விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
- மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
- மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் உணவு பாதுகாப்புக்கு எதிரானது என்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்தார்.
- இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம்
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
- இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தோதலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை - ஜொமனியில் கூட்டணி ஆட்சி அமைகிறது
- ஜொமன் நாடாளுமன்றத் தோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு 16 ஆண்டு காலம் பிரதமராக இருந்துவரும் ஏஞ்சலா மொகெல் இந்தத் தோதலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த 2018-ஆம் ஆண்டே அறிவித்துவிட்டாா்.
- மொத்தம் உள்ள 735 இடங்களில் பெரும்பான்மை பெறுவதற்கு 368 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சோஷலிஸ்ட் டெமாக்ராடிக் கட்சிக்கு 206 இடங்களும், யூனியன் பிளாக் கட்சிக்கு 196 இடங்களும், கிரீன்ஸ் கட்சிக்கு 118 இடங்களும் கிடைத்துள்ளன.
அனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம் - டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
- மக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விபரங்கள் அனைத்தையும், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைத்து, உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
- 43 கோடி பேர்உடல் நலன் குறித்த கையடக்க ஆவணமாக கருதப்படும் இந்த திட்டம், சோதனை அடிப்படையில் ஆறு யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது நாடு முழுதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
- ஆகாஸ் பிரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வடிவமைத்துள்ளது. ஒடிசாவின் சந்திப்பூரில் இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
- ஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து அழித்தது.
டாடா நிறுவனம் ஒப்பந்தம் - 2,100 கோடியில் சென்னை எல்லைச்சாலை திட்டம்
- சென்னையை ஒட்டிய பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- எனவே, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வராமலேயே செல்ல சென்னை எல்லைச் சாலையை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இச்சாலை, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் இருந்து எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் 133 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது.
- இதன் முதல்கட்டமாக ரூ.2,100 கோடியில் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை ஆந்திர மாநில நெடுஞ்சாலை ஏஎச்45 வழியாக 6 வழி வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது.
ராட் லேவர் கோப்பை - ஐரோப்பா சாம்பியன்
- அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வந்த ஒற்றையர், இரட்டையர் என மொத்தம் 15 ஆட்டங்கள் நடந்ததில், 14 ஆட்டங்களில் வென்ற ஐரோப்பிய அணி இந்த முறையும் கோப்பையை வசப்படுத்தியது.
- உலக தரவரிசையின்படி ஐரோப்பிய அணியில் 2 முதல் 10 ரேங்க் வரை உள்ளவர்களும், உலக அணியில் 11 - 22 ரேங்க் உள்ளவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டுக்கான லாவர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறும்.
போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
- போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்ய சேலத்தைச் சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்ற எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.