ஒலிம்பிக் பேட்மிண்டன் - வெண்கல பதக்கம் வென்றார் பிவி சிந்து
- ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து - சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர் மோதினர்.
- மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என்ற எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர்.
- இதனால் இரண்டாவது செட் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் அற்புதமாக விளையாடிய பிவி சிந்து 21 - 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
பி அண்ட் ஜி குளோபல் சிஓஓ-வாக இந்தியர் சைலேஷ் நியமனம்
- பிராக்டர் அண்ட் கேம்பிள் (பி அண்ட்ஜி) நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக (சிஓஓ) சைலேஷ்ஜெஜுரிகர் (54) நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தப் பதவியைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
- மும்பையில் பிறந்த இவர், ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்தார். ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ தொழில் மேலாண்மை பட்டம் பெற்றார்.
ஜூலையில் ஜிஎஸ்டி வரி ரூ.1.16 லட்சம் கோடி வசூல்
- ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இதில், ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.22,197 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.28,541 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.57,864 கோடி (ரூ.815 கோடி இறக்குமதி வரியுடன்).
- இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்படுகையில் 33% அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.87,422 கோடி மட்டுமே வசூலானது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி வருவாயும் கடந்தாண்டு (32%) விட 4% உயர்ந்துள்ளது.