Type Here to Get Search Results !

TNPSC 1st SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளம் தொடக்கம் - காஷ்மீர் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும்

  • ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான சாதக அம்சங்களைக் கொண்ட தொழில் கொள்கை தற்போது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே உள்ளது என்று காணொலி வாயிலாக இணையதளத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் குறிப்பிட்டார். 

ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ1.12 லட்சம் கோடி

  • தொடர்ந்து 2வது மாதமாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் ஜிஎஸ்டி வசூல் ரூ1.12 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம். தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 35 சதவீதம் அதிகரித்து ரூ7,060 கோடி கிடைத்துள்ளது.
  • கடந்த ஜூலை மாதம் ரூ1.16 லட்சம் கோடி வசூலானது. ரூ1,12,020 கோடியில், ஒன்றிய ஜிஎஸ்டி ரூ20,522 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ26,605 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ56,247 கோடி, செஸ் ரூ8,646 கோடி அடங்கும். 

உலகிலேயே உயரமான சாலை இந்தியாவில் திறப்பு

  • கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலை தான் உலகிலேயே உயரமான சாலை. தற்போது அதைவிட 220 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை இனி உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமையை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய ராணுவத்தின் 58 என்ஜினீயர் பிரிவு அமைத்துள்ள இந்த சாலை, கேலா கணவாய் வழியாக செல்கிறது. லே முதல் பாங்காங் ஏரி வரையிலான தூரத்தில் 41 கி.மீ. குறைக்கிறது. அதன்படி, இந்த சாலை திறக்கப்பட்டுள்ளது.

அடல் ஓய்வூதிய திட்டம்

  • இந்திய அரசின் உத்தரவாதம் பெற்ற அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2021-22 நிதியாண்டில் 28 லட்சத்திற்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் 25 நிலவரப்படி 3.30 கோடியை கடந்துள்ளது.
  • தமிழ்நாட்டை பொருத்தவரை, இது வரை மொத்தம் 24,55,438 பேர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, அதிகம் பேர் இணைந்துள்ள 11 மாநிலங்களில் தமிழகம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.
  • உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், பிஹார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன.
  • 2021 ஆகஸ்ட் 25 வரையிலான மொத்த உறுப்பினர்களில், 78 சதவீதம் பேர் ரூ 1000 ஒய்வூதிய திட்டத்தையும், 14 சதவீதம் பேர் ரூ 5,000 ஒய்வூதிய திட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பெண்களாக உள்ளனர். சுமார் 44 சதவீதம் பேர் 18-25 வயதுடைய இளம் வயதினர் ஆவர்.
  • அடல் ஓய்வூதிய திட்டத்தின் செயலியில் சமீபத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அடல் ஓய்வூதிய திட்டத்தின் மக்கள் சாசனம் மற்றும் தகவல் குறிப்பேடு 13 பிராந்திய மொழிகளில் தற்போது கிடைக்கிறது.

அகில இந்திய ஆயுர்வேத கழகத்தில் ஊட்டசத்து பூங்கா அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்

  • மாதம் முழுவதும் நடத்தப்படும் 'போஷன்' திட்ட நிகழ்ச்சிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.

'இஸ்கான்' நிறுவனர் சுவாமி பிரபுபாதா பிறந்த தினம், ரூ.125 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

  • ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) சுவாமி பிரபுபாதா நிறுவினார். உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பி வரும் இஸ்கான், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர இலக்கிய நூல்களை 89 மொழிகளில் அமைப்பு மொழிபெயர்த்துள்ளது.
  • வேத இலக்கிய நூல்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.சுவாமி பிரபுபாதா சுமார் 100 கோயில்களை நிறுவியுள்ளதுடன், உலகிற்கு பக்தி பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது 125வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது.
  • இதையொட்டி பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக பிரபுபாதா உருவம் பொறிக்கப்பட்ட ரூ. 125 நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல்

  • சீனி, பால்மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.
  • இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • இதன்படி, செட்பம்பர் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை அறிவிப்பு
  • ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைமத்திய அரசுகடந்த2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ரத்து செய்தது. அந்த மாநிலத்தையும் ஜமமு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான விலங்கு மற்றும் பறவை அறிவிக்கப்பட்டுள்ளன. 
  • யூனியன் பிரதேசத்தின் வனம், சுற்றுச்சூழல் துறை தலைமைச் செயலர் பவண் கோத்வால் இது தொடர்பானஅறிவிப்பை வெளியிட்டார்.
  • முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது மாநில விலங்காக காஷ்மீர் மான், பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலம் இப்போது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, தனக்கான விலங்கு மற் றும் பறவையை லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்துள்ளது.
‘கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்படும்'
  • கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
  • மாநில மகளிர் கொள்கை சமுதாயத்தில் பெண்கள் மேலான நிலையை அடையவும் அரசியலில் வாய்ப்புப் பெறவும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் மாநில மகளிர் கொள்கை புதிதாக உருவாக்கப்படும்.
தாவரத்தைக் கொண்டு காற்றை தூய்மைப்படுத்தும் கருவி கண்டுபிடிப்பு
  • பஞ்சாப் மாநிலம், ரூப்நகர் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) இளம் விஞ்ஞானிகள் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவுகளின் ஆசிரியர்கள் ஆகியோர், வாழும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட காற்றை தூய்மைப்படுத்தும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • ‘யூ பிரீத் லைஃப்’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற உள்பகுதி இடங்களில் காற்றைத் தூய்மைப்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel