Type Here to Get Search Results !

2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை / AGRICULTURAL BUDGET FOR 2021 - 2022


TAMIL
  • தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் :
  1. 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு.
  2. ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" அறிமுகம் செய்யப்படும். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  3. நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி;ஆக மொத்தம் ரூ.319.38 கோடி நிதி ஒதுக்கீடு.
  4. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடி மட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ.119.402 கோடி ஒதுக்கீடு
  5. விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.
  6. பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.
  7. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம், காய்கறி விதைத் தளைகள் விநியோகத்திற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு.
  8. நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து வழங்கி, 1,50,000 ஹெக்டரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடி நிதி ஒதுக்கீடு.
  9. முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 லட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
  10. ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.
  11. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.
  12. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி நிதி ஒதுக்கீடு
  13. கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை 'நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  14. மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.
  15. பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.
  16. வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
  17. நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம். தேவையில்லாமல் பனை மரத்தினை வெட்டும் நடைமுறை நெறிமுறைப்படுத்தப்படும்.
  18. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு.
  19. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் 'சிறப்பு ஊக்கத்தொகையாக' டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத்திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி
  20. வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்.
  21. மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய "வேளாண் உபகரணங்கள் தொகுப்பு" அரை லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  22. இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு.
  23. வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்னைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு.
  24. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய 2 லட்சம் ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு.
  25. திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசி மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி
  26. கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் துவக்கம்
  27. கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி
  28. குறைந்த வாடகையில் இயந்திரங்களை வழங்கும் திட்டத்தினை, வலுப்படுத்துவதற்காக, ரூ. 23.29 கோடியில் நவீன வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்,
  29. மழை நீரினை சேமித்து, பயிர் உற்பத்தியை பெருக்க விவசாயிகளின் வயல்களிலேயே 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  30. 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, ரூ.10,000 /- வீதம் 1,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
  31. தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி, புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு.
  32. 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை.
  33. ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருளை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காக ரூ.10 கோடி.
  34. ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள்
  35. நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகினை பதப்படுத்தி சேமித்து வைக்க பரிவர்த்தனைக்கூடம், உலர்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் அமைக்க ரூ.50 லட்சம்.
  36. நீலகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்'அமைக்கப்படும்.
  37. கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர்கலங்கள்.
  38. விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை, கிண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம். முதன்முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் APEDA தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவிகித மானியம்
  39. ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், கூட்டரங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  40. முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் 'முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக' அறிவிப்பு.
  41. மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள் (Driers), இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் (Pulveriser), தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி.
  42. மின்னணு ஏலம் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு உரிய விலை பெற இணையதளம் மற்றும் சிறப்பு மென்பொருளுக்காக ரூ.10 கோடி.
  43. கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை
  44. உணவுப்பதப்படுத்துதலுக்கு தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக, உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு.
  45. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய்
  46. கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  47. தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்
  48. வேளாண்மையில், தொழில் முனைவோர்களை ஈர்க்க, வேளாண் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre) வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre).
  49. காவிரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக, திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கை
  50. மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
ENGLISH
  • For the first time in the history of Tamil Nadu, Agrarian Welfare Minister MRK Panneerselvam presented a separate financial statement for agriculture in the Assembly in 2021-22. Key projects and key policy decisions included:
  1. Rs 34,220.65 crore has been earmarked for agriculture and allied sectors in 2021-22. These include Agriculture, Horticulture, Agricultural Engineering, Agricultural Marketing, Tamil Nadu Agricultural University, Department of Sugar, Seed Certification and Organic Certification, Department of Animal Husbandry, Department of Fisheries, Co-operatives, Tamil Nadu Consumer Goods Corporation, Department of Rural Development and Panchayat, Department of Forest Resources, Department of Co-operatives, Dairy, etc. The benefits of the projects undertaken by the affiliated departments will be integrated to facilitate overall rural development. A total of Rs 34,220.65 crore has been allocated for this.
  2. In five years, the "Kalaignar All Village Integrated Agricultural Development Program" will be introduced in all villages. An allocation of Rs.250 crore from state funds for projects to create water resources in 2500 villages, increase cultivation area and increase farmers' income. The project will be implemented at a total cost of Rs. 1,545.45 crore, combining the Union and State Government schemes.
