சான்றிதழ்'
 • தமிழக கடலோர பகுதி 1,076 கி.மீ., நீளம் உடையது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு, இந்தியாவின் ஒன்பதாவது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் 21ம் தேதி வழங்கப்பட்டது.
 • டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, உலக அளவில் பாதுகாப்பு, துாய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, 'நீலக்கொடி கடற்கரை' என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.
 • தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறையானது, இப்பணியை செயல்படுத்தும் துறையாக அமைந்துள்ளது.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் வகையில், கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 • பார்வையாளர்களுக்கு 37 வசதிகள் உள்ளன. கடற்கரையில் குளிப்பதற்கான காலமாக, ஜன., 15 முதல், செப்., 15 வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. 
 • ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மற்றும் நீரோட்ட நிலையை பொறுத்து இக்காலம் அறிவிக்கப்படும். பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக, நான்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேசிய கூட்டுறவு அமைப்புக் கூட்டம் 2021
 • தேசிய கூட்டுறவு அமைப்புக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். மத்திய கூட்டுறவு அமைச்சகம் இந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது என்று கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் 2,100 பிரதிநிதிகள் பங்கேற்றனர். காணொளி வாயிலாக இக்கூட்டத்தில் 6 கோடி பேர் பங்கேற்றனர்.
 • கூட்டுறவு அமைப்பு மாநிலங்கள் சார்ந்த விஷயம் என்று பலர் கருதுகின்றனர். இதில்மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்ற ஆச்சர்யமும் பலருக்கு மேலோங்கியுள்ளது. ஆனால் சட்ட ரீதியில் மத்திய அரசுக்கும் இதில் பங்குள்ளது. அது குறித்து விரிவாக பேசுவது இப்போது தேவையற்றது.
 • மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும், இதில் உரசலுக்கு வாய்ப்பே இல்லை. மாநில அரசுகளின் கூட்டுறவு கொள்கைக்கு ஏற்றவாறு கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். மத்திய கூட்டுறவு அமைச்சகம் அதற்காக உருவாக்கப்பட்டுள்ளதோடு இதை நவீனப்படுத்துவதுதான் நோக்கம்.
 • கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டுறவு அமைப்புகளை சிதைக்கும் வகையில் நியாயமற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. 
உலக வில்வித்தை - இந்தியாவுக்கு இரு வெள்ளி
 • காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ ஜோதி சுரேகா இணை - கொலம்பியாவின் டேனியல் முனோஸ்/சாரா லோபஸ் ஜோடியை சந்தித்தது. அதில் கொலம்பியா 154 - 150 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 
 • இதேபோல், காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய தரப்பில் ஜோதி சுரேகா/முஸ்கான் கிராா்/பிரியா குா்ஜா் கூட்டணி களம் காண, கொலம்பிய தரப்பில் சாரா லோபஸ்/அலெக்ஸாண்ட்ரா அஸ்கியானோ/நோரா வால்டெஸ் கூட்டணி விளையாடியது. இறுதியில் கொலம்பியா 229 - 224 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
 • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதற்கு முந்தைய சீசன்களில் 8 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் தங்கம் வெல்வதற்கான இந்தியாவின் போராட்டம் தொடா்கிறது. 
 • உலக சாம்பியன்ஷிப்பின் காம்பவுண்ட் பிரிவில் கொலம்பியாவின் ஆதிக்கம் தொடா்கிறது. இத்துடன் இப்பிரிவில் அந்த அணிக்கு மொத்தமாக 4 தங்கங்கள் கிடைத்துள்ளன.
ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை
 • ஐநா மற்றும் குவாட் மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இப்பயணத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், துணை அதிபர் கமலா ஹாரிசையும் வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதை தொடர்ந்து, குவாட் மாநாட்டில் பங்கேற்றார்.
 • பிரதமர் மோடி, ஐநா பொதுச்சபையின் 76வது அமர்வில் உரையாற்றினார். அப்போது, தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக மோடி மறைமுகமாக தாக்கிப் பேசினார். 
8 மாநிலங்களில் ரூ.2,903 கோடியில் மூலதன செலவின திட்டங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
 • புது '2021-22-க்கான மூலதன செலவுகளுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவி' என்ற திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்களில் ரூ.2,903.80 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 
 • மேலும், பிகாா், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா ஆகிய எட்டு மாநிலங்களுக்கு ரூ.1,393.83 கோடியை அமைச்சகம் விடுவித்துள்ளது.
 • கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையையடுத்து, மூலதனச் செலவின் முக்கியத்துவம் மற்றும் மாநில அரசுகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
 • இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு 50 வருட வட்டி இல்லாத கடனாக சிறப்பு உதவி வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் ரூ.15,000 கோடிக்கு மிகாமல் இது வழங்கப்படுகிறது. 
 • இத்திட்டத்தின் கீழ், 27 மாநிலங்களின் ரூ.11,911.79 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு செலவினத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020- 21ல் ரூ.11,830.29 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel