Type Here to Get Search Results !

டிஜிட்டல், வர்த்தக வசதி குறித்த ஐ.நா. ஆய்வு / UN Study on Digital and Commercial Facilities

 

TAMIL
  • டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆய்வு நடத்தியது. உலகளாவிய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்-ஐ பெற்றுள்ளது.
  • கடந்த 2019ம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 143 நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021ம் ஆண்டு கணக்கெடுப்பில் கீழ்கண்ட 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளது.
  • வெளிப்படைத்தன்மை: 2021ம் ஆண்டில் 100 சதவீதம் ( 2019ம் ஆண்டில் 93.33 சதவீதம்)
  • முறைகள்: 2021ம் ஆண்டில் 95.83 சதவீதம் (2019ம் ஆண்டில் 87.5 சதவீதம்)
  • நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு: 2021ம் ஆண்டில் 88.89 சதவீதம் ( 2019-ல் 66.67 சதவீதம்)
  • காகிதமில்லா வர்த்தகம்: 2021ம் ஆண்டில் 96.3 சதவீதம் (2019ம் ஆண்டில் 81.48 சதவீதம்)
  • நாடுகள் தாண்டிய வர்த்தகம்: 2021-ல் 66.67 சதவீதம் ( 2019-ல் 55.56 சதவீதம்).
  • தெற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய நாடுகள்(63.12 சதவீதம்) மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள்(63.12 சதவீதம்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பதை கணக்கெடுப்பு காட்டுகிறது. 
  • இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(OECD) உறுப்பினராக உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது.
  • ஒட்டு மொத்த மதிப்பெண், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சராசரியைவிட அதிகமாக உள்ளது. வெளிப்படைத்தன்மை விஷயத்தில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வர்த்தகத்தில் பெண்கள் என்ற பிரிவில் 66 சதவீத மதிப்பெண்-ஐ இந்தியா பெற்றுள்ளது.
  • விரைவு சுங்க நடவடிக்கையின் கீழ், முகமில்லா, காகிதம் இல்லா, தொடர்பில்லா சுங்க நடவடிக்கைகள் போன்ற புதுமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்ததில் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(CBIC) முன்னணியில் உள்ளது. 
  • இதன் நேரடி தாக்கம், டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஐ.நா.வின் மதிப்பில் பிரதிபலித்துள்ளது.
ENGLISH
  • UN Convention on Asia and the Pacific on Digital and Sustainable Trade Facilities Conducted by the Economic and Social Commission (UNESCAP). India scored 90.32 percent in the global survey.
  • This is up from 78.49 per cent in 2019. After assessing the economies of 143 countries, India's progress in the 2021 census is significant in the following 5 key areas.
  • Transparency: 100 percent by 2021 (93.33 percent by 2019)
  • Methods: 95.83 percent in 2021 (87.5 percent in 2019)
  • Organizational Organization and Cooperation: 88.89 percent in 2021 (66.67 percent in 2019)
  • Paperless trade: 96.3 percent in 2021 (81.48 percent in 2019)
  • Trade beyond countries: 66.67 per cent in 2021 (55.56 per cent in 2019).
  • The survey shows that India is performing well compared to South and Southwest countries (63.12 per cent) and Asia Pacific countries (63.12 per cent).
  • India's overall score is higher than that of France, the United Kingdom, Canada, Norway and Finland, which are members of the Organization for Economic Co-operation and Development (OECD).
  • The overall score is higher than the EU average. India scored 100 percent in terms of transparency. India has a score of 66 per cent in the category of women in trade.
  • The Board of Indirect Taxes and Customs (CBIC) is at the forefront of bringing in innovative reforms such as faceless, paperless, contactless customs measures under the Rapid Customs Act. Its direct impact is reflected in the UN's value on digital and sustainable trade.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel