TAMIL
- மத்திய மின்துறை, 22 மாநிலங்களில் உள்ள 41 பொதுத்துறை மின் வினியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, மின் வினியோகம், மின் கொள்முதல் போன்ற செயல்பாடுகளை ஆராய்ந்து, 'ஏ பிளஸ், ஏ, பி, பி பிளஸ், சி பிளஸ், சி' ஆகிய, 'கிரேடு'டன் கூடிய தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
- தற்போது, 2019 - 20ம் நிதியாண்டிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மின் வாரியம், 'சி கிரேடு' உடன், 40வது இடம் பிடித்துள்ளது.
- அந்த பட்டியலில், குஜராத்தை சேர்ந்த நான்கு மின் வினியோக நிறுவனங்கள், 'ஏ பிளஸ் கிரேடு' உடன் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
- கேரள மின் வாரியம், 14வது இடத்திலும்; ஆந்திராவில் ஒரு மின் வினியோக நிறுவனம், 19வது இடத்திலும்; மற்றொரு நிறுவனம், 34வது இடத்திலும் உள்ளன.
- தமிழக மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் உள்ளதுடன், 2020 மார்ச் நிலவரப்படி, 1.08 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது.
- அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததாலும், மொத்த வருவாய் தேவை அறிக்கையை குறித்த காலத்தில், ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்காததாலும், இந்த பின்னடைவை சந்தித்துள்ளது.
- The Central Electricity Board (CEB) publishes a ranking list of 41 public sector power distribution companies in 22 states with 'A Plus, A, B, B Plus, C Plus, C' grades, examining their financial status, power distribution and power procurement.
- Currently, it has released the ranking list for the financial year 2019-20. The Tamil Nadu Electricity Board, with 'C grade', is ranked 40th. In that list, four power distribution companies from Gujarat are in the top four with 'A plus grade'.
- Kerala Electricity Board, 14th; A power distribution company in Andhra Pradesh, ranked 19th; Another company, ranked 34th. The Tamil Nadu Electricity Board is in dire financial straits and is in debt of Rs 1.08 lakh crore as on March 2020.
- This setback was due to the purchase of electricity at high prices and the failure to submit the Gross Revenue Requirement Report to the Regulatory Authority in a timely manner.