Type Here to Get Search Results !

TNPSC 3rd SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நாடு முழுவதும் 68 உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்த கொலிஜியம்

  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் குழு, கடந்த ஒன்றாம் தேதி கூடி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் 112 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. 
  • இறுதியில், சென்னை, அலகாபாத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 உயர் நீதிமன்றங்களில் 68 நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதில் 44 பேர் வழக்கறிஞர்கள் ஆவர். 24 பேர் நீதிபதி பணியில் உள்ளவர்கள்.
  • இவற்றில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் நான்கு பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகியோர் நீதிபதிகளாகின்றனர். 
6வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு (இஇஎப்) மாநாடு
  • ஆண்டுதோறும் கிழக்கு பொரு ளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும். நேற்று நடைபெற்ற 6-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு (இஇஎப்) மாநாட்டில் காணொலி வாயிலாகபங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
  • இரு நாடுகளிடையிலான நட்புறவு எரிசக்தி துறையில் சர்வதேச அளவில் ஸ்திரமான நிலையை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளிடையிலான நட்புறவு மிகவும் வலுவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியதற்கு சமீபத்திய உதாரணம் கரோனா கால கட்டமாகும். 
  • மருந்து தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் நட்புடன் செயல்பட்டுள்ளன. எரிசக்தித் துறையும் மிக முக்கியமான துறை யாகும். இந்தத் துறையிலும் இரு நாடுகளிடையிலான நட்புறவின் பலம் வெளிப்படும். இதன் மூலமாகத்தான் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரமான சூழல் நிலவுகிறது.
  • இந்திய வரலாறு மற்றும் நாகரிக வளர்ச்சியில் சங்கமம் என்ற வார்த்தைக்கு சிறப்பு அர்த்தம் உள்ளது. ஒன்றாக இணைதல் அல்லது ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைவதை சங்கமம் என்று குறிப்பிடுவர். 
  • அதைப் போல எனது பார்வையில் சங்கமம் என்பது ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் விளாடிவோஸ்டோக் சங்கமமாகத் திகழ்கிறது. 

எழுத்தாளர் பாலபாரதிக்கு 'பால சாகித்ய அகாடமி விருது'

  • சிறுவர் இலக்கிய துறையில் பங்களிப்பு செய்து வரும் எழுத்தாளர்களுக்கு, சாகித்ய அகாடமி நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மொழியிலும், 'பால சாகித்ய அகாடமி விருது' வழங்கி வருகிறது.
  • இதில், தமிழ்ப் பிரிவில், 2020ம் ஆண்டுக்கான விருது, 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற, இளையோர் நுாலை எழுதிய எஸ்.பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்.பி.,யாக முகமது அப்துல்லா தேர்வு

  • ராஜ்யசபாஎம்.பி., பதவிக்கு, தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து, 2019 ஜூலையில் அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மரண மடைந்தார்.அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.பி., பதவி காலியானது.

போர் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய அதிநவீன டிரோன்கள் தயாரிக்க இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்

  • பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் நடவடிக்கையின் கீழ், இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே வலுப்பெற்று வருகிறது.
  • இதன் அடிப்படையில், இந்தியாவை தனது முக்கியமான ராணுவ வர்த்தக கூட்டாளியாக அங்கீகரித்து கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. 
  • இந்நிலையில், வான் பாதுகாப்பு அமைப்பு கூட்டு செயற் குழு திட்டத்தின் கீழ் திட்ட ஒப்பந்தம் கடந்த ஜூலை 30ம் தேதி கையெழுத்தானது. பாதுகாப்பு உபகரணத்தை கூட்டாக உருவாக்குவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டுறவை வலுப்படுத்த இந்த ஒப்பந்தத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
  • இந்த திட்டம், நிலம், கடல், வான்வெளி மற்றும் விமானம் தாங்கி போர்க் கப்பல்களுக்கான தொழில்நுட்பங்கள், பரஸ்பர ஒப்பந்த திட்டங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. 
  • விமானத்தில் இருந்து, ஆளில்லா போர் விமானத்தை இணைந்து தயாரிப்பதற்கான திட்ட ஒப்பந்தம் இதன் மிக முக்கியமான சாதனை ஆகும். 
  • இத்திட்டத்தின் கீழ், ஆளில்லா போர் விமானத்தின் மாதிரியை இணைந்து உருவாக்குவதில், இந்திய விமானப்படை ஆய்வு கூடம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை வடிவமைப்பு, உருவாக்கம், செய்முறை விளக்கம், பரிசோதனையில் கூட்டாக செயல்பட உள்ளது. 
  • இத்திட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தியதில் டிஆர்டிஓ.வின் ஏரோநாடிக்கல் வளர்ச்சி மையம், விமானப்படை ஆய்வு மையத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் இயக்குனரகம், இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஆகியவை முக்கிய காரணமாக இருக்கின்றன.

பாரா ஒலிம்பிக்கில் 2வது பதக்கம் அவனி அபார சாதனை

  • டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்த அவனி (19 வயது), நேற்று 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் (ஆர்8) பங்கேற்றார்.
  • பைனலில் அவனி 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சீன வீராங்கனை ஸாங் குயிபிங் (457.9) முதலிடம் பிடித்து தங்கமும், ஜெர்மனி வீராங்கனை ஹில்ட்ராப் நடாஷா 457.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளியும் வென்றனர்.

வெண்கலம் வென்றார் ஹர்விந்தர்

  • ஆடவர் தனிநபர் (72 ஏரோ ஆர்ஆர்) தரவரிசை சுற்றுப் போட்டியில் ஹர்விந்தர் 21வது இடம் பிடித்தார். 
  • 3வது இடத்துக்கான மோதலில் நேற்றிரவு கொரிய வீரர் சூ மின் கிம்மை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் 37வது இடத்தில் உள்ளது. 

உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் பிரவீன்

  • பாரா ஒலிம்பிக்கில் முதல் முறையாகக் களமிறங்கிய பிரவீன் குமார் (18 வயது), ஆடவர் உயரம் தாண்டுதல் (டி44) போட்டியில் பங்கேற்றார்.
  • மொத்தம் 7 வீரர்கள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டிய இறுதிச் சுற்றில் பிரவீன் 2.07 மீட்டர் உயரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

"கடற்பசு பாதுகாப்பகம்" 

  • தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு "கடற்பசு பாதுகாப்பகம்" மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும்
  • மேலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக் கடற்பகுதியில் காணப்படும் கடற்பசு என்பது மிக அரிய வகை கடல்வாழ் பாலூட்டியாகும். கடல்மாசு மற்றும் கடல் கடற்புல் அழிக்கப்படுவதால் இந்த இனம் அழிவை சந்தித்து வருகிறது. 
  • இதை பாதுகாக்கும் பொருட்டும் இந்தியாவில் முதல் முறையாக "கடற்பசு பாதுகாப்பகம் " இப்பகுதியில் சமூகப்பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் நாட்டின் வளமையான கடல் வாழ் உயிர்ப்பன்மை பாதுகாப்பிற்கு இக்காப்பகம் உதவி புரியும்

வ.உ.சி. பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி. பெயர் வைக்கப்படும் வ.உ.சி. எழுதிய புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வ.உ.சி. நினைவு நாளான நவம்பர் 18-ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும். 
  • கப்பல் சார்ந்த துறையில் சிறந்து விளங்கும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்'' உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு
  • விஜயா வாசகர் வட்டம், சக்திமசாலா நிறுவனம் வழங்கும் 2021-ஆம் ஆண்டுக்கான "கி.ரா.விருதுக்கு" எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • புகழ்பெற்ற வங்கமொழி எழுத்தாளரா புத்ததேவ் குஹா காலமானார். இவர் "மதுகரி”, "ஜங்கல்மஹால்”, "சோரோய்பேடி" உள்ளிட்ட பல சிறந்த வங்கமொழி நூல்களின் ஆசிரியர் ஆவார்.
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது
  • 93,719 டன் சுண்ணாம்புக்கல் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. சரக்கு பெட்டகங்களை பொருத்தவரையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது.
விருதுநகரில் ரூ.400 கோடியில் ஆடைப் பூங்கா
  • விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா உருவாக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அகரத்தில் 13 அடுக்கு உறை கிணறு கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், அகரத்தில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழாய்வில் 13 அடுக்கு உறை கிணறு கண்டெடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel