Type Here to Get Search Results !

தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் / RANKING LIST OF HIGHER EDCATION INSTITUTIONS ON INDIA

TAMIL 

  • மத்திய கல்வித்துறை சார்பில் தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நாடு முழுதும் இருந்து மொத்தம் 1657 நிறுவனங்கள் இதில் பங்கேற்று உள்ளன.
  • முதல் 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
  • இன்ஜினியரிங் பிரிவில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. நிறுவனம் 2ம் இடம் பெற்றுள்ளது. 
  • மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.க்கள் முறையே மூன்று முதல் எட்டாம் இடங்களை பெற்றுள்ளன. டில்லி ஜே.என்.யூ ஒன்பது, வாரணாசி பனாரஸ் பல்கலை 10ம் இடத்தையும் பெற்றுள்ளன.
  • சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் 15 வகையான பிரிவுகளில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அதில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இந்த நிலையை எட்டியுள்ளது.
  • புதிய ஆராய்ச்சிகள், மாணவர் சேர்க்கை, மாற்று திறனாளிகளுக்கான வசதி போன்றவற்றில் சராசரியாகவும் பொருளாதாரம் மற்றும் சமூக அடிப்படையில் சவால்களை சந்திக்கும் மாணவர்களை அதிகம் சேர்த்துள்ள பிரிவில் குறைந்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
  • பாரதியார் 'டாப்'தேசிய அளவிலான 'டாப் - 100' பிரிவில் தமிழகத்தில் உள்ள 19 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் மஹாராஷ்டிரா, மேற்கு வங்க கல்வி நிறுவனங்கள் அதிகமாக பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
  • இந்த பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. கல்லுாரி 23ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி பல்கலை 87ம் இடம் பெற்றுள்ளது.அரசு பல்கலைகளில் கோவை பாரதியார் பல்கலை முன்னிலையுடன் 22ம் இடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலை 25; சென்னை 47; அழகப்பா 57; காமராஜ் பல்கலை 83; திருச்சி பாரதிதாசன் 90ம் இடங்களை பெற்று பின்னடைவை சந்தித்துஉள்ளன.
  • தமிழக அரசின் மற்ற பல்கலைகள் 'டாப் - 100' பட்டியலில் இடம் பெறவில்லை.அம்ரிதா அபாரம்தேசிய அளவிலான 'டாப் - 100' பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் பல்கலை 12ம் இடமாக முன்னிலை பெற்றுள்ளது.
  • வேலுார் வி.ஐ.டி. - 21; தஞ்சை சாஸ்த்ரா 42; சவீதா பல்கலை 49; எஸ்.ஆர்.எம். 53; சத்யபாமா 61; கலசலிங்கம் 74; பாரத் பல்கலை 75; ராமச்சந்திரா 79; கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி 86; கடைசியாக எஸ்.எஸ்.என். இன்ஜினியரிங் கல்லுாரி 89ம் இடத்தில் உள்ளன.
  • முன்னிலையில் உள்ள அம்ரிதா நிறுவனம் 100க்கு 35 மதிப்பெண்களும் கடைசியில் உள்ள எஸ்.எஸ்.என். 100க்கு 10 மதிப்பெண்களும் பெற்றுள்ளன. 
  • உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் செயல்திறன்களை தெரிந்து கொண்டு சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை தொடர வசதியாக தேசிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
மருத்துவத்தில் எய்ம்ஸ் முதலிடம்
  • மருத்துவ கல்லுாரிகளுக்கான பிரிவில் டில்லி எய்ம்ஸ் முதலிடம் பெற்றுள்ளது. சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.ஆர். வேலுார் சி.எம்.சி. கல்லுாரி ஆகியன முறையே 2 3ம் இடங்களை பெற்றுள்ளன. 
  • புனேவில் உள்ள பாட்டீல் வித்யாபீடம் சென்னை சவீதா பல்கலை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. சட்ட கல்லுாரிகள் பிரிவில் பெங்களூரு தேசிய சட்ட கல்லுாரி முதலிடம் பெற்றுள்ளது
பல்கலைகளுக்கான பட்டியலில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி
  • டில்லி ஜே.என்.யூ. மற்றும் வாரணாசி பனாரஸ் பல்கலைகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. பாரதியார் 14; அண்ணா பல்கலை 16ம் இடங்களில் உள்ளன. அழகப்பா 33; பாரதிதாசன் 57; மனோன்மணியம் சுந்தரனார் 70; பெரியார் 73ம் இடத்தில் உள்ளன
கல்லுாரிகளுக்கான பட்டியல்
