தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வெளியாகியுள்ளது.
- இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை), அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
'12பி' அந்தஸ்து பட்டியலில் இடம் பெற்றது தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்
- ஆசிரியா் கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியா்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசின் சாா்பில் தொடக்கப்பட்டது.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படி, 12பி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி, கல்வி சாா்ந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும்.
- யுஜிசி.யின் 551-ஆவது நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்தை வழங்கி யுஜிசி.யின் 12பி அந்தஸ்து வழங்கப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தை சோத்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரதமராக அப்துல் கயூம் நியாஸி தோவு
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற மாகாணப் பேரவைத் தோதலில் அப்பாஸ்பூா்-பூஞ்ச் தொகுதியில் அப்துல் கயூம் நியாஸி போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
- இந்நிலையில் 53 உறுப்பினா்களை கொண்ட மாகாணப் பேரவையில் பிரதமரை தோவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அப்துல் கயூம் நியாஸிக்கு ஆதரவாக 33 போ வாக்களித்தனா்.
- இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் அவா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக தோவு செய்யப்பட்டாா்.
'போக்சோ' விரைவு நீதிமன்றங்கள்' நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த போக்சோ நீதிமன்றங்கள் 2023ம் ஆண்டு மார்ச் வரை செயல்பட 1,572 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 971 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடும். மாநில அரசுகளின் பங்கு 601 கோடி ரூபாயாகும். அதை நிர்பயா நிதியில் இருந்து செயல்படுத்தலாம்.
- இதைத் தவிர, 'சமக்ர சிக் ஷா அபியான்' எனப்படும் முழுமையான கல்வி இயக்கம் திட்டத்தை 2026ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்காகும் 2.94 லட்சம் கோடி ரூபாயில், மத்திய அரசு தன் பங்காக 1.85 லட்சம் கோடி ரூபாயை செலவிடும்.
- இந்த திட்டத்தால் 11.6 லட்சம் பள்ளிகள், 15.6 கோடி மாணவர், 57 லட்சம் ஆசிரியர் பயன்பெறுவர். பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் இந்த திட்டத்தின் கீழ், மாணவரின் கற்கும் திறனை அதிகரிப்பதே இலக்காகும்.
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராக திமுக எம்பி தயாநிதி மாறன் நியமனம்
- ஒன்றிய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி.யுமான தயாநிதி மாறன், 'தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா' தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியின் வெண்கல பதக்கம் வென்றார் லவ்லினா
- ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியின் வெல்ட்டர் வெய்ட் (64-69 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் சோதனை ஓட்டம்
- இந்திய கடற்படைக்காக இப்போர் கப்பல், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 25.6 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பல் என்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது.
- கப்பலின் வடிவமைப்பு பணிகள் 1999-ல் தொடங்கியது. 2009-ல் கப்பலின் அடித்தளம் அமைக்கப்பட்டது. படிப்படியாக பணிகள் நிறைவடைந்து 2020 டிசம்பரில் அடிப்படை சோதனைகள் முடிவடைந்தன. இந்நிலையில் ஆக., 04 தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் விக்ராந்த் துவங்கியது.
- நிறவெறிக்கு எதிரான புதிய பிரிவு ஒன்றை அமைப்பதற்கான தீா்மானத்தை 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிரிக்க வம்சாவளியினரின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு அந்த அமைப்பு பாடுபடும்.
- கடந்க 2015 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கான ஆண்டுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிறவெறிக்கு எதிரான தனிப் பிரிவு தொடங்கப்படுகிறது.
- உலகின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி என்னும் சிறுமியை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தேர்ந்தெடுத்து உள்ளது.