Type Here to Get Search Results !

ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை / Report of the Intergovernmental Panel on Climate Change (IPCC)

 

TAMIL
  • உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • முன்பு நூறு ஆண்டு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட உயர்வு, 2050க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார்.
  • இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங்கடல் மட்டம் உயர்ந்தது.
  • ஐபிசிசியின் இந்த ஆய்வறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை 195 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த நாடுகள்தான் பருவநிலை மாற்றத்தின் இயல்பு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் எவ்வாறு காரணமாகிறார்கள் என்பதை ஆராய்ந்து வருகின்றன.
  • வரும் நவம்பர் மாதம், கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 என்ற உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு முன்பாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
  • அந்த கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக, நவீன கால பருவநிலை மாற்ற அறிவியல் அணுகுமுறை ஆலோசனைகளை தமது அறிக்கையில் இந்த குழு உலக நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது.
  • பருவநிலை மாற்றம் மீது மனிதர்கள் விளைவித்த மோசமான இந்த தாக்கம், யதார்த்தமான உண்மை என்று ஐபிசிசி குழுவின் இணை தலைவர் வெலரீ மெஸ்ஸன் டெல்மோட் கூறியிருக்கிறார்.
  • பசுங்குடில் வாயு வெளியேற்றம் காரணமாக, பூமி 1.5 டிகிரி வெப்பமாக உயரும்போது கடலின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரிக்கும் என்றும் 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்ளாக பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரியாகலாம் என்ற கூற்றை ஒதுக்கி விட முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
  • அதே சமயம் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்ற அளவை குறைக்கும் முயற்சிகளை கடுமையாக பின்பற்றினால், பூமியின் வெப்பநிலை மேலும் உயராமல் நிலையாக இருக்கலாம் என்ற புதிய நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அறிக்கையில் இடம்பெற்ற 5 எதிர்கால பாதிப்புகள்
  • அனைத்து உமிழ்வு சூழ்நிலைகளிலும் 2040க்குள் வெப்பநிலை 1850-1900 நிலைகளுக்கு மேல் 1.5C ஐ எட்டும்
  • ஆர்டிக் பெருங்கடல் 2050க்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையாவது பனி இல்லாத நிலையை அடையும்.
  • 1.5 டிகிரி வெப்பமயமாதல் நிலைமை நிலவும்போதும், "வரலாற்றில் இதுவரை ஏற்படாத வகையில், சில தீவிர பருவநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும்.
  • கடந்த காலங்களில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட நிகழ்வுகள் 2100ஐ உலகம் எட்டும்போது, குறைந்தபட்சம் அதிக அலை சீற்றத்தை அளவிடும் இடங்களில் பாதியளவை எட்டும்.
  • பல பகுதிகளில் காட்டுத்தீ உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஐபிசிசி அறிக்கை - துரிதமாக அறிய வேண்டிய குறிப்புகள்
  • பூமியின் தட்பவெப்பம், 1850-1900க்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் இருந்ததை விட 2011-2020க்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் 1.09 டிகிரி உயர்ந்துள்ளது.
  • 1850ஆம் ஆண்டு முதல் இல்லாத வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பூமி மிகவும் வெப்பமாக உள்ளது.
  • 1901 முதல் 1971ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது சமீபத்திய கடல் மட்டத்தின் உயரம் சுமார் மும்மடங்கு உயர்ந்திருக்கிறது.
  • 1990களில் இருந்த நிலையை விட ஆர்டிக் பனிக்கடல் உருகுவதற்கும் உலக அளவில் பனிச்சிகரங்கள் உருகுவதற்கும் மனிதர்களின் தாக்கமே மிக அதிக வாய்ப்பாக கருதப்படுகிறது.
  • அனல் காற்று உள்பட வெப்பமயத்துடன் தொடர்புடைய பல கடுமையான சூழ்நிலைகள், 1950களில் இருந்ததை விட அதிகமாகி இருப்பது போல, குளுமையான பருவநிலை குறைவதும் அதன் மூலம் ஏற்படும் கடுமையும் குறைவாக பதிவாவதும் நிதர்சனம்.
  • இந்த ஆரம்பநிலை அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்து வரும் மாதங்களில் தொடர்ச்சியாக பல்வேறு பருவநிலை விளைவுகளை விவரிக்கும் அறிக்கைகள் வெளியாகவிருக்கின்றன.
  • அந்த வகையில், 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பருவநிலை மாற்ற அறிவியல் முயற்சிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முதன்மையான முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஐபிசிசி என்றால் என்ன?
  • 1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.
  • 1950ல் இருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிடப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கை கூறியது முக்கியத்துவம் பெற்றது. 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.
  • COP26 நியமன தலைவர் சமீபத்தில் பொலிவியாவுக்கு பயணம் சென்றபோது, கிளாஸ்கோ உச்சி மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
