வியாழன் கோளின் நிலவில் ஆய்வு - ஸ்பேஸ் எக்ஸுடன் நாசா ஒப்பந்தம்
- வியாழன் கோளின் 80 நிலவுகளில் ஒன்றான யூரோப்பாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அந்த நாட்டின் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- உயிரினங்கள் வசிப்பதற்கு யூரேப்பா ஏற்ா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அந்த நிலவுக்கு ஆய்வுக் கலனை வரும் 2024 செலுத்துவதற்கான இந்தத் திட்டத்தில், ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன் கனரக ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது.
- 23 அடுக்குகளைக் கொண்ட, ஓரளவு மீண்டும் பயன்படுத்தத்தக்க ஃபால்கன்தான் உலகில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.
இந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் - இந்தியா வழங்கல்
- இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கொரோனா நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை சென்றடைந்தது.
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.
- மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை அளிக்கும் பணிகளிலும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளியை தட்டினார்
- மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம் (26) நேற்று பங்கேற்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச் முறையில் 87 கிலோவும், கிளீன் அன்டு ஜெர்க் முறையில் 115 கிலோவும் தூக்கினார்.
- மொத்தம் 202 கிலோ தூக்கி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்தார். அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். சீனாவின் ஹு ஜிஹுய் மொத்தமாக 219 கிலோ தூக்கி தங்கம் வென்றார். கூடவே ஸ்நாச் முறையில் 94 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
- இந்தோனேஷியாவின் ஐசா காண்டிகா 194 கிலோ தூக்கி வெண்கலத்தை கைப்பற்றினார். மீராபாயின் வெற்றியின் மூலம், இந்தியா முதல் பதக்கத்தை வென்றதுடன் பதக்கப்பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.
- சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு-தனியார் பங்களிப்புடன் (Public Private Partnership (PPP) "பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள்” (Multi-Modal Logistics Parks (MMLP)) அமைக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
- பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5,35,000 கோடி செலவில் 10,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சி திட்ட சாலைகளுடன் கூடுதலாக 24,800 கி.மீ. தொலைவிற்கு சாலைகளை அமைக்கும் பாரத்மாலா முதல் கட்ட திட்டத்துக்கு "பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு' (Cabinet Committee on Economic Affairs (CCEA)) கடந்த 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
- "தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்” கீழ் தமிழகத்தில் உள்ள அடையாறு, கூவம், தாமிரவருணி உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்க ரூ.908.13 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் விஸ்வேஷ்வர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுக்க 256 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் 2019-ல் ஜல் சக்தி அபியான் என்கிற மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் 2021 மார்ச் மாதம் "மழையை பிடி" பிரசாரத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.