Type Here to Get Search Results !

TNPSC 16th AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கேரளாவுக்கு அவசரகால நிதியாக ரூ.267.35 கோடி

 • கேரளாவில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அதிகாரிகள் சென்றனர். கேரள ஆளுநராக மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோர்களை சந்தித்து மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார்
 • இந்த ஆலோசனைக்கு பின்னர் கேரளாவுக்கு ரூ.267.35 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க இந்த பணம் போதுமானதாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மலேசிய பிரதமர் முகைதீன் ராஜினாமா

 • மலேசியாவில் பிரதமராக இருந்த மகதீர் முகமது(96) கடந்த ஆண்டு பதவி விலகினார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முகைதீன் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். 
 • இதனிடையே கொரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். 
 • மேலும் இவருக்கு நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவருக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சி எம்பிக்கள் 12க்கும் மேற்பட்டோர் திரும்ப பெற்றதால் அவர் பெரும்பான்மையை இழந்தார். மேலும் இரண்டு எம்பிக்களும் கடந்த வாரம் யாசினுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். 
 • இதனை தொடர்ந்து மலேசிய மன்னரை சந்தித்து பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மலேசியாவில் முகைதீனின் கடந்த 18 மாத ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 
கேரளத்தில் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையம் தொடக்கம் 
 • ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்) பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், "ட்ரோன் தடயவியல் ஆய்வு மையத்தை’ நாட்டிலேயே முதல்முறையாக (country's first “Drone Forensic Lab & Research Centre”) கேரள காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
 • அதன்மூலமாக 5 கி.மீ. சுற்றளவுக்குள் இயக்கப்படும் அனைத்து ட்ரோன்களின் விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும். அந்த ட்ரோன்களை முடக்கும் நடவடிக்கையையும் கண்காணிப்புக் கருவி மூலமாக மேற்கொள்ள முடியும்.
சென்செக்ஸ் முதல்முறையாக 55,000 புள்ளிகளைக் கடந்து சாதனை 
 • இந்தியப் பங்குச் சந்தைகளின் (Indian Stock Markets) வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (13 ஆகஸ்ட் 2021-ல்) நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதல் முறையாக 55,437.29 புள்ளிகளை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் 
 • இந்திய சீனியர் மகளிர் கால்பந்து அணியின் (India's senior women's football team) தலைமைப் பயிற்சியாளராக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்ததாமஸ் டென்னர்பி (Thomas Dennerby) நியமிக்கப்பட்டுள்ளார். 
 • அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (All India Football Federation (AIFF) சார்பில் வரும் 2022 ஜனவரி 20 பிப்ரவரி 06-ஆம் தேதி வரை "AFC ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள்” இந்தியாவில் நடைபெறவுள்ளன. 
 • அதற்காக சீனியர் அணியை தயார்படுத்தும் வகையில் தலைமைப் பயிற்சியாளராக டென்னர்பி நியமிக்கப்பட்டுள்ளார். 
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை
 • ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய (prohibiting single-use plastic items) பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் திருத்தப்பட்ட விதிகளுக்கான (Plastic Waste Management Amendment Rules, 2021) அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த தடையானது 01 ஜூலை 2022 முதல் அமலுக்கு வர உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel