மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடக்கம்
- தமிழகத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு மாதந்தோறும் மருந்து மாத்திரை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- வயதானவர்களும், நோயாளிகளும் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் நோயாளிகளின் நலன் கருதி 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- வீடுகளுக்கே நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி பகுதியில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்தேதியிட்டு வரி விதிக்கும் சட்டத்தை நீக்க மசோதா
- முன்தேதியிட்டு வரி விதிக்கும் சட்டம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது (2012) கொண்டுவரப்பட்டது. இது மூலதன ஆதாயம் திரட்டிய நிறுவனங்கள் மீது முன்தேதியிட்டு வரி வசூலிக்க வழிவகைசெய்தது.
- இதனால் கெய்ர்ன் எனர்ஜி மற்றும் வோடபோன்குழும நிறுவனங்களுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து இந்நிறுவனங்கள் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்டன.
- இந்நிலையில், வரி விதிப்பு (சட்டம்) மசோதா 2021-ஐ மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இது வருமான வரிச் சட்டம் 1961-ல்திருத்தம் மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் முன்தேதியிட்டு வரிவசூல் செய்வதைத் தடுக்கவும் வகை செய்யும்.
- இதன்படி 2012-ம் ஆண்டு மேமாதத்துக்கு முன்பு மறைமுகமாக பரிவர்த்தனை செய்யப்பட்ட இந்திய சொத்துகள் மீது விதிக்கப்பட்ட வரி, சில நிபந்தனைகளின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்படும். இதன் மூலம் கெய்ர்ன், வோடபோன் நிறுவனங்கள் பயனடையும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இ-பட்ஜெட்
- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதலாவது நிதி நிலை அறிக்கை வரும் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் இ- பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இ- பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை செயலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
- இந்த கூட்டத் தொடரில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கை வாசிக்கும் போது, அதை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் கணினி மூலம் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- காகிதமில்லாத பேரவை அமையப் பெற்றாலும், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த 5 நிமிடத்திற்கு பிறகு புத்தகங்களும் வழங்கப்படும்
- இ-பட்ஜெட்டை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில முதன் முறையாக இ-பட்ஜெட் மட்டுமின்றி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதும் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்
- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்,அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
- அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
385 ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது - தமிழ்நாடு அரசு
- டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.
- அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.
ஹாக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்தியா
- வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் முடிவுக்கு வர இந்தியா 5-4 என்ற கோல கணக்கில் வெற்றிப் வெற்றது. நீண்டநாட்களாக ஹாக்கியில் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவும் நிறைவேறியது.
- போட்டியில் 3வது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் 12வது பதக்கம் வென்ற இந்திய அணி
- ஒலிம்பிக்கில் ஆடவர் 57கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்திய வீரர் ரவிகுமார், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவூர் உகுவை எதிர்கொண்டார். பைனலில் ரஷ்யாவின் ஜாவுரிடம் 4-7 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.