டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் - கிறிஸ் கெய்ல் புதிய சாதனை
- டி20 கிரிக்கெட்டில், உலகின் சிறந்த வீரராக கருதப்படும் கிறிஸ் கெய்ல், ரசிகர்களால் 'யுனிவெர்சல் பாஸ்' என்று அழைக்கப்படுகிறார்.
- இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸின் கரீபீயன் ப்ரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டிராபி உள்ளிட்ட பல்வேறு டி20 தொடர்களில் கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார்.
- இதுவரை 431 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தெலங்கானாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது கிடெக்ஸ்
- உலகிலேயே குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பில் 2-வது இடம் வகிப்பது கிடெக்ஸ் கார்மென்ட்ஸ். இந்நிறுவனத்தின் நிறுவனராக சாபு ஜேக்கப் உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் ரூ.3,500 கோடி முதலீடுசெய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த முடிவை அவர் கைவிட்டுள்ளார். மாறாக பிற மாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
- இந்நிலையில், கிடெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சாபு ஜேக்கப் தலைமையிலான குழுஹைதராபாத்துக்குச் சென்று மாநில தொழில் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
- முதல் கட்டமாக இந்நிறுவனம் வாரங்கலில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப் போவதாகஅறிவித்துள்ளது. இதன்மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவராக நீதிபதி ஆர்.சுப்பையா பொறுப்பேற்பு
- மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பொறுப் பேற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி ஆர்.சுப்பையா கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
நேபாள பிரதமராக ஷேர் பகதூர் நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
- நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பாவை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரையின்பேரில், 2வது முறையாக நாடாளுமன்ற கீழவையை மே 22ம் தேதி அதிபர் பித்யா தேவி பண்டாரி கலைத்து உத்தரவிட்டார். நவம்பர் 12 மற்றும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஐசிசியின் ஜூன் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் டேவான் கான்வே தேர்வு
- முதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வானார்கள். இந்நிலையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- மகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளும் இங்கிலாந்தின் சோஃபியும் இடம்பெற்றார்கள். ஆடவர் பிரிவில் நியூசிலாந்தின் கான்வே, ஜேமிசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி காக் ஆகியோர் இடம்பெற்றார்கள்.
- இந்நிலையில் ஆடவர் பிரிவில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரராக நியூசிலாந்தின் கான்வேயும், மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் சோஃபியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றார் சமீர் பானர்ஜி
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆடவருக்கான ஜூனியர் பிரிவில் அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பானர்ஜி சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் லிலோவை எதிர்த்து சமீர் களமிறங்கினார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் சமீர் பானர்ஜி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினார்.
பிஎம்சி வங்கியை கையகப்படுத்தி 'ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்' அமைக்க ஒப்புதல்
- பிஎம்சி வங்கி தொடா்பான வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.என்பாட்டீல், ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
- சென்ட்ரம் ஃபைனான்ஸ் சா்வீசஸ் நிறுவனம் 'ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்' அமைக்கவும், அது பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை கையகப்படுத்தவும் முதல்கட்ட ஒப்புதல் ரிசா்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.
- பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வரும் சூழலில் ரிசா்வ் வங்கியின் இந்த திட்டம் அவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தாா்.
நாடு முழுவதும் 1,500 புதிய ஆக்சிஜன் ஆலைகள்
- பிஎம் கேர்ஸ் நிதியம், பொது நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் ஆலைகள் (பிஎஸ்ஏ தொழில்நுட்ப ஆக்சிஜன் ஆலைகள்-PSA Pressure Swing Adsorption)) Oxygen Plants under PM CARES) நிறுவப்படவுள்ளன.
- இதன்மூலம் நாட்டில் 4 லட்சம் மருத்துவப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்படும். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- ஒரு பயிற்சி மாதிரியைக் கொண்டு நாடு முழுவதும் 8,000 பேருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய அளவில் ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டைக் கண்காணிக்க, "ஐஓடி" (IoT-Internet of Things) என்கிற மேம்பட்ட இணையதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் உள்ளனர்.
ஸ்பெல்லிங் பீ போட்டி ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி சாதனை
- அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்பெல்லிங் பீ" (Scripps National Spelling Bee competition 2021) போட்டி, 93-வது ஆண்டாக போட்டி ஃபுளோரிடா நடைபெற்றது.
- இந்தப் போட்டியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது அமெரிக்கச் ஸாய்லா அவன்த்-கார்டே (Zaila Avant-garde) முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.
- 93 ஆண்டுகளாக நடைபெறும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். மேலும், லூசியானாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் போட்டியை வெல்வதும் இது முதல்முறையாகும்.
- ஸ்பெல்லிங் பீ போட்டியில் இதுவரை கருப்பினத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். ஜூடி அன்னி மேக்ஸ்வெல் (Jody-Ame Maxwell) என்ற அவர், ஜமைக்கா சார்பில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்றார்.
நேபாளத்தில் 679 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டம் - இந்தியா நேபாளம் ஒப்பந்தம்
- நேபாளத்தில் 679 மெகாவாட் லோயர் அருண் நீர்மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் (எஸ்ஜேவிஎன்) மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள நேபாள முதலீட்டு வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன் சர்வதேச ஏலத்தில் இதர அண்டை நாடுகளின் நிறுவனங்களை வீழ்த்தி எஸ்ஜேவிஎன் நிறுவனம் இந்தத் திட்டத்தை வென்றுள்ளது.
- நேபாள நாட்டின் துணை பிரதமர் பிஷ்ணு பிரசாத் பாடல் மற்றும் இந்திய தூதர் வினய் மோகன் க்வாத்ரா ஆகியோர் முன்னிலையில் எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் நந்த் லால் ஷர்மா மற்றும் நேபாள முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசில் பட்டா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- லோயர் அருண் நீர்மின் உற்பத்தித் திட்டம், நேபாளத்தின் சங்குவசபா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் நீர் தேக்கம் அல்லது அணைகள் அமைக்கப்படாது. 4 ஃபிரான்சிஸ் வகை சுழலிகளை இந்தத் திட்டம் கொண்டிருக்கும்.
- இத்திட்டம் நிறைவடைந்த பிறகு ஆண்டிற்கு 2970 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கட்டுமான பணிகள் தொடங்கியது முதல் 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கட்டுமானம் உரிமை இயக்கம் மாற்ற அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு இத்திட்டம் எஸ்ஜேவிஎன் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான 2016.51 மெகாவாட்டை 2023-ம் ஆண்டில் 5000 மெகாவாட்டாகவும், 2030-ஆம் ஆண்டில் 12,000 மெகாவாட்டாகவும், 2040-ஆம் ஆண்டில் 25,000 மெகாவாட்டாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய மின் சக்தி மற்றும் அனல் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தியின் உற்பத்தியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.