TAMIL
- இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரண்டுமே அளவில் பெரியவை மற்றும் பெரிய மக்கள் தொகை கொண்டவை. இரண்டு நாடுகளுமே வேகமாக வளர்ந்து வருகின்றன.
- ஆனால் ஒலிம்பிக் போட்டி என்று வரும்போது, சீனாவுடன் ஒப்பிடுவது இந்தியர்களுக்கு தலைகுனிவான விஷயமாக உள்ளது.
- டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை காணப்படும் போக்கு முந்தைய ஒலிம்பிக்கைப் போலவே இருக்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் அதேநேரம் இந்தியா , பட்டியலின் கடைசியிலிருந்து 5 வது இடத்தில் உள்ளது.
- அந்த கசப்பான உண்மை என்னவென்பதை ஊகிப்பது கடினமாக இல்லை. விளையாட்டோடு தொடர்புடையவர்கள் சொல்வது என்னவென்றால், நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டிலும் யாருக்குமே சிறப்பு ஆர்வம் இல்லை.
- டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு, இந்தியா தனது 121 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் 28 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. அதில் ஒன்பது, தங்கப் பதக்கங்கள். அவற்றில் எட்டு ஹாக்கியில் கிடைத்தவை.
- 1900 இல் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் முறையாக பங்கேற்று இரண்டு பதக்கங்களை வென்றது. இந்தியாவைப் போலல்லாமல் சீனா, 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாக பங்கேற்றது. ஆனால் டோக்கியோவுக்கு முன்பாக, 217 தங்கப் பதக்கங்கள் உட்பட 525 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது.
- இதுவரை டோக்கியோவில் அதன் செயல்திறன் ஒலிம்பிக் சூப்பர் பவர் போலவே இருக்கிறது. சீனா 2008 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை பெய்ஜிங்கில் நடத்தியது. 100 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும் பெற்றது.
- அரசு தலைமையிலான ஒட்டுமொத்தத்திட்டம்.
- மக்களின் பெரும் பங்கேற்பு
- ஒலிம்பிக் வாரியாக இலக்கு அமைத்தல்.
- ஹார்ட் வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டிலும் வலிமை
- திறமை கண்டுபிடிப்பு மற்றும் ஊக்குவிப்பு வழிமுறை
- பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு
இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?
- விளையாட்டு கலாச்சாரம் குறைவாக இருப்பது
- குடும்ப-சமூக ஒருங்கிணைப்பு இல்லாதது
- அரசுகளுக்கு முன்னுரிமை இல்லை
- விளையாட்டு கூட்டமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல்
- விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் சரியான உணவு இல்லாதது.
- ஊழல் மற்றும் உறவினர்களுக்கு தனிச்சலுகை
- வறுமை காரணமாக, விளையாட்டுக்கு முன் வேலைக்கு முன்னுரிமை அளித்தல்
- India and China are neighbors. Both are large in size and large in population. Both countries are growing fast. But when it comes to the Olympics, comparisons with China are a nod to Indians.
- The trend seen so far in the ongoing Olympics in Tokyo is similar to the previous Olympics. While China is one of the top five countries in the medal list, India is 5th from the bottom of the list.
- It is not difficult to guess what that bitter truth is. Those associated with the sport say that no one in the country has a special interest in any sport other than cricket. Ahead of the Olympics in Tokyo, India has won only 28 medals in its 121-year Olympic history. Nine of them, gold medals. Eight of them were found in hockey.
- India competed for the first time in the 1900 Olympics in Paris and won two medals. Unlike India, China participated in the 1984 Los Angeles Olympics for the first time. But before Tokyo, it has won more than 525 medals, including 217 gold medals.
- So far its performance in Tokyo is similar to the Olympic Super Power. China hosted the 2008 Olympics in Beijing. Also topped the medal table with 100 medals.
- Government-led overall plan.
- Great participation of the people
- Olympic-wise goal setting.
- Strength in both hardware and software
- Talent discovery and promotion algorithm
- Integration between the public and private sectors
What is the reason for India's failure?
- Sports culture being low
- Lack of family-community integration
- Governments have no priority
- The politics of dominance in sports federations
- Lack of sports infrastructure and proper diet.
- Corruption and privilege for relatives
- Prioritizing work before sports due to poverty