Type Here to Get Search Results !

TNPSC 19th AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஓபிசி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் - அரசிதழில் வெளியீடு

  • ஓ.பி.சி., பிரிவுகளுக்கான ஜாதிகள் எவை என்பதை இனம் கண்டு, பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கே வழங்கும், மிக முக்கிய அரசியல் சட்டத்திருத்த மசோதாவை, நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில், மத்திய அரசு தாக்கல் செய்தது.
  • விவாதத்துக்கு பின், இந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
  • இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனையடுத்து 127வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

'தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்': தமிழரசு இதழின் சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளைத் தொகுத்து, செய்தித் துறையின் சார்பில், 'தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்' என்ற தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வெளியிட்டார். முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பெற்றுக்கொண்டார்.

போர் விமானங்களில் புதிய தொழில்நுட்பம் - ஏவுகணை தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள டிஆர்டிஓ தயாரிப்பு

  • உலகம் முழுவதும் எதிரியின்போர் விமானங்களை துல்லியமாகதாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், எதிரி நாடுகளின் ஏவுகணைகளை திசைதிருப்பும் திறன்கொண்ட ஜெட் விமானங்களை இந்திய விமானப் படைக்காக டிஆர்டிஓ நிறுவனம் தயாரித்திருக்கிறது. 
  • சாஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
  • இரண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விமானங்களால் ஏவுகணைகளை திசைதிருப்ப முடியும். ஒன்று, ஃப்ளேர் என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்கள், ஏவுகணையில் இருந்து தப்பிக்க, அதிக அளவிலான நெருப்பை உமிழும். 
  • இதன் மூலம், வெப்பத்தை பயன்படுத்தி விமானத்தை துரத்தும் ஏவுகணைகள் திசைதிரும்பிவிடும். ஆனால், வெப்பத்தை தவிர்த்து அலுமினிய உலோகத்தை பயன்படுத்தி விமானங்களை துரத்தும் ஏவுகணைகளிடம் இருந்து இவை தப்பிக்க முடியாது.
  • ஆதலால், இதனை விட மேம்பட்ட தொழில்நுட்பமாக சாஃப் தொழில்நுட்பம் கருதப்படுகிறது. சாஃப் தொழில்நுட்ப ஜெட் விமானங்கள் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டதால், விமானப் படையில் இணைக்கப்பட்டு வருவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு மானியம் ரூ.1248.92 கோடி விடுவிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

  • பயிர் காப்பீட்டுத் திட்டம் சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 2021-22ம் ஆண்டில் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் ஒன்றிய அரசு தனது பங்கை குறைத்து விட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. 
  • மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாலும், இவ்வாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனினும் தமிழக அரசு எடுத்த பெரும் முயற்சியினால், இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் (பொது காப்பீட்டு நிறுவனம்) மற்றும் இப்கோ-டோக்கியோ ஆகிய இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.
  • எனினும், காரீப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய இயலாத பயிர்களுக்கு முக்கியமாக நெற்பயிர் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு அடைய நேரிட்டால் மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
  • மேலும் சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில் (அக்டோபர் முதல் மார்ச்) அறிவிக்கை செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை பொறுத்தவரை, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை காரீப், 2020 பருவத்திற்கு ரூ.107.54 கோடியை சுமார் 1,64,173 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இதைத் தொடர்ந்து சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு 'காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1248.92 கோடி விடுவித்துள்ளது. 

அருணாச்சல பிரதேசத்தில் கண்டறியப்பட்ட புதிய தவளை இனம்

  • இந்திய வனவிலங்கு நிறுவனமும் மற்றும் வட கரோலினா இயற்கை அறிவியல் அருங்காட்சியகமும் இணைந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஆதி மலையடிவாரத்தில் இந்த தவளை இனத்தைக் கண்டறிந்திருக்கின்றனர். 
  • ஆதி மலையடிவாரத்தில் இருந்து கண்டறியப்பட்டதால் இதற்கு ஆதி நீர்வீழ்ச்சி தவளை என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதி தவளை கண்டறியப்பட்ட தகவல்கள் Journal of Natural History என்ற லண்டன் நாளிதழில் வெளியாகி இருக்கிறது. 

மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்

  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்ல்லத் தக்கதாகும். தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த விசாவை அந்நாட்டு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவது வழக்கம்.
  • இந்நிலையில், பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்துள்ளது. மலையாள நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அகரம் அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணால் ஆன முத்திரை

  • திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணி கீழடி மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
  • அவற்றில் செங்கல் கட்டுமானம், இரட்டைச் சுவர், விலங்குகளின் எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. 
  • இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் போன்றவை ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்தப் பகுதியில் இருந்து சுடுமண்ணால் ஆன முத்திரை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. 
ஜூனியர் மல்யுத்தம் - இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்
  • ரஷ்யாவில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் (World Junior Wrestling Championship) ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 
  • ஆடவருக்கான 61 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரவீந்தர் ஈரான் வீரர் ரஹ்மான் அமௌசத் காலிலியை எதிர்கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மியான்மர் விவகாரத்துக்கு ஆசியானின் 5 அம்சத் தீர்வு
  • ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வரும் மியான்மரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (Association of South East Asian Nations (ASEAN)) முன்வைத்துள்ள 5 அம்ச செயல்திட்டங்களை (five-point consensus) இந்தியா வரவேற்றுள்ளது.
U-20 உலக தடகள் சாம்பியன்ஷிப் - இந்திய கலப்பு ரிலே அணிக்கு வெண்கலம்
  • கென்யாவில் நடைபெறும் 20 வயதுக் உள்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (U-20 World Athletics Championships) 4*400 மீட்டர் ரிலேவில் இந்திய கலப்பு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா வென்ற 5-வது பதக்கம் இதுவாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel