17ம் நுாற்றாண்டு நடுகல் திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
- திருப்பூர் அருகே, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே, பழமையான புலிக்குத்தி நடுகல் இருப்பது தெரியவந்தது.
- இது, 195 செ.மீ., அகலம், 95 செ.மீ., உயரம் உடையது. இடதுபுறம் உள்ள வீரன், தன் இடது கையில், பன்றியின் வாயை பிடித்து, வலது கை ஈட்டியால், பன்றியின் தலையில் குத்துவது போல உள்ளது.
- மேலும், இரு வீரர்களுக்கு இடையே ஒரு பெண், தன் வலது கையில், தாமரை பூவை உயர்த்தி பிடித்தபடி நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீரர்களுக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபட வசதியாக, நடுகல்லின் இருபுறமும் வேல் உருவத்தில் விளக்குமாடம் செதுக்கப்பட்டுள்ளது. சிலை வடிவமைப்பை பார்க்கும் போது, கி.பி., 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது என, உறுதி செய்ய முடிகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஆர்.வேல்ராஜ் துணைவேந்தர் நியமனம்
- அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணியில் தேர்வுக்குழு ஈடுபட்டு வந்தது.
- அப்பணி நிறைவடைந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினம்
- டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா எட்டி ஏறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியர்களின் நாயகனாக மாறிய நிரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும், பரிசுத் தொகையும் குவிந்து வருகின்றது.
- இந்த நிலையில் நிரஜ் சோப்ரவை கவுரவிக்கும் வகையில், அறிவிப்பு ஒன்றை தடகள அமைப்பின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
- 'டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு நிரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்று தந்த தினமான அகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக அடுத்த ஆண்டுமுதல் கொண்டாடப்படும்.
தமிழகத்திற்கு ரூ.918.33 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு
- 2021-22ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 5ஆவது மாதத்தவணை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வருவாய்கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க 15ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேகாலயா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 5ஆவது தவணை மூலம் ரூ.183.67 கோடியும், மொத்தமாக ரூ.918.33 கோடியும் கிடைத்துள்ளது.
- ஆந்திரா மாநிலம் ரூ.7190.42 கோடி, அசாம் மாநிலம் ரூ 2656.67 கோடி, ஹரியானா மாநிநம் ரூ.55.00 கோடி, ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் ரூ.4270.42 கோடி, கர்நாடகா மாநிலம் ரூ.679.58 கோடி, கேரளா மாநிலம் ரூ.8287.92 கோடி, மணிப்பூர் மாநிலம் ரூ.1051.67 கோடி, மேகாலயா மாநிலம் ரூ.532.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மிசோரம் மாநிலம் ரூ.745.83 கோடி, நாகாலந்து மாநிலம் ரூ.1898.75 கோடி, பஞ்சாப் மாநிலம் ரூ.4200.42 கோடி, ராஜஸ்தான் மாநிலம் ரூ.4115.83 கோடி, சிக்கிம் மாநிலம் 282.50 கோடி, திரிபுரா மாநிலம் ரூ.1894.17 கோடி, உத்தரகாண்ட் மாநிலம் ரூ.3238 கோடி, மேற்கு வங்கம் மாநிலம் ரூ.7336.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 17 மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.49,355.00 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.