  3. For the benefit of paddy farmers, the purchase price of paddy has been increased to Rs. 2,015 per quintal for normal variety and Rs. 2,060 per quintal for small variety. The additional expenditure for this is Rs.99.38 crore and the total allocation is Rs.319.38 crore.
  4. To provide free electricity to farmers' pump sets, Rs. 4,508.23 crore financial allocation.
  5. The State Government has allocated Rs. 2,327 crore as part of the insurance premium subsidy on behalf of farmers in the crop insurance scheme.
  6. Under the Micro Irrigation Scheme, 100 per cent subsidy will be provided to small and marginal farmers and 75 per cent subsidy will be provided to other farmers at a cost of Rs. 982.48 crore financial allocation.
  7. Under the Chief Minister's Rainfed Land Development Movement, an allocation of Rs.
  8. Agricultural Mechanization Project with a grant of Rs. 140 crore.
  9. To strengthen agricultural research and agricultural education at the Tamil Nadu Agricultural University, Rs. 573.24 crore financial allocation
  10. The Department of Agriculture in Coimbatore has been renamed as 'Nammazhvar Natural Agricultural Research Center' and an allocation of Rs.
  11. The Natural Agriculture Development Project will be implemented at a cost of `33.03 crore to conserve soil resources and provide healthy food to the people.
  12. Paddy Jayaraman's Traditional Paddy Varieties Conservation Movement for collecting, preserving, producing and distributing traditional paddy varieties to farmers.
  13. The Rs. 7.68 crore scheme will be implemented to encourage agricultural graduates and other youth to engage in agricultural activities. Skill development training will also be provided.
  14. A Rs. 3 crore palm development project to uplift the livelihood of the farmers who depend on our state tree palm tree and to promote various palm related industries. The practice of cutting down palm trees unnecessarily will be regulated.
  15. A total allocation of `300.56 crore has been made to increase the area under cultivation of paddy, cereals, pulses, oilseeds, coconut, cotton and fruits.
  16. For the benefit of sugarcane farmers, Rs. 42.50 per tonne as incentive for sugarcane production, Rs. 178.83 crore for providing additional 'special incentive' of Rs. 150 / - per tonne and Rs.
  17. Museum of Traditional Agriculture in Chennai to educate the youth on the greatness of agriculture.
  18. State level prize for farmers who excel in natural agriculture, exports and innovation.
  19. A high level committee headed by the Chief Secretary at the state level to review and resolve various important issues related to agriculture from time to time.
  20. 12.50 crore to focus on horticultural crops in Tiruvallur, Cuddalore, Namakkal and Tenkasi districts
  21. Launch of Special Center for Pala in Cuddalore District
  22. Rs 1 crore to set up a new government horticulture park in Vadalur, Cuddalore district
  23. In order to strengthen the scheme of providing machines at low rent, Rs. 23.29 crore purchase of modern agricultural machinery,
  24. An allocation of Rs. 5 crore has been made to set up 500 farms in farmers' fields to save rain water and increase crop production.
  25. An allocation of Rs. 1 crore to purchase new electric motor pump sets for farmers owning up to 3 acres of land and to provide a subsidy of Rs.
  26. 12.50 crore to rehabilitate 50 existing farmers' markets and Rs. 6 crore allocation.
  27. Uniform confirmation declaration for 40 agricultural products following the announcement in 2007-08.
  28. Rs.10 crore for storage and transaction facilities at Erode, Thiruvannamalai, Thiruvarur, Vellore, Villupuram, Thanjavur, Cuddalore, Nagapattinam and Kallakurichi district outlets.
  29. Refrigerated warehouses at two places at Ottanchatram and Panruti at a cost of Rs. 10 crore
  30. An 'Integrated Rural Agricultural Market Complex' worth Rs. 2 crore will be set up in Edappally village, Nilgiris.
  31. 28 dryers worth Rs 3.5 crore in regulated outlets in Cuddalore, Villupuram, Salem, Namakkal, Krishnagiri, Erode, Trichy, Thanjavur, Pudukottai, Madurai, Ramanathapuram, Theni, Dindigul, Tirupur and Kanyakumari districts.
  32. One crore rupees Agricultural Export Service Center at Chennai, Kindi to provide integrated export details, sales opportunities, quality certification methods etc. to the farmers. 50% subsidy for APEDA certification study to encourage first time exporters
  33. Areas including Theni, Dindigul, Karur, Tuticorin, Ariyalur, Tiruppur and Madurai districts where drumsticks are highly productive have been declared as 'Drum Export Zone'.
  34. Allocation of Rs. Rs 1 crore to set up a modern sales center for products and value added products in Kolathur area of ​​Chennai Corporation.
  35. Rs 10 crore for internet and special software for farmers to get a fair price for their produce through electronic auction.
  36. Government action to get geo-code for Kollimalai pepper, Panruti jack, Mannachcha Nallur Ponni rice
  37. Separate organization for food processing, with a focus on food processing.
  38. 2 crore to set up a research center for turmeric crop in Bhavanisagar, Erode district
  39. Introduction of Agriculture and Horticulture Education in Tamil for the convenience of students studying in the Tamil Way
  40. In agriculture, the Agri Incubation Center (Agri Incubation Center) will be strengthened to attract entrepreneurs and the Agri Incubation Center where necessary.
  41. Cauvery Delta Declare Agro Industrial Corridor between Trichy and Nagapattinam District as a Livelihood of Agricultural Pride and Agricultural Workers
  42. Steps will be taken to start five industrial centers for fish processing at Nagapattinam, Coimbatore for coconut, Trichy for banana, Erode for turmeric and Virudhunagar for small grains.

                                                Post a Comment

                                                0 Comments
                                                * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

                                                Top Post Ad

                                                Below Post Ad

                                                Hollywood Movies

                                                close

                                                Join TNPSC SHOUTERS Telegram Channel

                                                Join TNPSC SHOUTERS

                                                Join Telegram Channel