தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திவால் நடைமுறை சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அவர் பேசும்போது, "பயறு வகைகளுக்கான அடிப்படை சுங்க வரி10 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
- இதன்பிறகு மக்களவை கூடியதும் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா, விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவின் மூலம் தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப் படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம், ஹரியாணா மாநிலம், குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
- இந்த இரு நிறுவனங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். புதுமை யான தொழிற்படிப்புகளை அறிமுகம் செய்ய அதிகாரம் வழங்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நிறுவனங்கள் (திருத்த) மசோதாவும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக மாநில முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா
- உட்கட்சி பூசல் காரணமாக பாஜ மேலிட தலைவர்களின் உத்தரவுக்கு பணிந்து கர்நாடக மாநில முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அளித்தார்.
- நான்கு முறை முதல்வராக இருந்தும் ஒருமுறை கூட எடியூரப்பாவால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியவில்லை. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்தது.
தஞ்சை கீழ் அலங்கம் பகுதியில் கோட்டை அகழியில் நீர்த்தூம்பி கண்டுபிடிப்பு
- தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அகழி தூர்வாரும் பணியின் போது, அப்பகுதியில் அரண்மனையிலிருந்து அகழிக்கு நீர்வரக்கூடிய, நீர்த்தூம்பி கண்டுபிடிக்கப்பட்டது.
- தஞ்சாவூர் நகரத்தில் கீழ, மேல, தெற்கு, வடக்கு அலங்கம் பகுதிகளில், மன்னர்களால் வெட்டப்பட்ட அகழி நீரால் சூழப்பட்டு, அரண்மனைக்கு பாதுகாப்பு கோட்டை அரணாக இருந்துள்ளது.
- இந்த அகழியில் ஒரு பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில், மேல, வடக்கு, கீழ அலங்கம் பகுதிகளில் ஓரளவுக்கு அகழியாக இருந்து வருகிறது.
- இந்த அகழியின் உட்புறச்சுவர்கள் பழமையான கட்டுமானங்கள் காணப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அகழியை மேம்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகழி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில் கொடிமரத்து மூலையை ஒட்டிய பகுதியில் அகழியின் கோட்டை கரை சுவர்கள் செம்புறாங்கற்கள் கொண்டு வலிமையாக கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுருங்கை சிறு வழியாக அமைந்த நீர்த்தூம்பினை ஆய்வில் கண்டறியப்பட்டது.
- இவை அரண்மனை உள்புறங்களிலும் விழும் மழைநீரும், அங்குள்ள குளங்கள், கிணறுகளில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் அகழியில் சென்று சேருவதற்கான நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்நீர்வழி தூம்பியாகும்.
- நான்கு புறமும் செம்புறாங்கற்கள் கொண்டு சதுரவடிவில் முக்காலடி அளவில் இந்த நீர்வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.