நியூஸ் ஆன் ஏர்' செயலி தரவரிசை - கொடைக்கானல் அகில இந்திய வானொலி முன்னேற்றம்
- நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நேரலை ஒலிபரப்பு கள் பிரபலமாக உள்ள இந்திய நகரங்களின் தரவரிசையில் சென்னையை பின்தள்ளி ஹைதராபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
- புணே, பெங்களூரு ஆகியவை தொடர்ந்து நான்காவது வாரமாக முறையே 1 மற்றும் 2-ஆம் இடம் வகிக்கின்றன. ஜெய்ப்பூர் 8-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், போபால்9-ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது.
- அகில இந்திய வானொலியின் தரவரிசையில் மிகப்பெரும் மாற்றமாக கொடைக்கானல் வானொலி, 10ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ரெயின்போ கன்னடா காமன்பிலு, 4-ஆவது இடத்திலும், புணே வானொலி, 5-ஆவது இடத்திலும் உள்ளன.
- பிரசார் பாரதியின் அதிகார பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர் - இல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேர லையாக ஒலிபரப்பப்படுகின்றன.
- தங்க நகைகளின் தரத்தை நிர்ணயிக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் முதல் கட்டத் திட்டத்தில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 24 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
- கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS-Bureau of Indian Standards) 2000, ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கி வருகிறது.
- ஆண்டுதோறும் 700-800 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்வதாக உலக தங்க கவுன்சில் (World Gold Council) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்திய ஜவுளித் தொழில் பருத்தியை அடிப்படையாகக் கொண்டது. நாட்டின் 80 சதவீத ஜவுளி ஏற்றுமதிக்கு மூல ஆதாரமாக இருப்பது பருத்தி.
- உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் மிக நீண்ட இழை ரக பருத்தி கிடைக்காதது, அதிக மாசுடைய பருத்தி கிடைப்பது போன்றவை இந்திய ஜவுளித் தொழிலுக்கு மிகவும் சவாலாக உள்ளன.
- இந்த நிலையில் மத்திய அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீத "இறக்குமதி வரி”, 5 சதவீத "வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி” என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் ரயில் நிலையம், நீர்வாழ் உயிரின அருங்காட்சியகம் உட்பட ரூ.1,100 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர் மோடி
- குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்கனவே இருந்த ரயில் நிலையம் ரூ.71 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அந்தரயில் நிலையத்தின் மேற்பகுதியில் 5 நட்சத்திர விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் உள்ளரயில் நிலையம் நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட் டுள்ளன. இதேபோல, அம்மாநிலத் தின் சுரேந்திரநகர் - பிபாரவ், மகேசனா - வரேதா ஆகிய வழித்தடங்களும் முற்றிலும் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
- அகமதாபாத்தில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தில் புதிதாக நீர்வாழ் உயிரினக் காட்சியகம், ரோபோடிக் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
- இவற்றை டெல்லியில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதுதவிர, 2 புதிய ரயில்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- அவற்றில் ஒன்று, குஜராத்தின் காந்தி நகரில் இருந்து உத்தரபிரதேசத்தின் வாரணாசி வரை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். மற்றொன்று, காந்தி நகரையும், குஜராத்தின் வரேதா கிராமத்தையும் இணைக்கும் மின்சார ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியாணா மாநிலத்தில் நாட்டின் முதல் உணவு தானிய ஏடிஎம்
- நாட்டிலேயே முதன்முறையாக உணவு தானியங்களை வழங்கும் தானியங்கி ஏடிஎம் இயந்திரத்தை ஹரியாணா மாநில அரசு குருகிராமில் நிறுவியுள்ளது.
- நியாய விலை கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும், சரியான அளவில் உணவு தானியங்கள் வழங்கவும் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஹரியாணா அரசு முன்னெடுத்துள்ளது.
- இந்த தானியங்கி உணவு தானிய விநியோக இயந்திரம் அமைக்கும் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் 'உலகளாவிய உணவு திட்டத்தின்' கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- முதற்கட்ட சோதனை முயற்சியாக குருகிராமில் உள்ள ஃபாருக்நகர் நியாய விலைக் கடையில் 'அன்னபூர்த்தி' என்ற தானியங்கி உணவு தானிய ஏடிஎம் இயந் திரத்தை நிறுவியுள்ளது.
- இந்த உணவு தானிய ஏடிஎம் இயந்திரமானது 5-7 நிமிடங்களில் 70 கிலோ வரையிலான தானியங்களை வழங்கக்கூடியதாக உள்ளது
ஜஸ்ட் டயல் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ்
- ரிலையன்ஸ் இன்டஸ்டிரீசின் ரிலையன்ஸ் ரீடைல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம், ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் உள்ள 40.95 சதவீத பங்குகளை ₹3,497 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
- மேலும், ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் மேலும் 1.17 கோடி பங்குகளை, அதாவது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- எனினும், தற்போது ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள விஎஸ்எஸ் மணி, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என செபியிடம் சமர்ப்பித்துள்ள விவர அறிக்கையில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
தினசரி தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த '4-டி'யை பின்பற்றுங்கள் - 6 மாநிலங்களுக்கு மோடி அறிவுரை
- தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் மோடி பேசியதாவது:
- கொரோனா தொற்று 3வது அலை எழக்கூடும் என்ற கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் நாம் தற்போது இருந்து வருகிறோம். நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 80 சதவீதம் தொற்று பாதிப்பு உங்கள் 6 மாநிலங்களில்தான் உள்ளது.
- இதேபோன்ற ஒரு சூழலை கொரோனா 2வது அலைக்கு முன்னதாக கடந்த ஜனவரியில் சந்தித்தோம். எனவே, கவனமாக இருப்பது அவசியம். 3வது அலை எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு தினசரி அதிக தொற்று உள்ள மாநிலங்கள் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோதனை செய்தல், பின்தொடர்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல் ஆகிய '4 டி' நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 3வது அலையை எதிர்கொள்ள, ஒன்றிய அரசு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- மருத்துவ உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த, மாநிலங்கள் இதில் இருந்து நிதியுதவியை பெறலாம். கொரோனா தொற்று பாதிப்பு சில இடங்களில் குறைந்து இருந்தாலும் கூட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.