திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி 'டிரிகா' அறிமுகம்
- திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய ரக துப்பாக்கியை தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.
- இந்த புதிய ரக டிரிகா துப்பாக்கி 3.1 கிலோ எடை கொண்டது. 7.62X39 மில்லி மீட்டர் சிறிய ரக துப்பாக்கியாகும். இது ராணுவ போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பாராசூட் வீரர்கள், காவலர்கள், விமான நிலையம் போன்ற உயர் பாதுகாப்பு மிகுந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படைகளுக்கு பெரிதும் உதவும் வகையில் மிகுந்த சக்திவாய்ந்த தனிநபர் தானியங்கி துப்பாக்கியாகும்.
- டிரிகா துப்பாக்கி சுடும் போது ஏற்படும் ஒளியை மறைத்து, சப்தத்தை குறைத்து, மற்ற துப்பாக்கிகளை விட அதிக தூரத்துக்கு சுடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே.47 துப்பாக்கிகளைப் போன்று டிரிகாவின் பாகங்களை கழற்றி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
- இந்த ரக துப்பாக்கியை பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது சட்டையிலே மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு மிகச் சிறிய அமைப்பைக் கொண்டது. இந்த ரக துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., ஒதுக்கீடு இந்தாண்டே அமல்
- மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், அனைத்து இந்திய ஒதுக்கீடு எனப்படும் மத்திய தொகுப்பில், ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கும், 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப் பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே இவை அமலுக்கு வருகின்றன.
இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக அதிமுக எம்பி ரவீந்தர நாத் குமார் நியமனம்
- மத்திய அரசு சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செம்மஞ்சேரியில் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் வளாகங்கள் உள்ளன. இந்த பல்கலைகழகத்தில் கடல்சார் போக்குவரத்துத் துறை பற்றிய கல்வித்திட்டங்களை வகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் எம்பி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் திமுக எம்பி தயாநிதி மாறனும் இப்பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.