Type Here to Get Search Results !

TNPSC 9th AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஓபிசி பிரிவினரை கண்டறிய மீண்டும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்

  • ஓபிசி பிரிவினரை தாங்களே அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சாசனத்தின் 127வது திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், 
  • எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைக்கும் அனுமதியை நாடாளுமன்றத்துக்கு வழங்கவும் இம்மசோதா வகை செய்கிறது.

லடாக்கில் மத்திய பல்கலை. அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

  • லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

விவசாயிகளுக்கு 9வது தவணை நிதி வழங்கினார் பிரதமர்

  • 'பிரதமர் விவசாயிகள் நிதியுதவி' திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு ஒன்பதாவது தவணையாக 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
  • இந்த நிதியத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேனீ வளர்ப்பு திட்டம் அமலான பின், ஏராளமான விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. அதிக அளவில் தேன் ஏற்றுமதி நடக்கிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மோடி உரை கடல் வழி பாதுகாப்புக்கு 5 முக்கிய கொள்கைகள்

  • ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடல் வழி பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான 5 முக்கிய கொள்கைகளை முன் வைத்தார். 
  • ஐநா.வின் அதிகாரம் மிக்க பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இந்தியா சமீபத்தில் தேர்வானு. 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. 
  • இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி, ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அதன்படி, இம்மாதம் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது.
  • இதனால் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். இதன் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
  • 'கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதலில் சர்வதேச ஒத்துழைப்பு' பற்றி நடந்த விவாதத்தில், காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: கடல்சார் பகுதிகள் தொடர்ந்து பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது. 
  • கடல்சார் வழித்தடங்கள் நாடுகளின் தனிப்பட்ட தேவைக்கும், தீவிரவாதத்திற்கும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். கடல் வழி பாதுகாப்பை பொறுத்தவரையில் 5 முக்கிய கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.
  • சட்டப்படியான கடல்சார் வர்த்தகத்துக்கு இடையூறாக இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும். சர்வதேச நாடுகளின் வளர்ச்சி தடையற்ற கடல்சார் வர்த்தகத்தை சார்ந்துள்ளது. கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் தடை உலக பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
  • கடல்வழி வர்த்தகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இதனால் பரஸ்பர நம்பிக்கை வளரும். இதன் மூலம் மட்டுமே உலக அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
  • இயற்கை பேரிடர்கள், உறுப்பினரல்லாத நாடுகளால் ஏற்படும் கடல்சார் அச்சுறுத்தல்களை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து எதிர்த்துப் போராட வேண்டும். இந்த விவகாரத்தில், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • கடல்சார் சூழல் மற்றும் கடல் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • கடல்சார் ஒத்துழைப்பை உறுதியுடன் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாட்டிலேயே முதல் முறை; தமிழ்நாட்டில் பழங்குடிகள் பிரச்னைகளை தீர்க்க கட்டணமில்லா ஹெல்ப்லைன் அறிமுகம்

  • திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி ஆதிதிராவிடர் நல சங்கம் மற்றும் நாவா அமைப்பின் மூலம் Tribal Help Line கட்டணமில்லாத தொலைபேசி இணைப்பு மூலம், பழங்குடியின மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க 1800 4251 576 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் , இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel