Type Here to Get Search Results !

TNPSC 14th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சியாச்சின் பனிமலையில் 15,632 அடி உயரம் ஏறி உலக சாதனை படைத்த துணிச்சல் மிக்க மாற்றுத்திறனாளிகள் குழு
  • மாற்றுத்திறனாளிகள் அடங்கிய இவ்வளவு பெரிய குழு உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் ஏறி சாதனை படைத்துள்ளது இதுவே முதல் முறை. "ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்" (Operation Blue Freedom) என்று இந்த சாதனை பயணத்திற்கு பெயரிடப்பட்டு இருந்தது. 
  • சியாச்சின் base camp -ல் இருந்து ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் பயணம் துவங்கியது. ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் பயணத்தை மாற்று திறனாளிகள் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று துவக்கி செப்டம்பர் 12-ம் தேதி மலையுச்சியை (15,632 அடி) அடைந்ததன் மூலம் வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறார்கள். 
  • சியாச்சின் பனிப்பாறையில் 15,632 அடி உயரத்தில் குமார் போஸ்ட்டை 8 மாற்று திறனாளிகள் அடைந்ததன் மூலம் மாபெரும் உலக சாதனை படைக்கப்பட்டதாக இந்திய ராணுவத்தின் Northern Command, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறது.
ஆப்கனுக்கு ரூ.9,000 கோடி உலக நாடுகள் நிதியுதவி
  • ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம், ஆப்கன் - பாக்., எல்லை ஆகியவற்றில் கூடிஉள்ளனர். இது தவிர ஏராளமானோர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துஉள்ளனர். 
  • இவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் முகாம்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டிஉள்ளது. இதையடுத்து, ஆப்கன் மக்களின் துயரம் குறித்து ஆராய, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐ.நா., சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.
  • ஆப்கனில் 1.10 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா., அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் 4,750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இது தவிர, ஆப்கன் மக்களின் துயர் தீர்க்க, உறுப்பு நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளன. 
கேரளா உட்பட 11 மாநிலங்களுக்கு ரூ.15,721 கோடி கூடுதல் கடன் - மத்திய அரசு
  • மத்திய நிதி அமைச்சகத்தால் 2021 - 22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை ஆந்திரா, பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் எட்டியுள்ளன.
  • அம்மாநிலங்களுக்கு ஊக்கத்தொகையாக கூடுதலாக ரூ.15,721 கோடி கடனாகப் பெற, மத்திய நிதி அமைச்சக செலவினத்துறை அனுமதி அளித்துள்ளது.
  • மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் உதவிகரமாக இருக்கும். கூடுதல் கடனைப் பெறுவதற்கு 2021-22ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 45 சதவீதத்தை இரண்டாவது காலாண்டிலும் 70 சதவீதத்தை மூன்றாவது காலாண்டிலும், மார்ச் 31, 2022ல் 100 சதவீத இலக்கையும் மாநிலங்கள் அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அலிகரில் ராஜா மகேந்திர சிங் பெயரில் புதிய பல்கலை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் 
  • அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.
  • தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், மாநில அரசால் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது.
  • அலிகரின் கோல் டெஹ்சிலின் லோதா கிராமம் மற்றும் முசேபூர் கரீம் ஜரௌலி கிராமத்தில் மொத்தம் 92 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. அலிகார் பிரிவில் இயங்கும் 395 கல்லூரிகளுக்கு இந்த பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளிக்கும்.
  • அலிகார், ஆக்ரா, கான்பூர், சித்ரகூட், ஜான்சி மற்றும் லக்னோ ஆகிய 6 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலிகாரில் நில ஒதுக்கீடு நடைமுறை நிறைவடைந்து 19 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தப்பகுதியில் ரூ. 1245 கோடி முதலீடு செய்யும்.
மோரீஷஸ் நாட்டு கடலோர காவல் படைக்கு இந்திய கடற்படையின் டார்னியர் விமானம்
  • மோரீஷஸ் தேசிய கடலோர காவல் படைக்கு, மீட்புப் பணி, தேடல், கண்காணிப்பு, கரோனா நோய்த்தொற்று அவசரகாலப் பணிகள் போன்றவற்றில் ஈடுபட குறைந்த வேகத்தில் செல்லும் டார்னியர் விமானம் தேவைப்பட்டது. இந்திய பாதுகாப்புப் படைகளில் வெற்றிகரமாகச் செயல்படும் இந்த டார்னியர் விமானத்தை மோரீஷஸ் கோரியது.
  • இதைக் கருத்தில் கொண்டு இந்தியக் கடற்படையால் மோரீஷஸ் நாட்டின் காவல் துறைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு விமானம் வழங்கப்பட்டுள்ளது. மோரீஷஸ் நாட்டில் திங்கள்கிழமை (செப்.13) நடைபெற்ற நிகழ்ச்சியில் பயணியர் ரக டார்னியர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தின் முதல் கரோனா மரபணு ஆய்வகம் திறப்பு
  • தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கரோனா தீநுண்மியை கண்டறிய ஆய்வகம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அத்தகைய ஆய்வகம் அமைக்கப்பட்டது. அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். 
உத்தரகண்டில் மிகப் பெரிய திறந்தவெளி பெரணி பண்ணை 
  • நாட்டின் மிகப்பெரிய "திறந்தவெளி பெரணிச்செடி” பண்ணை (India’s largest open air Fernery) உத்தரகண்டில் அமைக்கப்பட்டுள்ளது. அல்மோரா மாவட்டத்தின் ராணிகேட் பகுதியில் 4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பண்ணையை உத்தரகண்ட் வனத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது. 
  • 120 வகையான பெரணிச் செடிகள் இந்தப் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel