Type Here to Get Search Results !

TNPSC 25th AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கொலீஜியம் பரிந்துரை ஏற்பு - 3 பெண்கள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்

  • கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதற்கான பரிந்துரையை அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வர்.
  • ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. இந்த 9 பேரில் 8 பேர் நீதிபதிகள் ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பட்டியலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எல்ஐசியின் 'ஆனந்தா ' மொபைல் செயலி அறிமுகம்

  • ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி முகவர்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு பாலிசிகளில் சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ஆனந்தா செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
  • புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதி செய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன் மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.

மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

  • கடந்த 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
  • இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின், சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
  • இந்த நிலையில், மாநில கொள்கை வளர்ச்சிக் குழு என்ற பெயர், தற்போது மாநில திட்ட ஆணையம் என மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
ராணுவத்தில் 5 பெண் அதிகாரிகளுக்கு “கர்னல்” பதவி உயர்வு
  • தற்போது ராணுவத்தில், போரில், ராணுவ நடவடிக்கைப் பிரிவுகளில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி அமர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சம் லெட்டினன்ட் கர்னல் வரை பெண் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றனர்.
  • லெப்.கர்னல் சங்கீதா சர்தானா
  • லெப்.கர்னல்கள் சோனியா ஆனந்த் மற்றும் துக்கல்
  • லெப்.கர்னல் ரீனு கன்னா
  • லெப்.கர்னல் ரிட்சா சாஹர்
  • பணிக்கால வரையளவு அடிப்படையில் இவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இந்த 5 பெண் அதிகாரிகளும் 26 ஆண்டு கால பணியை நிறைவு செய்ததையொட்டி, கால வரையளவுக்கு மேலாக பணிய (Time-Scale Colonel Rank) இவர்களுக்கு இந்த கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்
  • அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் (Western-Southern Open Masters tennis tournament) ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் வெரேவ் (ஆடவர் ஒற்றையர் பிரிவு), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி (மகளிர் ஒற்றையர் பிரிவு) ஆகியோர் சாம்பியன் ஆகினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel