டேங்கர்களை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
- ஜம்மு காஷ்மீரின் இந்திய விமானப்படை தளத்தின் மீது சமீபத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
- அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ டேங்கர்களுக்கு எதிரான சிறிய வகை ஏவுகணை தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
- இந்த சிறிய வகை ஏவுகணையானது எதிரியின் ராணுவ டேங்கர்களை துல்லியமாக தாக்கும் வல்லமைகொண்டது. மேலும் இது குறைந்த எடை கொண்டது என்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கவல்ல ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி
- தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய நியூ ஜெனரேஷன் ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.
- இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன் வலிமையை அதிகரிக்கும் விதத்தில் ஆகாஷ்-என்ஜி-யின் செயல்பாடுகள் இருக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற உற்பத்தி முகமைகளும் சோதனையில் பங்கேற்றன.
நாட்டிலேயே முதல் மாநிலம் - திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய கர்நாடக அரசு
- இந்தியாவிலேயே முதல் மாநிலமாகக் கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- அதாவது கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அனைத்து அரசு வேலைகளிலும் பொதுப் பிரிவிலும் சரி, இதர பிரிவுகளில் சரி திருநங்கைகளுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதன்படி அரசு வேலை தொடர்பான விண்ணப்பங்களில் ஆண், பெண் பிரிவுகளுடன் 'மற்றவர்கள்' என்ற பிரிவும் சேர்க்கப்பட வேண்டும்.
- அதேபோல வேலைக்குத் தேர்வு செய்யும் முறையில் திருநங்கைகளுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருநங்கைகள் யாரும் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அதே பிரிவில் இருக்கும் ஆண் அல்லது பெண்களுக்கு வழங்கப்படலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கீழடி அருகே முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
- இதுவரை கீழடியில் மட்டும்தான் இரட்டைச்சுவர், செங்கல் கட்டுமானம், கால்வாய் போன்றவை, அகரத்தில் உறைகிணறுகள் கண்டறியப்பட்டன.
- தற்போது அகரத்தில் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் கிடைத்த செங்கல் நீளம், அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் அகரத்தில் செங்கற்கள் சதுர வடிவில் உள்ளன.
- இவை கீழடியில் பயன்படுத்திய செங்கற்களுக்கு அடுத்த காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என தெரிகிறது. மூன்று வரிசையாக செங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து கட்டிடம் கட்டியுள்ளனர்.
- பிடிமானத்திற்காக வழுவழுப்பான களிமண் பயன்படுத்தியுள்ளனர். அருகிலேயே சிதைந்த நிலையில் சில செங்கற்கள் குவியலாக கிடைத்துள்ளன. அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- இதில் உறைகிணறு கண்டறியப்பட்ட குழிக்கு அருகிலேயே செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. உறைகிணறு கண்டறியப்பட்ட குழியிலும் ஒரு சுவர் தென்பட்ட நிலையில் இரண்டும் சேர்ந்து கட்டிட வடிவில் இருக்க வாய்ப்புள்ளது.
ஒலியை விட இருமடங்கு வேகம் - ரஷ்யாவின் புதிய போர் விமானம்
- ஒலியை விட இரு மடங்கு வேகமாக பயணிக்க கூடிய அதிநவீன புதிய போர் விமானத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக ரஷ்யா தனது அதிநவீன போர்விமானத்தை உலகின் முன் அறிமுகப்படுத்தியுள்ளது.
- சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானமான இதற்கு செக்மேட் என பெயரிடப்பட்டுள்ளது.
- குறைந்த எடைக் கொண்ட இந்த விமானம் அனைத்து தட்பவெட்ப நிலைகளிலும் ஆற்றலுடன் பயணித்து சண்டையிட வல்லது என கூறப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு முதலாக இந்த விமான ரஷ்ய விமானப்படையில் இடம்பெறும்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக் - ஐஓசி
- 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த ஐஓசி நிர்வாகக் குழு கடந்த ஜூனில் முன்மொழிந்தது. டோக்கியோவில் நடைபெறும் ஐஓசி 138-வது அமர்வில் இதுதொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில், ஐஓசியின் 138-வது அமர்வு டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்றது. ஐஓசி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கான வாக்கெடுப்பு முடிவுகளை ஐஓசி வெளியிட்டுள்ளது. அதன்படி, 80 வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
- அதில் 77 வாக்குகள் பதிவாகின. 3-இல் வாக்குகள் பதிவாகவில்லை. இதனால், 39 வாக்குகள் பெரும்பான்மையாகக் கருதப்பட்ட நிலையில், 2032 ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த 72 பேர் 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர். 5 பேர் மட்டுமே 'இல்லை' என்று பதிலளித்துள்ளனர்.
- பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையில் வனேடியம், இரும்பு, அலுமினியம் ஆகியவை டைட்டா னியத்துடன் கலக்கப்படுகின்றன. இந்த உலோகக் கலவையானது குறைந்த எடையுடையதாக உள்ளது. அதே வேளையில், அதிக வலிமை கொண்டுள்ளதாகவும் கலவை திகழ்கிறது.
- டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இந்த உலோகக் கலவையைப் பயன்படுத்தி, போர் விமானங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படும் கருவிகளைத் தயாரிக்க முடியும். இந்த உலோகக் கலவை மூலம் கருவிகளைத் தயாரிப்பதன் வாயிலாக, போர் விமானங்கள் உள்ளிட்டவற்றின் எடை 40 சதவீதம் வரை வெகுவாகக் குறையும்.
- நிக்கல், குரோமியம், மாலிப்டினம் ஆகியவற்றை எஃகுடன் கலந்து தற்போது கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எஃகு மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகள் சீக்கிரமாக அரிக்கப்பட்டு விடுகின்றன. பீட்டா டைட்டானியம் உலோகக் கலவை மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகளின் அரிப்புத்தன்மை எஃகை விடக் குறைவாகவே உள்ளது.
- நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (FATF-Financial Action Task Force) நடத்தவிருந்த ஆய்வு 2022-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை பாரீஸை சேர்ந்த FATF அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல நாடுகளில் அந்த அமைப்பு ஆய்வுகளை நடத்தி, அதற்கேற்ப நாடுகளை வகைப்படுத்தி வருகிறது.
- தற்போதைய நிலவரப்படி, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகளை FATF அமைப்பு கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. Chakra IAS academy பாகிஸ்தான், மியான்மர், பிலிப்பின்ஸ், சிரியா, உகாண்டா, ஏமன், மோரீஷியஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் “கிரே” பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் வைக்கப்படும் நாடுகளால் சர்வதேச நிதியம் (IMF), உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து நிதியுதவியைப் பெற முடியாது.
- FATF அமைப்பு இந்தியாவில் கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு விவகாரங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதையுடன் அதிகாரிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் பலர் மரியாதை செலுத்தினர்.
- இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. இந்த போர் தான் வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.