Type Here to Get Search Results !

'தோலவிரா' நகரத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் / UNESCO RECOGNIZES TOLAVIRA

TAMIL
  • யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கமிட்டியின் கூட்டம் சீனாவின் பூஜோவ் நகரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் இடங்கள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. 
  • தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தோலாவீரா நகரை உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
  • குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த நகரமான தோலவிராவுக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 
  • சீனாவின் புஜோவில் நடைபெறும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44 வது அமர்வின் போது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் தெலுங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் மற்றும் குஜராத்தை சேர்ந்த தோலவிரா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. 
  • இரண்டு புதிய தளங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதால், இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
  • 'பழங்கால நகரமான தோலவிரா தெற்காசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க நகர நாகரீகங்களில் ஒன்றாகும், இது கிமு 3 முதல் 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் ஐந்து பெரிய ஹரப்பா நாகரீக தளங்களில் ஒன்றாகும், மேலும் இந்தியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.
  • 1968 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தளம் அதன் தனித்துவமான பண்புகளான நீர் மேலாண்மை அமைப்பு, பல அடுக்கு தற்காப்பு வழிமுறை கட்டுமானங்கள், கட்டுமானத்தில் கல்லின் விரிவான பயன்பாடு மற்றும் சிறப்பு கட்டமைப்புகள் போன்றவற்றால் கவனம் ஈர்க்கிறது. 
  • மேலும் செம்பு, கிளிஞ்சல்கள், கல், விலைமதிப்பற்ற கற்களின் நகைகள், டெரகோட்டா, தங்கம், தந்தங்கள் போன்ற பல்வேறு வகையான கலைப்பொருட்களும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ENGLISH
  • The meeting of the UNESCO World Heritage Site Selection Committee is taking place in Puzhou, China. This meeting examines the places that are newly added to the list.
  • The Rampa Temple in Warangal, Telangana has recently been inscribed on the World Heritage List by the UNESCO World Heritage Site of Tolaveera, a symbol of the Indus Valley Civilization in the Kutch District of Gujarat.
  • Dolavira, a city in the Harappan civilization of Gujarat, is a UNESCO World Heritage Site. The Kakatiya Rudreshwara (Ramappa) Temple in Telangana and the Tolavira in Gujarat have been added to the list of UNESCO World Heritage Sites during the 44th session of the UNESCO World Heritage Committee in Pujo, China.
  • With the addition of two new sites, the number of World Heritage Sites in India has increased to 40. 'The ancient city of Tolavira is one of the most significant urban civilizations in South Asia, one of the five largest Harappan civilization sites in the Indus Valley Civilization from the 3rd to the 2nd century BC, and one of the most important archaeological sites in India.
  • Discovered in 1968, the site attracts attention with its unique properties such as water management system, multi-layer defensive construction, extensive use of stone in construction and special structures.
  • Also found in this place are various types of artefacts such as copper, clasps, stone, jewelry of precious stones, terracotta, gold and ivory.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel