ஆப்கான் தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு, இடைக்கால பிரதமராகிறார் முல்லா ஹசன் அகுந்த்
- ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறப்போவதாக அமெரிக்க படைகள் அறிவித்த நிலையில், அங்கு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். கடந்த மாத இறுதியில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர்.
- சமயத் தலைவர் என்பதைவிட, ராணுவ தளபதியாக அறியப்பட்ட ஹசன் அகுந்த், தற்போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் தலிபான் குழுவின் தலைவராக உள்ளார்.
- பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட, முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முல்லா அப்துல் கனி பரதர்.
- இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் பெயரில் எழுதுகோல் விருது
- சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது', ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்றும், இளம் பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முப்படைகளுக்கான நிதி அதிகாரம் கொள்கை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
- ராணுவத்தில் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான நிதி அதிகாரம் பல்வேறு உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அத்துடன், விமானப்படை மற்றும் கடற்படைக்கும் இதை விரிவுபடுத்தும் புதிய கொள்கையை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
- ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆயுதக் கொள்முதல் குழு உள்ளது.
- இதைத் தவிர அந்த தடவாளங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் போன்றவற்றை வாங்குவதற்காக, ராணுவ உயரதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் கொள்கை 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது.
- தற்போது இந்த அதிகாரம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு புதிய கொள்கையை, ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். அதன்படி ராணுவ துணைத் தளபதி உள்ளிட்டோருக்கு, இந்த நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது.
- ஏற்கனவே உள்ள நிதி அதிகாரம், 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகபட்சம், 500 கோடி ரூபாய் வரையே செலவிட முடியும். இதைத் தவிர, விமானப் படை மற்றும் கடற்படைக்கும் இந்த அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- 'அவசர நிலை, கள நிலவரத்துக்கு ஏற்ப படைப் பிரிவு தளபதிகள் உடனடியாக முடிவு எடுக்க இந்த புதிய கொள்கை உதவும்
பிரதமர் மோடி அறிமுகம் காது கேட்காதவர்களுக்கு சைகை மொழி அகராதி, பார்வையற்றோருக்கு பேசும் ஆடியோ புத்தகம்
- உலகளாவிய கற்றல் வடிவமைப்புக்கு இணங்க இந்திய சைகை மொழி அகராதி (காதுகேளாதோருக்கான ஆடியோ மற்றும் எழுத்துக்கள் அடங்கிய சைகை மொழி வீடியோ), பேசும் புத்தகங்கள் (பார்வையற்றோருக்கான ஆடியோ புத்தகங்கள்) மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் உள்ளிட்ட கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- 'ஷிக்ஷாக் பர்வ்' என பெயரிடப்பட்ட இத்திட்டத் தொடக்க விழா, காணொலி வாயிலாக நடந்தது. அந்த வகையில் ஆடியோ புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் இன்று கல்வியின் ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளன.
- இந்திய சைகை மொழி முதல் முறையாக பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது'' என்றார். இந்திய சைகை மொழி அகராதியில் 10 ஆயிரம் வார்த்தைகளுக்கு சைகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.