Type Here to Get Search Results !

TNPSC 27th AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் இ-ஷ்ரம் தொடக்கம்
  • நாட்டில் உள்ள முறை சாரா பணியாளர்களுக்கு உதவ இ-ஷ்ரம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் முறை சாரா பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கென தனி யாக 12 இலக்க எண் அடங்கிய அட்டை வழங்கப்படும் 
  • இந்த இணையதளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளை தொழிலாளர் அமைச்சகம், மாநில அரசு மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மேற்கொள்ளும். பதிவு செய் துள்ள தொழிலாளர்களுக்கு 12 இலக்க அட்டை இலவசமாக அளிக்கப்படும். 
  • இது நாடு முழுவதும் செல்லுபடியாகும். ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இதில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் வங்கி கணக்கு எண் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். 
  • இதை ஒருங்கிணைக்க தொழிலாளர் அமைச்சகம் கட்டணமில்லா 14434 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
  • இதில் பதிவு செய்த அனைத்து பணியாளர்களுக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு வசதி ஓராண்டுக்கு கிடைக்கும். இத்திட்டத்தில்கீழ் பணியின்போது உயிரிழப்பு நேர்ந்தால் ரூ.2 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக சிறப்புத் திட்டங்கள் - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
  • இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது, இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.
  • இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழக ஆளுநராக இருந்து வரும் பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் செயல்படுவார்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. 
புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக ஜான்குமார் தேர்வு
  • முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக காமராஜ் நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்தார். அதன்படி அவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக சிசிடிவி கேமரா கொண்ட நகரங்கள்
  • பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களால் பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடிகிறது மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. 
  • அந்த வகையில், அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை 'போர்ப்ஸ் இந்தியா' ஊடகம் வெளியிட்டுள்ளது. 
  • ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகப்பட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் இந்த மிகுந்த கண்காணிப்பு நகர பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன.
  • அடுத்ததாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளன. 
  • அந்த வகையில் 194 கேமராக்களுடன் நியூயார்க் 14வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel