TAMIL
- 'இந்தியாவில் 2021-ம் ஆண்டில் முதியவர்கள்' என்ற தலைப்பிலான ஆவணத்தை மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டது.
- நாட்டில் தற்போது கேரளமாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள்தொகை யில் முதியவர்களின் பங்கு 16.5சதவீதம்.
- அடுத்த இடத்தில் தமிழகத்தில் முதியவர்களின் அளவு 13.6 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இமாச்சல் (13.1%), பஞ்சாப் (12.6%), ஆந்திரா (12.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- இதேபோல, நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பிஹார் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவீதமாக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரபிரதேசம் (8.1%), அசாம் (8.2%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
- வரும் 2031-ல் அதிக பட்சமாக கேரளாவில் 20.9 சதவீத முதியவர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் 18.2%, இமாச்சலில் 17.1%, ஆந்திராவில் 16.4%, பஞ்சாபில் 16.2% என்ற வீதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும் என இந்த புள்ளிவிவர ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அங்கு வளர்ந்த பொருளாதாரம், மருத்துவ வசதிகள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். அதே சமயத்தில், குழந்தை பிறப்பு விகிதம் குறைவதும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ENGLISH
- The Ministry of Statistics released a document titled 'Older Persons in India by 2021'. Kerala currently has the highest number of elderly people in the country. The elderly make up 16.5 percent of the population.
- Tamil Nadu is next with 13.6 percent of the elderly. It is followed by Himachal Pradesh (13.1%), Punjab (12.6%) and Andhra Pradesh (12.4%). Similarly, Bihar tops the list of states with the lowest number of elderly people in the country.
- The elderly make up 7.7 percent of the population. It is followed by Uttar Pradesh (8.1%) and Assam (8.2%). By 2031, Kerala will have a maximum of 20.9 per cent elderly people. Tamil Nadu has 18.2%, Himachal 17.1%, Andhra Pradesh 16.4% and Punjab 16.2%.
- The high number of elderly people in the state is a sign that there is a developed economy and medical facilities. At the same time, the declining birth rate is said to be one reason for the increase in the number of older people.