Type Here to Get Search Results !

சூரியனுக்கு மிக அருகாமையில் வேகமாக சுழலும் 'சிறுகோள்' - 2021PH27 / The Fastest orbiting 'Asteroid' very close to the Sun - 2021PH27

TAMIL
  • சூரியக் குடும்பத்துக்கு உள்ளே மற்றும் வெளியே எண்ணிலடங்கா சிறுகோள்கள் இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது கண்டுபிடிக்கும்போது வானியலாளர்களுக்கு வியப்பு ஏற்படும். 
  • அந்தவகையில், புதன் கோளை விட மூன்று மடங்கு நெருக்கமாக, வேகமாக சுழலும் சிறுக்கோள் ஒன்றை வானியலாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். சிலியில் உள்ள டார்க் எனர்ஜி கேமராவைப் பயன்படுத்தி, இந்தக் சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • டார்க் எனர்ஜி டீ கேம் (DECam) சர்வதேச ஒத்துழைப்பால் நிறுவப்பட்டுள்ள கேமராவாகும். 57 மெகாபிக்சல் டீ கேம் சுமார் ஒரு கிலோ மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோளை கண்டுபிடிக்க உதவியுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளுக்கு 2021PH27 என வானியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். 
  • இந்த சிறுகோளின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சூரியனின் சுற்றுவட்டப்பாதையை வெறும் 113 நாட்களில் முழுமையாக ஒருமுறை சுற்றி முடித்துவிடுகிறது. சூரிய மண்டலத்தில் இருக்கும் மற்ற எந்த சிறுகோளையும் விட வேகமான சிறுகோளாக 2021PH27 உள்ளது.
  • சூரியனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்தச் சிறுகோள், சூரியனில் இருந்து சுமார் 20 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் புதன் கோளின் தொலைவை விட 3 மடங்கு நெருக்கமானதாகும். 
  • புதனுடன் ஒப்பிடும்போது இது குறைவான சுற்றுப்பாதை வேகத்தையேக் கொண்டிருக்கிறது. சூரியனின் சுற்றுப்பாதையை வெறும் 88 நாட்களில் புதன் கோள் வேகமாக சுற்றிவிடுகிறது.
  • சிறுகோள்களைப் பொறுத்தவரை சூரிய மண்டலத்தின் அண்ட பரிமணாமத்தின் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன. பெரும்பாலான சிறுகோள்கள் முக்கிய சிறுகோள்கள் பெல்டில் வாழ்கின்றன. 
  • மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரந்த சுற்றுப்பாதைகளில் சுழன்று வரும் அவை, சில கிலோ மீட்டர் முதல் 10 அடிக்கும் குறைவான விட்டம் கொண்ட உறைந்த விண்வெளிப் பாறைகள் ஆகும். அதனையே வானியலாளர்கள் சிறுகோள்கள் என குறிப்பிடுகின்றனர்.
  • இந்த சிறுகோள் கண்டுபிடிப்பு குறித்து பேசிய வானியலாளர் ஸ்காட். எஸ்.ஷெப்பர்டு, சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் இந்த சிறுகோளின் மேற்பரப்பில் சுமார் 500 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பநிலை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 
  • அதாவது ஈயம் உருகும் அளவிலான வெப்பநிலை இருக்கும் என விளக்கம் கொடுத்துள்ளார். இவர், வாஷிங்டன் டிசியில் உள்ள கார்னகி இன்ஸ்டியூஷன் ஃபார் சயின்ஸில் வேலை செய்து வருகிறார்.
  • ஆகஸ்ட் 13 ஆம் தேதி டீ கேம் வெளியிட்டப் படங்களை பகுப்பாய்வு செய்த அவர், இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். வானியலாளர்களின் கூற்றுபடி, சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் சிறுகோள்களை கண்டுபிடிப்பது என்பது எளிதான காரியமல்ல எனத் தெரிவிக்கின்றன. 
  • ஏனென்றால், சூரியனில் இருந்து வெளியாகும் ஒளிக்கதிர்களால் சிறுகோள்கள் மறைக்கப்படுவதே, சிறுகோள் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
ENGLISH
  • There are innumerable asteroids inside and outside the Solar System. Astronomers will be amazed when they find them from time to time. Thus, astronomers have now discovered a fast-rotating asteroid three times closer than Mercury. The asteroid was discovered using a dark energy camera in Chile.
  • Dark Energy Te Cam (DECam) is a camera installed by an international collaboration. The 57-megapixel tee game helped detect the asteroid, which is about a kilometer in diameter. Astronomers have named the newly discovered asteroid 2021PH27.
  • The remarkable thing about this asteroid is that it completes the Sun's orbit completely once in just 113 days. 2021PH27 is the fastest asteroid in the solar system. The closest asteroid to the Sun is about 20 million kilometers from the Sun. The nearest Mercury to the Sun is 3 times closer than the distance.
  • It has a lower orbital speed compared to Mercury. Mercury orbits the Sun fast in just 88 days. Asteroids are monuments to the cosmic evolution of the solar system. Most asteroids live in the main asteroid belt.
  • Orbiting in vast orbits for millions of years, they are frozen space rocks a few kilometers in diameter and less than 10 feet in diameter. This is what astronomers refer to as asteroids. Astronomer Scott talks about the discovery of this asteroid. According to S. Shepherd, the surface of the asteroid, which is close to the sun, has a temperature of about 500 degrees Celsius.
  • That is, the temperature at which the lead melts. He works at the Carnegie Institution for Science in Washington, DC. He shared this information after analyzing images released by Tea Game on August 13th. According to astronomers, finding asteroids close to the sun is not an easy task.
  • This is because asteroids are obscured by light from the sun, which is why the asteroid cannot be detected.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel