Type Here to Get Search Results !

பிளாஸ்டிக் தொடர்பான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அறிக்கை / CPCB REPORT ON PLASTIC WASTE

 

TAMIL
  • தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் இது எளிதில் மட்காது என்பதால் நிலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. 
  • மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது தற்போது அதிகரித்துள்ளது. 
  • சாலை அமைப்பதில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கின் தாக்கத்திலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது. 
  • மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அளித்த அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 9,200 டன் (TPD) பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
  • மொத்த நகராட்சி திடக்கழிவு உற்பத்தி 55-65 மில்லியன் டன் என்றும் அதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் ஏறக்குறைய 5-6 சதவிகிதம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • 2021ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக, மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை கொண்டு வந்தது, அதில் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றை குறித்து. 
  • அதன்படி, ஜனவரி 1, 2022 முதல் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டது. அதில் இருந்து பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் தெர்மோகால் ஆகியவை தயார் செய்யப்பட்டது.
  • 2020-21ல், நெடுஞ்சாலைகள் கட்டுமான வேகம் ஒரு நாளைக்கு 36.5 கிமீ என்ற கணக்கில் அதிகரித்துள்ளது என்றார்.மேலும் இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 2.5 கிமீ நான்கு வழி கான்கிரீட் சாலை மற்றும் வெறும் 21 மணி நேரத்தில் 26 கிமீ ஒற்றை வழி பிட்யூமன் சாலையையும் உருவாக்கி உலக சாதனை படைத்தது.
  • மேலும் இதில் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக, IRC தரநிலைகள் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) விவரக்குறிப்புகளின்படி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இதுவரை பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி 11 மாநிலங்களில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இது இரு மடங்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஒரு கி.மீ., சாலை அமைக்க, 9 டன், 'தார்' மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 1 டன் தாரின் கொள்முதல் விலையான, 30 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுகிறது. 
  • முதல் முறையாக, 2018ல், ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • Nowadays the use of plastic materials has become an inevitable one. But it is harmful to the land because it does not rot easily. And burning plastic waste causes countless problems. Thus the recycling of plastics has now increased.
  • The use of plastic waste in road construction protects the environment from the impact of harmful plastics. According to the Central Pollution Control Board (CPCB), India used 3.3 million metric tonnes of plastic waste, or about 9,200 tonnes (TPD) of plastic waste per day, in 2018-19.
  • Total municipal solid waste production is 55-65 million tonnes, of which plastic waste alone accounts for about 5-6 per cent. In order to regulate the use of plastics by 2021, the Federal Ministry of Environment, Forests and Climate Change introduced the Plastic Waste Management Rules on production, import, storage, distribution and sale.
  • Accordingly, plastic waste has been recycled since January 1, 2022. From it were made plastic sticks for balloons, candy sticks, ice cream sticks, plastic flags and thermocol.
  • In 2020-21, the speed of construction of highways has increased to 36.5 km per day.
  • In addition, construction work is carried out in accordance with IRC standards and the Ministry of Road Transport and Highways (MoRTH) specifications to ensure quality control.
  • So far roads have been laid in 11 states using plastic waste. In the current financial year, it is reported to have doubled. One km, to build the road, 9 tons, 'tar' and 1 ton of plastic waste is used. With this, the purchase price of 1 ton of tar, 30 thousand rupees is saved.
  • For the first time, in 2018, Haryana's Gurugram Corporation used plastic waste to build roads.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel