சிறு வணிகர், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடியில் திட்டம் - கேரள மாநில அரசு அறிவிப்பு
- கேரளாவில் சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடி நிதி உதவித் திட்டத்தை வகுத்துள்ளதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார்.
- இத்திட்டத்தின்படி சிறு வணிகர்கள் மற்றும் விவசாயி களுக்கு வட்டி மானியத்தில் கடன்கள் வழங்கப்படும். அதிக பட்சம் ரூ. 2 லட்சம் வரையில் கடன் கிடைக்கும். இதற்கு முதல் ஆறு மாதங்களுக்கு 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.
- இது தவிர கடன் தள்ளுபடி, குறைந்த வட்டி சலுகையில் கடன் உள்ளிட்ட திட்டங்களையும் மாநில அரசு அறிவித்துள்ளது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் கடைகள் வைத்துள்ள சிறு, குறு வர்த்தகர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு வாடகை தள்ளுபடி செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதேபோல சிறு, குறு, நுண் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கட்டிட வரி விலக்கு ஜூலை முதல் டிசம்பர் 31 வரை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் வணிக இணையதளம் - முதல்வர் துவக்கிவைப்பு
- கிரெடாய் ரியல் எஸ்டேட் புதிய இணையதளங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்தியாவின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான அமைப்பின் ஓர் அங்கமான இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு (கிரெடாய்), சார்பில் 2 இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்ஸ் அப் செயலியோடு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகை இணையதளம் ஆகும். வாடிக்கையாளரையும், கிரெடாய் விற்பனையாளர்களையும் தொடர்பில் இணைக்கும்.
- மற்றொரு இணையதளத்தை பொருத்தவரை, வீடு வாங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே இணையதளமாக இது அமையும் வழக்கறிஞர்கள், டிசைன், வடிவமைப்பாளர்கள், டீலர்கள் என அனைவரது தொடர்புகளையும் இதில் காணலாம்.
3000 மீட்டர் ஸ்டீப்புள்சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் சேபிள்
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தடகள போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார்.
- தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார்.
- எனினும் தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் அவினாஷ் சேபிள் 7வது இடத்தை பிடித்தார். ஹீட்ஸ் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.
- இருப்பினும் அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
- தன்னுடைய தேசிய சாதனையை உடைத்த பெருமையுடன் அவினாஷ் சேபிள் இந்தப் பிரிவு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். அவினாஷ் வெளியேறினாலும் அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள யூஜினில் நடைபெறும் 2022 உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார்.
- நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களின் ஒட்டுமொத்த நலநன வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஏதுவாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் 24 மணி நேர உதவி எண்ணை (7827170170) மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி 5 இரானி தொடக்கி வைத்தார்.