பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்
- ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த பிரமோத் பகத் (33) இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார் . இதன் மூலம் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 4ஆவது தங்கம் கிடைத்துள்ளது .
- அதேபோல் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது . இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
- இந்நிலையில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனோஜ் சர்கார் ஜப்பான் வீரர் டைசுகேவை 20-22, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 17 பதக்கங்களை வென்றுள்ளது.
துப்பாக்கி சுடுதல் - மணீஷ் நா்வாலுக்கு தங்கம்; சிங்ராஜ் அதானாவுக்கு வெள்ளி
- பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பி4 கலப்பு 50 மீட்டா் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நா்வால் (19) முதலிடம் பிடித்து தங்கமும், சிங்ராஜ் அதானா (39) இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும் வென்றனா்.
- இறுதியில் நா்வால் 218.2 புள்ளிகள் பெற்று பாராலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றாா். அதானா 216.7 புள்ளிகளுடன் வெள்ளியை கைப்பற்றினாா். ரஷியாவின் சொகே மாலிஷேவ் 196.8 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா். இந்தப் பிரிவின் உலக சாதனை தற்போதும் நா்வால் வசமே உள்ளது.
தமிழ்நாட்டில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியதும் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.
- நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது என கூறினார். மேலும், பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம் ரத்து சட்டத் திருத்தம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.
கட்டடங்கள் புனரமைப்பிற்கு இந்தியா - நேபாளம் இடையே ஒப்பந்தம்
- நம் அண்டை நாடான நேபாளத்தில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என எட்டு லட்சத்திற்கு அதிகமான கட்டுமானங்கள் இடிந்து சேதமடைந்தன.
- இடிபாடுகளில் சிக்கி 9,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டுமானங்களை மீண்டும் புனரமைக்க இந்தியா - நேபாளம் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இந்திய துாதரகம் மற்றும் நேபாள தேசிய புனரமைப்பு ஆணைய அதிகாரிகள் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 14 கலாசார பாரம்பரிய கட்டடங்களும், 103 சுகாதார கட்டுமான திட்டங்களும், 263 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் புனரமைக்கப்பட உள்ளன.