  • 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.
  • தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018ல் வெளியிட்டது ஐபிசிசி. 
  • அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.
ENGLISH
  • Sea level rise around Asia continues to rise above the global average, according to a report by the Intergovernmental Panel on Climate Change. Indian tropical meteorologist Swapna Panikkal, who studied the details of the report, said the sea level rise, which was observed a hundred years ago, could occur in six to nine years by 2050.
  • He said the sea level rise was high in the Indian Ocean. Between 2006 and 2018, the Indian Ocean level rose by 3.7 mm per year. The IPCC study was adopted by 195 member states last Friday. These countries are exploring the nature of climate change and how humans are contributing to global warming.
  • The report comes ahead of a meeting of global leaders on climate change, COP26, in Glasgow next November. In its report, the panel provided the world with scientific approaches to climate change to prepare the participants.
  • Valerie Mason Delmode, co-chair of the IPCC panel, said the worst human impact on climate change was real. The 42-page report also states that ocean temperatures will increase by one degree as the Earth warms by 1.5 degrees due to greenhouse gas emissions.
  • Scientists have warned that the claim that the Earth's temperature will rise by 2 degrees by the end of this century cannot be ruled out if this situation continues. At the same time, scientists have expressed new hope that the Earth's temperature could remain stable if further efforts to reduce greenhouse gas emissions are strictly followed.
5 future vulnerabilities featured in the report
  • Temperatures will reach 1.5C above 1850-1900 levels by 2040 under all emission conditions
  • The Arctic Ocean will reach no ice at least once in September before 2050.
  • Despite the 1.5 degree warming situation, “some extreme weather events will increase, which is unprecedented in history.
  • Extreme levels of sea level rise occurring once a century in the past will reach at least half the size of the world by 2100, when at least high tide is measured.
  • Adverse weather events, including wildfires, are likely to increase in many areas.
IPCC Report - Tips to Know Quickly
  • Earth's climate has risen by 1.09 degrees in the ten years between 2011-2020, compared to the 50 years between 1850-1900. The Earth has been warmer in the last five years than it has been since 1850.
  • The recent sea level rise is about three times higher than it was between 1901 and 1971. The impact of humans on the melting of the Arctic Ocean and the melting of global glaciers is considered to be far greater than it was in the 1990s.
  • Many of the harsher conditions associated with warming, including hot air, have been reported to be colder and less severe, as they were in the 1950s. Following this initial report, a series of reports describing the effects of various seasons will be released in the coming months.
  • In that sense, it is seen as the first major step in reviewing the scientific efforts to change the climate after 2013.
What is IPCC?
  • The organization was launched in 1988. The organization was set up to report to governments every 6-7 years on climate change assessment, its impact, and solutions. The organization's reports have changed drastically as evidence of climate change and its dangers has increased.
  • Significantly, the organization's report released in 2013 stated that humans have been the main cause of global warming since the 1950s. This was the basis for the signing of the Paris Agreement in 2015.
  • During a recent trip to Bolivia, the COP26 nominee asked for support for the Glasgow Summit.
  • In addition to the regular reports every 6-7 years, the organization also provided specialized reports on specific scientific questions related to climate change.
  • The IPCC released in 2018 the most important statement that the Earth's temperature should not rise above 1.5 degrees compared to the period before the Industrial Revolution. The report was a major impetus for young people around the world to take to the streets, urging political leaders to tackle climate change.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel