Type Here to Get Search Results !

TNPSC 21st AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிலிண்டர் முன்பதிவுக்கு ‘ஊர்ஜா' சேவை - பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகம்

  • நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதல்முறையாக சமையல் எரி வாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தல், சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனத்தை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக 'ஊர்ஜா' என்ற தகவல் பரிமாற்ற வசதியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த வசதி மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான தங்கள் செல்லிடப்பேசி எண்களை வாடிக்கையாளர்கள் மாற்றலாம். அத்துடன் சிலிண்டர் விநியோக நிறுவனங்களை மாற்றுதல், பாரத்கேஸ் விதி யோகஸ்தர்கள் மூலம் பழுது பார்க்கும் சேவைகள், இரண்டு சிலிண்டர் இணைப்புகள் கோருதல் ஆகிய சேவைகளையும் பெறலாம்.
  • இதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையை அறிந்து கொள்ளுதல், அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் குறித்த தகவல்களை பெறுதல், பெட்ரோல், டீசலை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்த்தல் ஆகிய சேவைகளும் இந்த வசதி மூலம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன் னடம், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் 900 ஆண்டு பழமையான கல்செக்கு கண்டெடுப்பு

  • பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் சுமார் 900 ஆண்டு பழமையான கல்லால் ஆன எண்ணெய் பிழியும் செக்கு கண்டறியப்பட்டுள்ளது.
  • இதன் உயரம் 33 செ.மீ. வெளிவிட்டம் 71செ.மீ. உள் விட்டம் 64 செ.மீ. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிகளில், ' மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம்' எனும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
  • கல்செக்கில் காணப்படும் எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். பழங்காலத்தில் உணவுப் பொருள்களை அறைக்கவும், கோயில்,வீடுகள், தெருக்கள் ஆகியவற்றில் விளக்கு எரிக்க எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்க செக்குகள் பயன்பட்டன.
  • இதற்கென அரசர்கள், படைத்தலைவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் கோயில் வழிபாட்டுக்கும், பொதுப் பயன்பாட்டுக்கும் கல்செக்குகளைச் செய்து தானமாக வழங்கினர். 
  • பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை வேலூர் ஆகிய கிராமங்களில் இத்தகைய கல்செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெங்கலம் கிராமத்தில் உள்ள இந்த கல் செக்கு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழமையானதாகும்.
  • மல்லடி நாட்டான் என்பவர் இந்த கல்செக்கை செய்து கொடுத்திருக்கிறார். இவர் யாரென அறிய முடியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும். இது தற்போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம். 

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்திட்டம் தொடக்கம்

  • நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின் திட்டத்தை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம், சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீா்த்தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் உருவாக்கியுள்ளது.
  • 25 மெகாவாட் திறன் கொண்ட இந்தத் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. நீா்த்தேக்கத்தில் சுமாா் 75 ஏக்கா் பரப்பளவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சூரியசக்தி ஒளிமின்னழுத்த தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சுமாா் 7,000 வீடுகளுக்கு ஒளியூட்டுவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 46,000 டன் கரியமில வாயுவின் பயன்பாட்டையும் இந்தத் திட்டம் குறைக்கும்.
  • மேலும் இதன் மூலம் ஆண்டிற்கு 1,364 மில்லியன் லிட்டா் தண்ணீா் சேமிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் 6700 வீடுகளின் தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்படும்

நாட்டின் மிக உயரமான மூலிகை தோட்டம் திறப்பு

  • இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம், உத்தரகாண்ட் மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது சமோலி மாவட்டம். இந்தியாவின் கடைசி கிராமமான மணா என்ற பகுதி இங்குதான் அமைந்துள்ளது. 
  • இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் உள்ளது. புகழ் பெற்ற பத்ரிநாத் கோயிலும் இதன் அருகில்தான் உள்ளது. இதுபோல், பல்வேறு முக்கியத்துவம் கொண்ட மணாவில் மூலிகைத் தோட்டம் அமைக்க உத்தரகாண்ட் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. 
  • அதன்படி, ஒன்றிய அரசு நிதி உதவியின் கீழ், இந்த கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 'இந்த மூலிகைத் தோட்டம் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதால், இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம் என்ற பெருமையை இப்பூங்கா பெற்றுள்ளது. பல்வேறு அபூர்வ மூலிகைகளை கொண்டு 4 பிரிவுகளாக பூங்கா அமைந்துள்ளது.
  • குறிப்பாக, இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் பகுதியில் கிடைக்கும் 40 வகையான மூலிகைகள் இங்கு நடப்பட்டுள்ளது. ஆன்மிகமும், அறிவியலும் கொண்ட பத்ரி துளசி, போஜ்புத்ரா மரங்கள் போன்றவையும் இங்கு பராமரிக்கப்படுகின்றன

10000 மீட்டர் நடை பந்தயத்தில் வெள்ளி வென்றார் அமித்

  • கென்யா தலைநகர் நைரோபியில் உலக யு20 தடகள போட்டிகள் நடை பெற்று வருகின்றன. இந்த தொடரின் கலப்பு 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர் பரத் ஸ்ரீதரன் உள்ளிட்ட இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று பதக்க எண்ணிக்கையை தொடங்கியது. 
  • இந்நிலையில் 10,000 மீட்டர் ஆடவர் நடை பந்தயத்தில் இந்திய வீரர் அமித் கத்ரி பங்கேற்றார். 
  • ஹெரிஸ்டோன் 42 நிமிடம், 10.84 விநாடிகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமித் 2வது இடம் பிடித்து (42:17.94) வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். 3வது இடம் பிடித்த ஸ்பெயின் வீரர் பால் மெக்ராத் (42:26.11) வெண்கலம் வென்றார்.
  • இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் இது. போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. பதக்க பட்டியலில் கென்யா 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. பின்லாது (2-1-0), எத்தியோப்பியா (1-3-1) அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா (0-1-1) 16வது இடம் பிடித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel