- ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும்.
- இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
- பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது.
- இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது.
- உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
- ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
- 20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
- குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில.
- பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன.
- 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.
- பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது.
- இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார்.
- ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன.
- 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.
- ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது.
- முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது.
- இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும்.
- போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது.
- ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன.
- கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
- ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
- அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது.
ஒலிம்பிக்சு நடந்த இடங்கள்
வருடம் | இடம் | ஆண்டு | இடம் |
1896 | ஏதென்ஸ், கிரேக்கம் | 1900 | பாரிஸ், பிரான்சு |
1904 | செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா | 1908 | இலண்டன், இங்கிலாந்து |
1912 | ஸ்டாக்ஹோம், சுவீடன் | 1920 | ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் |
1924 | பாரிஸ், பிரான்சு | 1928 | ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து |
1932 | லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா | 1936 | பெர்லின், ஜெர்மனி |
1948 | லண்டன், இங்கிலாந்து | 1952 | ஹெல்சின்கி, பின்லாந்து |
1956 | மெல்போர்ன், ஆஸ்திரேலியா | 1960 | ரோம், இத்தாலி |
1964 | டோக்கியோ, ஜப்பான் | 1968 | மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ |
1972 | ம்யூனிச், ஜெர்மனி | 1976 | மாண்ட்ரீல், கனடா |
1980 | மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் | 1984 | லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
1988 | சியோல், தென் கொரியா | 1992 | பார்சிலோனா, எசுப்பானியா |
1996 | அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா | 2000 | சிட்னி, ஆஸ்திரேலியா |
2004 | ஏதென்ஸ், கிரேக்கம் | 2008 | பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு |
2012 | இலண்டன், ஐக்கிய இராச்சியம் | 2016 | ரியோ டி ஜனேரோ, பிரேசில் |
ENGLISH
- The modern Olympic Games or Olympics (French: Jeux olympiques) are leading international sporting events featuring summer and winter sports competitions in which thousands of athletes from around the world participate in a variety of competitions.
- The Olympic Games are considered the world's foremost sports competition with more than 200 nations participating. The Olympic Games are normally held every four years, alternating between the Summer and Winter Olympics every two years in the four-year period.
- Their creation was inspired by the ancient Olympic Games (Ancient Greek: Ὀλυμπιακοί Ἀγῶνες), held in Olympia, Greece from the 8th century BC to the 4th century AD.
- Baron Pierre de Coubertin founded the International Olympic Committee (IOC) in 1894, leading to the first modern Games in Athens in 1896. The IOC is the governing body of the Olympic Movement[definition needed], with the Olympic Charter defining its structure and authority.
- The evolution of the Olympic Movement during the 20th and 21st centuries has resulted in several changes to the Olympic Games. Some of these adjustments include the creation of the Winter Olympic Games for snow and ice sports, the Paralympic Games for athletes with disabilities, the Youth Olympic Games for athletes aged 14 to 18, the five Continental games (Pan American, African, Asian, European, and Pacific), and the World Games for sports that are not contested in the Olympic Games.
- The IOC also endorses the Deaflympics and the Special Olympics. The IOC has needed to adapt to a variety of economic, political, and technological advancements. The abuse of amateur rules by the Eastern Bloc nations prompted the IOC to shift away from pure amateurism, as envisioned by Coubertin, to the acceptance of professional athletes participating at the Games.
- The growing importance of mass media has created the issue of corporate sponsorship and general commercialisation of the Games. World wars led to the cancellation of the 1916, 1940, and 1944 Olympics; large-scale boycotts during the Cold War limited participation in the 1980 and 1984 Olympics and the 2020 Olympics were postponed until 2021 as a result of the COVID-19 pandemic.
- The Olympic Movement consists of international sports federations (IFs), National Olympic Committees (NOCs), and organising committees for each specific Olympic Games. As the decision-making body, the IOC is responsible for choosing the host city for each Games, and organises and funds the Games according to the Olympic Charter.
- The IOC also determines the Olympic programme, consisting of the sports to be contested at the Games. There are several Olympic rituals and symbols, such as the Olympic flag and torch, as well as the opening and closing ceremonies. Over 14,000 athletes competed at the 2016 Summer Olympics and 2018 Winter Olympics combined, in 35 different sports and over 400 events.
- The first, second, and third-place finishers in each event receive Olympic medals: gold, silver, and bronze, respectively. The Games have grown so much that nearly every nation is now represented.
- This growth has created numerous challenges and controversies, including boycotts, doping, bribery, and a terrorist attack in 1972. Every two years the Olympics and its media exposure provide athletes with the chance to attain national and sometimes international fame. The Games also provide an opportunity for the host city and country to showcase themselves to the world.
Venues for the Olympics
- 1896 - Athens, Greece
- 1900 - Paris, France
- 1904 - St. Louis, USA
- 1908 - London, England
- 1912 - Stockholm, Sweden
- 1920 - Antwerp, Belgium
- 1924 - Paris, France
- 1928 - Amsterdam, Holland
- 1932 - Los Angeles, USA
- 1936 - Berlin, Germany
- 1948 - London, England
- 1952 - Helsinki, Finland
- 1956 - Melbourne, Australia
- 1960 - Rome, Italy
- 1964 - Tokyo, Japan
- 1968 - Mexico City, Mexico
- 1972 - Munich, Germany
- 1976 - Montreal, Canada
- 1980 - Moscow, Soviet Union
- 1984 - Los Angeles, USA
- 1988 - Seoul, South Korea
- 1992 - Barcelona, Spain
- 1996 - Atlanta, USA
- 2000 - Sydney, Australia
- 2004 - Athens, Greece
- 2008 - Beijing, People's Republic of China
- 2012 - London, United Kingdom
- 2016 - Rio de Janeiro, Brazil