ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள அரசு ஒப்பந்தங்களை பெறுகிற புதிய தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் - தமிழக அரசு அறிவிப்பு
- தமிழகத்தில் புதிதாக தொழில்தொ டங்கும் நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் முன்னுரிமை அளித்தால், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- இதை பரிசீலித்த தமிழக அரசு,ரூ.20 லட்சத்துக்கு குறைவான ஒப்பந்தங்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் அளிக்க முடிவெடுத்துள்ளது.
- அதன்படி, ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கட்டணம், முன்வைப்புத் தொகை, முந்தைய விற்றுமுதலை காட்டுவது, முந்தைய தொழில் அனுபவம் ஆகியவற்றில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது.
- அரசுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், உள்ளாட்சிகள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உருவாக்கிய சங்கங்கள் ஆகியவற்றில் இருந்து அந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் பெறலாம்.
- இந்த நிறுவனங்கள் டான்சிம் அல்லது தொழில் மற்றும் உள்ளூர் வர்த்தக ஊக்குவித்தல் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்த புதியதொழில் நிறுவனமாக, தமிழகத்தில் பதிவு செய்த நிறுவனமாக இருக்க வேண்டும்.
தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு
- 41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டால் 5.88 லட்சம் கூடுதல் டோஸ்கள் எடுக்க முடிந்தது. மேற்கு வங்கம் 4.87 லட்சமும், குஜராத் 4.62 லட்சம் கூடுதல் டோஸ்களையும் செலுத்தியுள்ளன.
- பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதி.
- கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கான ரூ.35,000 கோடி பட்ஜெட்டில், தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ. 8071 கோடி மற்றும் செயல்பாட்டு செலவு என இதுவரை ரூ.9725.15 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- 2021 டிசம்பர் வரை 100.6 கோடி டோஸ்கள் வழங்குவதற்கு ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 2021 டிசம்பருக்குள் தடுப்பூசி போட எதிர்பார்க்கிறோம்.
திருவாரூர் பல்கலைக் கழகம் உட்பட 12 ஒன்றிய பல்கலை.களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு
- நாடு முழுவதும் செயல்படும் ஒன்றிய பல்கலைக் கழகங்களில் 22 துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றில் 12 பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
- தெற்கு பீகாரில் கயா ஒன்றிய பல்கலைக் கழகம், மணிப்பூர், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகம், வடகிழக்கு மாநில பல்கலைக் கழகம், குரு காசிதாஸ் பல்கலைக் கழகம், பிலாஸ்பூர் ஒன்றிய பல்கலைக் கழகங்களுக்கும் புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாடு திருவாரூரில் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகத்துக்கு முத்துகலிங்கன் கிருஷ்ணன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா-தன்கேஸ்வர் குமார், இமாச்சல்-பிரகாஷ் பன்சால், ஜம்மு - சஞ்சீவ் ஜெயின், ஜார்கண்ட்- கிஷிடிஜ் பூஷன் தாஸ், கர்நாடகா- பட்டு சத்யநாராயணா, ஐதராபாத்-பசுத்கார் ஜே ராவ் ஆகியோர் துணை வேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
12 முதல் 17 வயது உள்ள சிறார்களுக்கு செலுத்தலாம் - மாடர்னாவின் தடுப்பூசிக்கு ஐரோப்பா ஒப்புதல்
- 12 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தில் பயன்படுத்தப்படும் இளம் பருவத்தினருக்கான இரண்டாவது தடுப்பூசியாக அமைந்துள்ளது.
- "12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளில் ஸ்பைகேவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்துவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்பட்டது போலவே இருக்கும்" என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (இஎம்ஏ), மாடர்னாவின் பிராண்ட் பெயரைப் (ஸ்பைகேவாக்ஸ் ) பயன்படுத்தி கூறியது.
முதலாம் பராந்தகன் காலத்து கல்வெட்டு!
- பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழன் கி.பி.907 முதல் கி.பி.958 வரை ஆட்சி செய்தவன். அவனுடைய 35வது ஆட்சி ஆண்டிலேயே இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இந்தக் கல்வெட்டு, 942 வது ஆண்டைச் சேர்ந்தது என அறியமுடிகிறது
- 'மதுரையைக் கொண்ட கோப்பரகேசரி' எனும் முதலாம் பராந்தகச் சோழனின் மெய்க் கீர்த்தி வருகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியை சிற்றரசன் குமரன் என்பவர் ஆட்சி புரிந்துள்ளார்.
- தற்போது இந்த ஊர் ராமசமுத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டு உள்ள இடத்திலிருந்து சுமார் 1 கி.மீட்டருக்கு உள்ளாகவே பெரிய ஏரி ஒன்று உள்ளது.
- சமுத்திரம் என்ற சொல்லும் பெரிய நீர் பரப்பை குறிப்பதாகும். இந்தச் சொல் விஜயநகரபேரரசு ஆட்சி காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெய் கீர்த்தியைத் தொடர்ந்து 'வரி' பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
- 'காடி' என்ற சொல்லை தஞ்சைப் பகுதியில் பயன்படுத்துவார்கள். தொண்டை மண்டலமான நம் பகுதிகளில் 'கலம்' என்பார்கள். ஒரு கலம் நெல் விளைந்தால்... ஒரு நாழி நெல் எனும் வீதத்தில் ஏரியின் பராமரிப்புக்காக வரி செலுத்தவேண்டும்.
- அதாவது சுமார் 96 படி நெல் விளைந்தால் ஒரு படி நெல்லை வரியாக ஏரி பராமரிப்புக்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவோரின் பாதத்தை என் தலைமேல் வைத்து வழிபடுவேன் என்றும்; இந்த தர்மத்தைப் பின்பற்றாதவர்கள், கங்கை முதல் குமரிக்கு இடைப்பட்ட மக்கள் அனைவரும் செய்த பாவத்திற்கு போவார்கள் என்றும் அந்த சிற்றரசனால் எழுதப்பட்ட கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது"
இந்தியாவுக்கு 2030-ல்தான் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியம் - டிபிஎஸ் கணிப்பு
- 2025-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறவேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், 2030-ம் ஆண்டில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என டிபிஎஸ் கணித்திருக்கிறது. 2030-ம் ஆண்டில்தான் இந்த இலக்கை இந்தியா எட்டுவது சாத்தியமாகும் என தெரிவித்திருக்கிறது.
- பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 2030-ம் ஆண்டு வரையில் டாலர் அடிப்படையிலான ஜிடிபி தொடர்ந்து ஏழு சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு ரூபாய் மதிப்பு சீராக இருக்க வேண்டும்.
- பணவீக்கம் மூன்று சதவிதம் என்னும் அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வளர்ச்சி (Real Growth) 4 சதவீத அளவிலாவது இருக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவை சாத்தியமானால் மட்டுமே 5 ட்ரில்லியன் டாலர் என்பது 2030-ல் சாத்தியம்.