மலேஷியாவில் ஆட்சி அமைக்கும் இஸ்மாயில் சப்ரி யாகோப்
- ஆசிய நாடான மலேஷியாவில் முஹைதீன் யாசின், 18 மாதங்களே பிரதமர் பதவியில் இருந்தார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சமீபத்தில் அவர் ராஜினாமா செய்தார்.
- இதனால் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்தவரும், கடந்த ஆட்சியில் துணை பிரதமராக இருந்தவருமான இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, 61, ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் சைகோவ் டி - உலகின் முதல் டி.என்.ஏ கொரோனா தடுப்பூசி
- இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனம், டி.என்.ஏ அடிப்படையாகக் கொண்டு தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
- உலகிலேயே சைகோவ் டி தான் டி.என்.ஏ மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
12வது இந்திய திரைப்பட விழா
- ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பர்ன் நகரில் 12வது இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் இந்திய அளவில் சிறந்த படமாக சூரரைப்போற்று படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நடித்த சூர்யா சிறந்த நடிகராக ேதர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்த படத்தை சூர்யாவே தயாரித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இதில் சூர்யா குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானத்தை இயக்கிய கேப்டன் கோபிநாத்தாக நடித்திருந்தார்.
- சிறந்த நடிகை விருது ஷெர்னி என்ற இந்தி படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு கிடைத்தது. இந்த படத்தில் அவர் காடுகளை அழிக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து போராடும் காட்டிலாகா அதிகாரியாக நடித்திருந்தார்.
- சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தில் நடித்த நிமிஷா சஜயனுக்கு கிடைத்தது. சிறந்த வெப் சீரிஸ் நடிகையாக சமந்தா தேர்வானார். தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிசில் இலங்கையை சேர்ந்த மனித வெடிகுண்டு பெண்ணாக அவர் நடித்திருந்தார்.
- மிர்சாபூர் 2 சிறந்த வெப் சீரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நடித்த பங்கஜ் திரிபாதிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த இயக்குனர் விருது லூடோ இந்தி படத்தை இயக்கிய அனுராக் பாசுக்கு கிடைத்தது.
உலக டேபிள் டென்னிஸ் சத்யன், மனிகா சாம்பியன்
- உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியின் தலைநகர புடாபெஸ்டில் முடிவடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், மனிகா பத்ரா இணை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
- இறுதி ஆட்டத்தில் 3-1 என்ற செட் கணக்கில் வென்ற சத்யன், மனிகா இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
குறையும் மக்கள்தொகை சீனாவின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல்
- உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள சீனாவில் பிறப்பு விகிதம் தொடர் சரிவை சந்தித்துள்ளது. மக்கள்தொகையை அதிகப்படுத்தும் வகையில் மூன்று குழந்தைகள் திட்டத்தை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு சீனா தேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மக்கள்தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, சீனர்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சட்ட திருத்தத்தை நாடாளுமன்ற நிலைக்குழு நிறைவேற்றியுள்ளது.
- இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொண்டால் அவர்களை வளர்ப்பதற்கான செலவை கண்டு சீனர்கள் தயக்கம் காட்டிவந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் சீனர்களுக்கு சமூக மற்றும் பொருளார உதவிகள் வழங்க சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- நிதி, வரி, காப்பீடு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவற்றில் சலுகைகள் வழங்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் வளர்ப்புக்கான செலவு குறைக்கப்படும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கரோனா இரண்டாவது அலை கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா 44.3 சதவீத வளர்ச்சிகண்டது.
- கடந்த 2020-21ம் நிதியாண்டு முதலே, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.
- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) விருது வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- மகாராஷ்டிர மாநில வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இந்த விருது அளிக்கப்பட இருக்கிறது. மொத்தம் 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.