உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் 30 மாற்றுத் திறனாளிகள் - இந்தியாவின் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தேர்வு
- அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு (ஏடிஏ) இப்போது வயது 31. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் உலகளாவிய நிறுவனமான டைவர்சபிலிட்டி (DIVERSABILITY), உலகளாவிய அளவில், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், 2001ம் ஆண்டுக்கான, 30 மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- 13 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பரிசீலிக்கப்பட்டு 30 பேர் தேர்வாகியுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தாஸ்குப்தா ஒருவராகும்.
DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கிகளில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் வைப்பு காப்பீட்டு தொகையான ரூ. 5 லட்சத்தை, 90 நாட்களில் திரும்ப கிடைக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
- நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக வைப்பு காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் காப்பீடு வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்றும், இதன் மூலம், 98.3 சதவீத முதலீட்டாளர்கள் பயன்பெறுவார்கள்
எஸ்.சி.ஓ., மாநாடு
- ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமை, பயங்கரவாதம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க, எஸ்.சி.ஓ., அமைப்பை சேர்ந்த நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, துஷான்பேவில் நடக்கிறது.
- மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடக்கும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
- ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
நலிவுற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க குழு அமைப்பு
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் தொழில்துறை முன்னாள் செயலருமான ந.சுந்தரதேவன் தலைமையில் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
- இக்குழுவில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும், மாநில வளர்ச்சிகொள்கைக் குழுவின் பகுதிநேர உறுப்பினருமான எம்.விஜயபாஸ்கர், இந்திய ரிசர்வ் வங்கியின் சிறு, நடுத்தர நிறுவன நிதி உள்ளிட்ட குழுக்களின் முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த், இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆம்பியர் மின்சார வாகன நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமலதா அண்ணாமலை, இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) தலைவர் அன்புராஜன், பட்டயக் கணக்காளர்ஆனந்த் ஆகிய 7 பேரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி பெறவும், ஏற்றுமதியை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளையும் இக்குழு வழங்கும். தேவையான உள்கட்டமைப்பு, வணிகம் புரிவதை எளிமையாக்குதல், மனித ஆற்றல் தொடர்பாகவும் இக்குழு ஆய்வு செய்யும்.
- மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
தகைசால் தமிழர் விருதுக்கு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு
- தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், விருது மற்றும் பரிசுத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதுக்குரியவர்களை அடையாளம் காண்பதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.
- தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கையடக்க சிபியூ உருவாக்கிய 9ஆம் வகுப்பு மாணவருக்கு முதல்வர் பாராட்டு
- திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் எஸ்எஸ் மாதவ். இவர் கடந்த சில மாதங்களாக தீவிரமாக முயன்று கையடக்க சிபியூ உருவாக்கி அவரை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்
- இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த மாணவரையும் அவருடைய பெற்றோரையும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்
- மாதவ் தான் கண்டுபிடித்த சிபிஐயின் டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
வியாழன் துணைக்கோளில் நீராவி - நாசா கண்டுபிடிப்பு
- வியாழனின் துணைக்கோளான கேனிமீட் சந்திரனில் நீர் ஆவியாதலை ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
- வளிமண்டலத்தில் இருக்கும் கோள்களில் வியாழனின் துணைக்கோளான கேனிமீட் (Ganymede) மிகப்பெரியது. இந்த துணைக்கோளில் பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், பூமியில் இருக்கும் பெருங்கடல்களின் நீரை விட அதிகமான நீர் கேனிமீட் துணைக்கோளில் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர்.
- மேற்பரப்பில் திடமான பனிக்கட்டிகளாக இருக்கும் நீர், சுமார் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் திரவ நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பான்மையான பகுதிகள் பனிக்கட்டிகளாக இருப்பதால், ஆவியாதல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கருதிய நிலையில், தற்போது கேனிமீட் துணைக்கோளில் உள்ள நீர் ஆவியாவதை உறுதி செய்துள்ளனர்.
மக்களின் வீடுகளை தேடி வரும் மருந்து, மாத்திரைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- அந்த வகையில், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
- குறிப்பாக தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு, சர்க்கரை நோய், சிறுநீரக புற்றுநோய், காச நோய், சிறுநீரக சிகிச்சை, முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ளது.