Type Here to Get Search Results !

முத்துலட்சுமி ரெட்டி / MUTHULAKSHMI REDDY

 

TAMIL
 • இந்தியாவில் முதல் பெண் மருத்துவரும் தேவதாசி முறையை ஒழித்தவருமான சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டியின் 135 ஆவது பிறந்த தினம் இன்று. 
பிறப்பு
 • முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30 1886)ஆம் ஆண்டு ஜூலை 30 1886 தமிழ்நாட்டில் அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். 
 • அக்காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனங்களும் கோலோச்சியிருந்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற சம்பிரதாயங்களும் மூடப் பழக்க வழக்கங்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது.
 • பெண்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.இந்த அவலங்களையெல்லாம் துடைப்பதற்காகவே பல தடைகளை தாண்டி கல்வி கற்றார்.
படிப்பு
 • முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தனது நான்காவது வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். 
 • இவரது விருப்பத்தை தெரிந்துகொண்ட அவரது தந்தை அவருக்கு ஊக்கமளித்து வந்தார். அப்போதைய காலகட்டங்களில் வெளியூரில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. 
 • உள்ளூர் கல்லூரிகளிலும் பெண்களை சேர்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது. இத்தகைய சூழலில்தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள மன்னர் கல்லூரியில் சேர்வதற்கு 04.02.1904 அன்று விண்ணப்பித்திருந்தார்.
 • சமஸ்தான ஆட்சியில் இருந்த சில அதிகாரிகள், பழமைவாதிகள் இதனை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அப்போதைய மன்னர் "மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை அவருக்கு இருந்தமையால் எதிர்ப்புகளை யெல்லாம் பொருட்படுத்தாமல் முத்துலட்சுமி ரெட்டியை கல்லூரியில் பயில அனுமதி அளித்தார். 
 • கல்லூரிப் படிப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிறிது காலம் அவருக்கு உடல்நலம் தடைபட்டது. உடல்நலம் பாதித்த மையால் கல்வி கற்க முடியாத சூழலும் ஆகிப்போனது. இதுபோக அவரது தாய் சந்திரமாள் அவரும் நோயால் சிரமப்பட்டு இறந்து போனார். 
 • அவர் தாயின் இழப்பையும் நோயின் கொடுமைகளையும் பார்த்து அனுபவித்துத் தெரிந்து கொண்டமையால் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் உதித்தது.
 • பின்பு 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்தார். இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவராக சிறப்பாகப் படித்து 1912 ஆம் ஆண்டு பட்டத்துடன் வெளியே வந்தார். 
 • மருத்துவம் படித்து முடித்த முத்துலட்சுமி ரெட்டி 1914 ஆம் ஆண்டு சுந்தர ரெட்டி என்பவரை எந்த ஒரு சடங்கும் ,சம்பிரதாயமும் இன்றி திருமணம் செய்து கொண்டார். 
 • திருமணத்தின்போது முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தன்னை சமமாக நடத்த வேண்டும் மற்றும் எனது சொந்த விருப்பங்களில் தலையிடக்கடாது என பல்வேறு நிபந்தனைகளுடனேயே கணவர் சுந்தர் ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன்கள் உள்ளனர்.
முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர்
 • அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் சட்டசபை துணை தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 
 • இப்பொறுப்புகளில் எல்லாம் இருந்தபோதுதான் பல சமூக புரட்சிகளை செய்தார். அதில் ஒன்றுதான் தேவதாசி முறை ஒழிப்பு பற்றி இவர் சட்டமன்றத்தில் பேசும்போது அங்கிருந்த பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர்.
 • உடனடியாக இவர் பெரியாரிடம் சென்று ஆலோசனைகளை கேட்டு சட்டமன்றத்தில் பேசினார். இவரின் முயற்சியாலேயே தேவதாசி ஒழிப்பு முறை முடிவுக்கு வந்தது.
முத்துலட்சுமி ரெட்டி செய்த புரட்சிகள் மற்றும் சமூக பணிகள்
 • சென்னையில் புற்று நோய் பாதித்தவர்களுக்கென மருத்துவ மனை ஒன்றினை கட்டினார். இதனை அன்றைய பிரதமர் நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
 • பெற்றோர்கள் இன்றி தவித்த ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு உதவிக்கரம் ஈட்டுவதற்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லம் ஒன்றை தொடங்கினார்.
 • தேவதாசி ஒழிப்பு முறை, இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண ஒழிப்பு முறை சட்டம், என இந்த சட்டங்களை யெல்லாம் நிறைவேற்ற அவர் பாடுபட்டிருக்கிறார்.
மறைவு
 • இப்படித் தன் வாழ்நாளெல்லாம் சமூகத்தில் நிலவிவந்த மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து பல்வேறு தடைகற்ளைத் தாண்டி கல்வி கற்று முதல் பெண் மருத்துவர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மன்ற துணை தலைவர் என்று சமூகத்திற்காக வாழ்ந்த சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி மறைந்தார் (Muthulakshmi Reddy Died). 
 • இவரின் சேவையினைப் பாராட்டி அரசு இவருக்கு 1956 இல் பத்ம விபூஷன் (Padma Bhushan) என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.
ENGLISH
 • Today is the 135th birthday of social activist Muthulakshmi Reddy, India's first female doctor and abolitionist of the Devadasi system.
Birth
 • Muthulakshmi Reddy (July 30, 1886) was born on July 30, 1886, in the then Pudukottai principality in Tamil Nadu, the daughter of Narayanasamy and Chandrammal.
 • Superstitions and feminism were rampant at the time. It was a time when the oven and the rituals and closing customs of what the study was for women were at its peak.
 • Education for women was octagonal.
Study
 • Muthulakshmi Reddy started her boarding school at the age of four and successfully completed her schooling. He wanted to study in college with his hand after finishing school.
 • His father, who knew his wishes, encouraged him. There were no accommodation facilities for women in the colleges which may have been abroad during those periods.
 • Came from the restriction that women should not be admitted to local colleges either. It was in this context that he applied to join King's College in Pudukkottai on 04.02.1904.
 • This was vehemently opposed by some of the ruling elites and conservatives. But the then king "Marthanda Bhairav ​​Thondaiman had a progressive idea that women should be educated and allowed Muthulakshmi Reddy to study in college despite all the opposition.
 • Following his success in college, his health deteriorated for some time. It also became an uneducated environment due to ill health. Meanwhile, his mother Chandrammal also fell ill and died. As he watched and experienced the loss of his mother and the horrors of the disease, his zeal to become a doctor arose.
 • Then in 1907 he joined the Chennai Medical College and studied medicine. She was the first female doctor in India to study well and came out with a degree in 1912. Muthulakshmi Reddy, a medical graduate, married Sundara Reddy in 1914 without any formality.
 • During the marriage Muthulakshmi Reddy married her husband Sundar Reddy with various conditions that they should treat her equally and not interfere in my own preferences. They have sons.
First female legislator
 • She was the first woman legislator elected to the then Chennai Provincial Assembly and the first woman mayor of the Chennai Corporation to hold various responsibilities as the first president of the Indian Women's Association and vice-president of the assembly.
 • He made many social revolutions when all of these responsibilities were there. One of them was that when he spoke in the assembly about the abolition of the goddess system, most of the people there opposed it.
 • He immediately went to Periyar and asked for advice and addressed the assembly. It was through his efforts that the abolition of the goddess came to an end.
Revolutions and social work by Muthulakshmi Reddy
 • He built a hospital for cancer patients in Chennai. This was started by the then Prime Minister Nehru. He started a home in Adyar, Chennai to raise orphans and help them.
 • He has worked to enforce all these laws, such as the Devadasi Abolition Act, the Bisexual Prohibition Act, the Women's Property Giving Act, and the Child Marriage Abolition Act.
Demise
 • Dr. Muthulakshmi Reddy Died (Muthulakshmi Reddy Died) died on July 22, 1968. She was the first woman doctor, deputy mayor, legislator and deputy leader of the legislature who lived her whole life to overcome the barriers of closure.
 • In recognition of his service, the government honored him with the Padma Bhushan in 1956.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel