வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; நடப்பு ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5% - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கணிப்பு
- நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரெபோ விகிதம் 3.35 சதவீதமாகவும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
- நுகர்வோர் பொருள் அடிப்படையிலான பண வீக்கம் கடந்த நிதிஆண்டில் (2020-21) 5.7 சதவீதமாக இருந்தது. இது வரும் நிதி ஆண்டின் (2022-23) முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும், அவ்விதம் கட்டுகள் வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்பிஐ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- ஜூன் மாதத்துடன் முடிந்த மாதத்தில் நுகர்வோர் பொருள் அடிப்படையிலான பணவீக்கம் 6.3 சதவீதமாக உள்ளது. உணவுப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் உறைகிணறு இரும்பு வாள் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் 4 குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
- அதில், ஒரே குழியில் ஒரு 30 செமீ உயரமுள்ள 3 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் 46 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. அகரத்தில் நேற்று உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறைக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் - பிரதமர் அறிவிப்பு
- இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் வீரர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவாக ராஜிவ் கேல் ரத்னா என்ற பெயரில் 1991ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தயான்சந்த் உலகின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஹாக்கி மட்டையையும் பந்தையும் கொண்டு களத்தில் மாயாஜாலம் செய்வதில் தன்னிகரற்றவராக புகழப்படுபவர் தயான்சந்த்.
- 1928, 1932, 1936 என 3 ஒலிம்பிக்குகளில் தயான்சந்த் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. தயான்சந்தை கவுரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.