- 'கடந்த ஜனவரி.,3 ம் தேதி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களில் தமிழ் வழியில் பயின்றதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- வரும் 5ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ள அதற்கான படிவத்தில், 16 ம் தேதி முதல் செப்., 16 ம் தேதி வரையில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்
- பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பு சான்றிதழ்
- மேல்நிலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு சான்றிதழ்
- பட்டப் படிப்பு சான்றிதழ்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு முதல் நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
- இவை தவிர தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த தகவல்களை 5 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.