ஐடிபிபி படையில் முதன்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்
- இந்தியாவில் CRPF, CISF, இந்தோ-திபெத் போலீஸ் படை, NSG, SSB ஆகிய 5 மத்திய காவல் படைகள் உள்ளன. இதில், இந்தோ-திபெத் போலீஸ் படையை தவிர மற்ற படைகளில் பெண்கள் நியமனம் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.
- இந்தோ திபெத் போலீஸ் படையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பெண்கள் நியமிக்கப்பட்டு வந்த போதிலும், போர் பணிகளில் அவர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
- இந்நிலையில், முதன்முறையாக இந்த படையில் உதவி கமாண்டட் பணியிடங்களில் பிரக்ரிதி, தீக்ஷா (Prakriti and Diksha) ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளனர்.
- இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே அபுதாபியில் "ஸையத் தல்வார்” (Zayed Talwar 2021) கூட்டு கடற்படை பயிற்சி (bilateral naval exercise) நடைபெற்றது.
- இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்கே 42பி (2 integral Sea King MK 42B helicopters) ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
- ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அல்-தா ஃப்ரா (AI-Dhafra) போர்க்கப்பல், ஏஎஸ்565பி பாந்தர் (AS-565B Panther) ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டன.
- உக்ரைன் நாட்டில் ஆகஸ்ட் 11 முதல் 16-ஆம் தேதி வரை மினி உலகக் கோப்பை கால்பந்து போட்டி (Mini Football Women's World Cup 2021) நடைபெற உள்ளது. இதில் தமிழக வீராங்கனைகள் 5 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
- 2021-ஆம் பழங்குடியின மக்களின் சர்வதேச ஆண்டிற்கான உலக தினத்திற்கான (International Day of the World's Indigenous Peoples)
- கருத்துரு "Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract"
- ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வேகமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- 2021-ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் கருத்துரு "Slow elimination of the African lion”
- புலனாய்வில் சிறந்து விளங்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு சிலஆண்டுகளாகமத் திய உள்துறை அமைச்சரின் விருது வழங்கப் பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச் சகம், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 152 நபர்களின் பெயர்களை வியாழக்கிழமை அறிவித்தது.
- இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் ஆய்வாளர்கள் விவரம், நாகப்பட்டினம் சிபிசிஐடி ஆய்வாளர் எம். சரவணன், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஏ.அன்ப ரசி, கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் பி.கவிதா, திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.ஜெயவேல், செங்கல்பட்டு மாவட் டம் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.கலைச்செல்வி, சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜி.மணிவண்ணன்,சென்னை குரோம் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பி.ஆர். சிதம்பரமுருகேசன், கன்னியாகுமரி மாவட் டம் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சி.கண் மணி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பழைய வாகனங்களை நீக்கும் கொள்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
- தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு குஜராத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இம்மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் (ஸ்கிராப்) வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் இரும்பு இறக்குமதி மற்றும் மூலப் பொருள் இறக்குமதி செய்வது குறையும். மேலும் பழைய வாகனங்களை உபயோகத்திலிருந்து நீக்குவதன் மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பழைய வாகனங்களை அழிப்பதை செயல்படுத்துவதன் மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். தனியார் வாகனங்களுக்கு இதை நடைமுறைப்படுத்துவது 2024-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.
- குஜராத் மாநிலம் அலாங் பகுதியில் வாகனங்களை அழிக்கும் மையம் உருவாக்கப்பட்டு அது நாட்டின் மிக முக்கியமான கேந்திரமாக விளங்கும்.
- இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் வாகன அழிப்புக் கொள்கை மிகவும் முக்கியமான மைல் கல்லாகும். இளைஞர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
- சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்ற மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை உபயோகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க இந்த கொள்கை உதவும்.
- இதனால் பாதுகாப்பான சூழல் உருவாகும். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை உணர்ந்து பங்கேற்கும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
- பழைய கார்களை அழிப்பதற்கு அந்த மையங்களில் விடும்போது அதற்கான சான்றிதழ் அளிக்கப்படும். இந்த சான்று வைத்திருப்போர் புதிதாக வாங்கும் வாகனத்திற்கு பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
- அதேபோல சாலை வரியில் குறிப்பிடத்தக்க அளவு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் அதற்கு செலவாகும் நிர்வாக செலவுகளையும் தனி நபர்கள் தவிர்க்க முடியும்.
- அடிக்கடி பழுது பார்ப்பது, அதிக எரிபொருள் செலவு போன்றவற்றையும் தவிர்க்க முடியும். மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவர்களது உடல் ஆரோக்கியத்துக்கும் பலனளிக்கும். மேலும் பழைய வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
- பழைய வாகனங்கள் என்பதாலேயே அவற்றை அழிக்க வேண்டும் என்பதில்லை. சாலைகளில் ஓடுவதற்கேற்ற தகுதி நிலையில் (பிட்னெஸ்) அவை உள்ளனவா என்பது சோதிக்கப்படும். இந்த சோதனையில் வெற்றியடையாத வாகனங்கள் மட்டுமே அழிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் இரு சிறிய பானை கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
- தற்போது கொந்தகையில் ஒரு முதுமக்கள் தாழியில் இறுதிச் சடங்குக்கு பயன்படுத்திய கூம்பு வடிவ பானை, சாதாரண பானை என 2 பானைகள் இருப்பது தெரியவந்தது.
- மேலும் அந்த முதுமக்கள் தாழியின் அடியில் மனிதஎலும்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதுவரை கொந்தகையில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு 13 தாழிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்வு
- சுதந்திர தினத்தன்று நடக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
- அப்போது, தஞ்சை மாநகராட்சிக்கு விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையும், சிறந்த நகராட்சிகளில் முதலிடம் பிடித்த உதகைக்கு விருதுடன் ரூ.15 லட்சமும், 2வது இடம் பிடித்த திருச்செங்கோட்டுக்கு ரூ.10 லட்சமும், 3வது இடம் பிடித்த சின்னமனூருக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
- திருச்சி மாவட்டத்தின் கல்லக்குடி, கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கோட்டையூரும் சிறந்த 3 பேரூராட்சிகளாகவும் தேர்வாகியுள்ளன.
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கல் கால்வாய் கட்டுமானம்
- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டைப் பகுதியில் சங்க காலக் கோட்டை இருந்ததற்கான, சுமாா் 1.63 கிலோ மீட்டா் நீளத்தில் வட்ட வடிவிலான சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது.
- இங்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியா் இனியன் தலைமையிலான குழுவினா் கடந்த 13 நாள்களாக அகழாய்வை மேற்கொண்டு வருகின்றனா்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அகழாய்வுக் குழிகளில் இரும்பாலான கொக்கி, மண் பானைகள், குடுவையின் மூடியிலுள்ள கூம்புபோன்ற மேல்பகுதி, விளையாட்டுப் பொருளாகக் கருதப்படும் சுடுமண் வட்டச்சில்லு போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.