Type Here to Get Search Results !

உலக வங்கி உதவியுடன் RIGHTS என்ற முன்மாதிரி திட்டம் / RIGHTS SCHEME FOR PHYSICALLY CHALLENGED PEOPLE

 

TAMIL
  • உலக வங்கி உதவியுடன் RIGHTS என்ற முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்த அறிவிப்பில், இத்திட்டம் நமது நாட்டில் மட்டுமின்றி உலகிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டமாகும். 
  • அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் பயன்களை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் விடுபடாமல் பெறும் பொருட்டு மாநிலத்தின் வட்டார மற்றும் உட்பிரிவு நிலை வரை துறையின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த இத்திட்டம் வழிவகை செய்கின்றது. ஆறு ஆண்டுகளில் ரூ .1702 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள்
  • மாற்றுத் திறனாளிகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்காக நிலையான வழிமுறைகளை உருவாக்குதல். தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் செயலாக்கம் குறித்து வரையறுத்தல். பதிவு செய்யவும் சான்றளிக்கவும் வழிமுறைகளை உருவாக்குதல். தகவல் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள், தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலை வாய்ப்பு ஆகியவை சென்றடைவதை உறுதி செய்தல்.
  • மாற்றுத்திறனாளிகளின் பின்னடைவு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், சமூகம் சார்ந்த மறுவாழ்வுப் பணிகள், உபகோட்ட தலைமையிடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட மறுவாழ்வுப் பணிகள், வட்டார தலைமையிடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையங்கள், நடமாடும் சிகிச்சை வாகனங்கள், தடையற்ற உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் இச்சேவைகள் சென்றடைவதை உறுதி செய்ய நிதி ஆதாரத்தை ஏற்படுத்துதல்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவன திறன் மேம்படுத்துதல், செயல்படுத்துதல், திட்ட செயலாக்கம், திட்ட செயல்பாட்டிற்கான வழிமுறைகள், மனித வளத்தை உறுதிப்படுத்த மேலாண்மைத் திட்டம், நடைமுறையை உருவாக்குதல், நிதி மேலாண்மை நடைமுறை உருவாக்குதல், மனித வளத்தை மேம்படுத்த பயிற்சி அளித்தல் என நான்கு முக்கிய அம்சங்களை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. 
ENGLISH
  • The RIGHTS pilot project will be implemented with the assistance of the World Bank. In this announcement, this project is the first pilot project to be implemented not only in our country but also in the world.
  • The scheme paves the way for expanding the activities of the department to the regional and subdivision level of the State so that all the alternatively abled can avail the benefits of all the schemes implemented by the Government. The project is expected to be implemented in six years at an estimated cost of Rs 1702 crore.
The four main features of the project
  • Develop sustainable mechanisms for early detection and integration of alternative talents. Defining the implementation of projects currently in practice. Creating Registration and Certification Instructions. Creating an information management plan.
  • Ensuring access to preventive care and rehabilitation services for the disabled, vocational education, self-sufficiency and employment.
  • Improving the resilience and productivity of the disabled, community-based rehabilitation work, integrated rehabilitation work at sub-divisional headquarters, maintenance facilities with all facilities at regional headquarters, mobile treatment vehicles, uninterrupted infrastructure, housing, transportation and financial support to ensure access to these services.
  • The program covers four key areas: organizational capacity building, implementation, project implementation, project implementation mechanisms, human resource stabilization management plan, practice development, financial management practice development, and human resource development training for the alternatively abled.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel