TAMIL
- நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 இனிதே நிறைவடைகிறது.
- 53 பெண்கள் 68 ஆண்கள் என 121 பேர் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது இந்தியா.
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம் (26) பங்கேற்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச் முறையில் 87 கிலோவும், கிளீன் அன்டு ஜெர்க் முறையில் 115 கிலோவும் தூக்கினார்.
- மொத்தம் 202 கிலோ தூக்கி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்தார். அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். சீனாவின் ஹு ஜிஹுய் மொத்தமாக 219 கிலோ தூக்கி தங்கம் வென்றார். கூடவே ஸ்நாச் முறையில் 94 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
- இந்தோனேஷியாவின் ஐசா காண்டிகா 194 கிலோ தூக்கி வெண்கலத்தை கைப்பற்றினார். மீராபாயின் வெற்றியின் மூலம், இந்தியா முதல் பதக்கத்தை வென்றதுடன் பதக்கப்பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.
- ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து - சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர் மோதினர்.
- மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என்ற எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர்.
- இதனால் இரண்டாவது செட் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் அற்புதமாக விளையாடிய பிவி சிந்து 21 - 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
- இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
- ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியின் வெல்ட்டர் வெய்ட் (64-69 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- இந்தியா வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் முடிவுக்கு வர இந்தியா 5-4 என்ற கோல கணக்கில் வெற்றிப் வெற்றது. நீண்டநாட்களாக ஹாக்கியில் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவும் நிறைவேறியது.
- போட்டியில் 3வது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் 12வது பதக்கம் வென்ற இந்திய அணி
- ஒலிம்பிக்கில் ஆடவர் 57கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்திய வீரர் ரவிகுமார், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவூர் உகுவை எதிர்கொண்டார். பைனலில் ரஷ்யாவின் ஜாவுரிடம் 4-7 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- 65 கிலோ எடைப் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரர் தவ்லத் நியாஸ்பெக்கோவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா.
- இறுதியில் 8-0 என்ற புள்ளி கணக்கில் வென்று நடப்பு ஒலிம்பிக் தொடரில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 3-வது வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தார்.
- ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
- ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
- டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
ENGLISH
- The Olympic Games, an international sports festival in which the nations of the world participate every four years, ends on August 8. For the first time in the history of the Olympics, India has set a new record by winning a total of 7 medals, including one gold, two silver and four bronze.
- It is also the first time for India to win 7 medals in a single Olympics.
- In the women's 49 kg weight category, India's Mirabai Sanu Saikom (26) competed. He lifted 87 kg in the snatch and 115 kg in the clean and jerk at the end of the game. He lifted a total of 202 kg and placed 2nd in the competition. Thereby capturing the silver medal. China's Hu Jihui won gold by lifting a total of 219 kg. He also set a new Olympic record by lifting 94 kg in the snatch.
- Indonesia's Isa Kandika lifted 194kg and captured the bronze. With the victory of Mirabai, India won the first medal and also made it to the medal table.
- The competition for the bronze medal in the women's badminton category at the Olympics was held today. In this, PV Sindhu of India and Hibi Jia of China clashed. India's PV Sindhu easily won the first set 21-13 in a very aggressive match. But the two fought hard to capture the next set.
- Thus the second set went briskly. But PV Sindhu, who played brilliantly, defeated the Chinese player 21-15. Following this, he won a bronze medal in badminton at the Tokyo Olympics and added pride to India.
- Indian wrestler Lovelina Borgohein won the bronze medal in the welterweight (64-69 kg) category at the Olympic Women's Wrestling Championships.
- India faced Germany in the match for the bronze medal. India won the match 5-4. India's long-held dream of winning a medal in hockey has also come true. India, who finished 3rd in the competition, won the bronze medal. The Indian team that won the 12th medal in Olympic hockey after about 41 years
- The men's 57 kg wrestling final was held at the Olympics. In it, Indian athlete Ravi Kumar faced Russian Olympic Committee member Javur Uku. In the final, he lost 4-7 to Russia's Javar and won the silver medal.
- In the 65 kg weight category, Bajrang Punia faced Kazakhstan's Tawlat Nyaspeko for the bronze medal. He eventually won 8-0 to give India their 3rd bronze medal in wrestling in the current Olympic series.
- The 2020 Olympic Games are being held in Tokyo, the capital of Japan. India's Neeraj Chopra won the gold medal in javelin throw at the Tokyo Olympics today. Neeraj Chopra wins first gold medal for India at Tokyo Olympics
- This is the second gold medal India has won in the individual category in Olympic history. Neeraj Chopra has won the first gold medal for India in the men's javelin final at the Tokyo Olympics, throwing a distance of 87.58 meters.