கீழடி அகழாய்வில் தந்தத்தினாலான பகடை கண்டெடுப்பு
- கீழடியில் நடைபெற்றுவரும் 7-ஆம் கட்ட அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
- கீழடி அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட சதுர வடிவிலான பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இப்பகடையில் ஒவ்வொரு பக்கத்தின் முகங்களும் ஒரு புள்ளியைச் சுற்றி 2 வட்டக் கீறல்கள் முத்திரையிடப்பட்டுள்ளன.
- மிக நோத்தியாக ஒன்றன் மேல் ஒன்றாக வரையப்பட்டுள்ள இப்பகடையானது, 4 புறமும் 1.5 செ.மீ. அளவுடையதாகவும், 4 கிராம் எடையுடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்கால மக்கள் பொழுதுபோக்குக்காக பகடை ஆடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கலாம் என்றனா்.
உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லி, மும்பை
- பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'தி எக்னாமிஸ்ட் குரூப்' ஊடக நிறுவனத்தின் புலனாய்வு பிரிவு சார்பில் ஆண்டுதோறும் உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
- இதன்படி 2021-ம் ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகன் முதலிடம் பிடித்தது. கனடாவின் டொராண்டோ, சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 12-வது இடம் கிடைத்தது.
- பிரிட்டன் தலைநகர் லண்டன் 15-வது இடம், சீன தலைநகர் பெய்ஜிங் 36-வது இடம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 38-வது இடத்தைப் பெற்றன. இந்திய தலைநகர் டெல்லி 48-வது இடத்தையும், வர்த்தக நகரான மும்பை 50-வது இடத்திலும் உள்ளன.
கரோனா ஆய்வுக்கு கின்னஸ் சாதனை விருது
- கரோனா தொடா்பாக இந்திய மருத்துவமனைகளிலும் உலகின் பிற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளிலும் பிரிட்டனைச் சோந்த நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா். மொத்தம் 116 நாடுகளில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா்.
- பிரிட்டனின் பா்மிங்ஹம் பல்கலைக்கழம், எடின்பரோ பல்கலைக்கழததைச் சோந்த நிபுணா்கள் நடத்திய இந்த ஆய்வில், உலகம் முழுவதிலுமிருந்து 15,025 விஞ்ஞானிகள் பங்கேற்றனா்.
- இந்த ஆய்வு, மிக அதிக ஆய்வாளா்கள் நடத்திய மிகப் பெரிய ஆய்வு என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
- உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா குறித்து முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வில் பங்கேற்ற இந்திய வம்சாளி நிபுணா் அனில் பங்கு தெரிவித்தாா்.
தொழிற்கல்வி படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
- இன்ஜினியரிங் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
- இதையடுத்து, நடப்பு கல்வியாண்டிலேயே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
'பம்பர் டூ பம்பர்' காப்பீடு பாலிசி - புதிய வாகனங்களுக்கு கட்டாயம்
- புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில் காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த உத்தரவை, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பும்படி, போக்குவரத்து துறை கூடுதல் செயலரை அறிவுறுத்தியுள்ளது.
- தமிழகத்தில் நிகழாண்டில் ரூ.11,500 கோடிக்கு பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
- மேலும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் அளவை 10 சதவீதத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதமாக உயர்த் த்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
- 1) எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் 5 அதிகாரி "பங்கஜ் சிங்” (Pankaj Kumar Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2) இதேபோன்று இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் (ITBP) புதிய தலைவராக தமிழ்நாட்டின் 1988-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி "சஞ்சய் அரோரா” (Sanjay Arora) நியமிக்கப்பட்டுள்ளார்.
- 3) காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPRD-Bureau of Police Research and Development) புதிய தலைவராக "பாலாஜி ஸ்ரீவத்சவா” (Balaji Srivastav) நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கூடைப் பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தஞ்சாவூர் வீரர் அரவிந்த் அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் ஆகஸ்ட் 20 முதல் 22 வரை ஆசிய தகுதி சுற்று கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இவர் வெற்றிபெற்று ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.
- டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் முதல் விளையாட்டுப் முதல் தங்கப் பதக்கத்தை ஆஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை போட்டியில், பெய்ஜ் கிரேகோ (Paige Greco) வென்றார்.
- மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் “சி1-2-2” 3000 மீட்டர் பிரிவில் பெய்ஜ் கிரேகோ 3 நிமிஷம் 50.81 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.