டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் மேரிகோம், மன்பிரீத் சிங்
- ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்-வீராங்கனைகள், நிர்வாகிகள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏந்திச் செல்லவுள்ளனர். இவர்களுடன் குத்துச்சண்டை வீரர்களான சதிஷ் குமார், ஆஷிஷ் குமார், மணிஷ் கவுஷிக், அமித் பங்கல், வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லீனா போர்ஹொகைன், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
- நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரனதி நாயக், வாள்வித்தை வீராங்கனை பவானி தேவி, பாய்மரப்படகு வீரர்கள் வருண் அஷோக், விஷ்ணு சரவணன், கே.சி.கணபதி, வீராங்கனை நேத்ரா குமணன், டேபிள் டென்னிஸ் வீரர் வீராங்கனைகளான சரத் கமல், சத்யள், மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
- இவர்களுடன் இந்திய ஒலிம்பிக் குழுத் தலைவர் பிரேந்தர் பிரசாத் பைஷ்யா, துணைத் தலைவர் பிரேம் வர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் 6 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொற்கை அகழாய்வு - சங்க காலத்தைச் சேர்ந்த 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு
- தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வு பணி தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது.
- ஒரு குழியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
- தொடர்ந்து அதே குழியில் இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள், வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்லியல் ஆய்வுப்பணிகள் சூடுபிடித்துள்ளது.
ஐ.நா. வரி குழுவில் இந்திய நிதி அமைச்சக அதிகாரி
- 2021-2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. வரி குழு உறுப்பினராக இந்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலா் ரஷ்மி ரஞ்சன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
- அவருடன் சோத்து உலகம் முழுவதிலும் இருந்து வரி துறை வல்லுநா்கள் 25 போ ஐ.நாவின் இந்தத சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனா். வரி விவகாரங்களில் சா்வதேச ஒத்துழைப்பு தொடா்பான பணிகளில் ஐ.நா.வின் வரி குழு ஈடுபடும்.
- உலகமயமாக்கப்பட்ட வா்த்தகம் மற்றும் முதலீடுகளின் யதாா்த்த நிலைக்கு ஏற்றவாறு வலுவான மற்றும் முன்னோக்கிப் பாா்க்கும் வரிக் கொள்கைகளை உருவாக்கும் நாடுகளின் முயற்சிகளுக்கு இந்த குழு வழிகாட்டும்.
லடாக்கில் மத்திய பல்கலை அமைச்சரவை ஒப்புதல்
- ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக 2019ல் பிரிக்கப்பட்டது.
- லடாக்கில் புதிய மத்திய பல்கலை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு எஃகு உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ.6,322 கோடி ஒப்புதல்
- நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டுத்தொடர் தற்போது நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் நடந்துள்ளது.
- சிறப்பு எஃகு இரும்பு தொழில்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.6,322 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்தியா பல்வேறு வகையான எஃகு வகைகளை உற்பத்தி செய்கிறது. ஆனால் சிறப்பு எஃகு விஷயத்தில் பின்னால் இருக்கிறோம். சிறப்பு எஃகு தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.
- உலகின் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. ஆனால் சிறப்பு எஃகு விஷயத்தில் இறக்குமதி செய்கிறோம்
- இறக்குமதியைக் குறைப்பதற்காக உள்நாட்டு மட்டத்தில் திறனை அதிகரிக்க ரூ. 6322 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டில் புதியதாக 5.25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
பல்நோக்கு கடல்பாசி பயன்பாட்டு பூங்கா திட்டம்
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் மீன்வள வளர்ச்சி திட்டத்தின்” (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY)) கீழ் பல்நோக்கு கடல்பாசி பயன்பாட்டு பூங்காவுக்கான திட்டம் (Multipurpose Seaweed Park) நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மீன்வள வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2020-21-ஆம் ஆண்டில் கடல்பாசி வளர்ச்சிக்காக ரூ.24.77 கோடி தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியில் மட்டுமே கடல்பாசி உற்பத்தி உள்ளது.
- ரசாயன உரங்கள் இல்லாத கழிவுகளை மக்க வைத்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களைக் கொண்ட இயற்கை வேளாண்மைக்கு (ஆர்கானிக்) மாநில அரசுகள், அரசு நிறுவனங்களுக்கு 100 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.