  • கல்லுாரிகளுக்கான பட்டியலில் டில்லி மிரண்டா ஹவுஸ் ஸ்ரீராம் பெண்கள் கல்லுாரி சென்னை லயோலா கல்லுாரி ஆகியன முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. 
  • தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் என 33 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரி 6; பிரசிடென்ஸி என்ற சென்னை மாநில கல்லுாரி 7ம் இடத்தையும் பெற்றுள்ளன.
ENGLISH
  • Performance-based ranking list of higher education institutions at the national level has been released on behalf of the Central Department of Education. A total of 1657 companies from across the country are participating in it.
  • Chennai IIT tops list of top 100 companies Hat-trick for the third time in a row. It has topped the engineering category for the sixth consecutive year. The company is ranked 2nd. IITs in Mumbai, Delhi, Kanpur, Kharagpur, Roorkee and Guwahati are ranked third to eighth respectively. Delhi JNU is ninth and Varanasi Banaras University is 10th.
  • Chennai IIT The company received 97 marks out of 100 in 15 categories. It has reached this stage by getting high marks in the poll conducted among industry and academics. New research, on average, in terms of student enrollment, facilities for the alternatively abled, and low scores in the category that has added the most students who face challenges economically and socially.
  • Bharathiyar 'Top' 19 companies in Tamil Nadu are in the 'Top-100' category at the national level. Maharashtra and West Bengal are next on the list. This list includes Trichy NIT. The college is ranked 23rd. The University of Pondicherry is ranked 87th. 
  • Coimbatore Bharathiyar University is ranked 22nd among government universities. Anna University 25; Chennai 47; அழகப்பா 57; Kamaraj University 83; Trichy Bharathidasan is in 90th position and has suffered a setback.
  • Other universities of the State of Tamil Nadu are not included in the 'Top-100' list. Vellore VIT - 21; Tanjore Shastra 42; Savita University 49; SRM 53; Satyabhama 61; Kalasalingam 74; Bharat University 75; Ramachandra 79; Coimbatore PSG College of Technology 86; Finally S.S.N. College of Engineering is ranked 89th.
  • The leading Amrita company scored 35 out of 100 and the last SSN. Also received 10 marks out of 100. A national ranking list has been published to facilitate students to pursue their degree by joining the best educational institutions knowing the research and performance of higher education institutions.
Medicine
  • The Delhi Aims topped the category for medical colleges. Chandigarh BGIMR Vellore CMC The college is ranked 2nd and 3rd respectively. Patil Vidyapeedam in Pune has secured the first three places in Savita University, Chennai. Bangalore National College of Law has topped the list of law colleges
Bangalore IISC tops list of universities
  • Delhi JNU And Varanasi Banaras University are in the top three. Bharatiyar 14; Anna University is in 16th place. Alakappa 33; Bharathidasan 57; Manonmaniyam Sundaranar 70; Periyar are ranked 73rd
List for colleges
  • Delhi Miranda House Shriram Women's College, Chennai and Loyola College, Chennai topped the list of colleges respectively. There are 33 government and private colleges in Tamil Nadu. Coimbatore PSGR Krishnammal Women's College 6; Chennai State College, also known as Presidency, is ranked 7th.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel